சுகாதாரமான¸ கலப்பிடமில்லாத காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்து திருவண்ணாமலை உழவர் சந்தை சாதனை படைத்துள்ளது.
இதற்கு காரணமான உணவு பாதுகாப்பு துறைக்கு அதிகாரிகள் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சுகாதார பழம் மற்றும் காய்கறி சந்தை எனும் திட்டம் இந்திய உணவு பாதுகாப்பு ஆணையரகத்தால் தொடங்கப்பட்டுள்ளது. ஒழுங்கமைப்படாத காய்கறிகள் மற்றும் பழங்களை வணிகர்கள் சுகாதரமான பாதுகாப்பான உணவு வணிகம் செய்து அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்படுவதற்கும்¸ பாதுகாப்பான கலப்படம் இல்லாத காய்கறிகள் மற்றும் பழங்களை பெற்று பொதுமக்களுக்கு பயன்பெறுவதற்கும் இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மூலம் திருவண்ணாமலை உழவர் சந்தையில் வேளாண்மை துறையின் ஒத்துழைப்போடு திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அனைத்து காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது. தொற்று நோய் இல்லா மருத்துவச் சான்று பெறப்பட்டும்¸ மேலும் அங்கு வரும் காய்கறிகளை உணவு மாதிரிகள் எடுத்தும் அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட அளவுகோலுக்குள் உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் பயன்படுத்தப்பட்டுள்ளளது உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக திருவண்ணாமலை உழவர் சந்தையில் பாதுகாப்பான¸ சுகதரமான மற்றும் கலப்படமில்லாத காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருவண்ணாமலை உழவர் சந்தைக்கு இந்திய அளவில் இரண்டாவதாகவும்¸ தமிழ்நாட்டிலேயே முதலாவதாகவும் திருவண்ணாமலை மாவட்டதிற்கு கிளின் அண்ட் பிரஸ் புருட் மற்றும் வெஜிடபிள் மார்க்கெட் என்ற சான்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழை திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் எ.வ.வேலுவிடம்¸ மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன்¸ உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில் சிக்கையராஜா¸ கைலேஷ்குமார்¸ சிவபாலன்¸ சேகர்¸ சுப்பிரமணி ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.