Homeஅரசு அறிவிப்புகள்தங்குமிடம்¸ சத்தான உணவுடன் விளையாட்டு பயிற்சி

தங்குமிடம்¸ சத்தான உணவுடன் விளையாட்டு பயிற்சி

தங்குமிடம்¸ சத்தான உணவுடன் விளையாட்டு பயிற்சி

திருவண்ணாமலையில் உள்ள மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதியில் சேர 22ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். 

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸ 

தங்குமிடம்¸ சத்தான உணவுடன் விளையாட்டு பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு  பயிற்சி தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி மதுரை¸ திருச்சி¸ திருநெல்வேலி¸ கிருஷ்ணகிரி ¸ கோயம்புத்தூர்¸ கடலூர்¸ தஞ்சாவூர்¸ அரியலூர்¸ தூத்துக்குடி¸ சிவகங்கை¸ தேனி¸ இராமநாகபுரம்¸ உதகமண்டலம்¸ விழுப்புரம்¸ சென்னை¸ நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. 

தங்குமிடம்¸ சத்தான உணவுடன் விளையாட்டு பயிற்சி

மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதி ஈரோடு¸ திருவண்ணாமலை¸ நாமக்கல்¸ திண்டுக்கல்¸நாகர்கோவில்¸ பெரம்பலூர்¸ தேனி¸ புதுக்கோட்டை¸ தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவியர்களுக்கு  தடகளம்¸ இறகுப்பந்து¸ கூடைப்பந்து¸ குத்துச்சண்டை¸ கால்பந்து¸ வாள்சண்டை¸ ஜிம்னாஸ்டிக்¸ கைப்பந்து¸ வளைகோல்பந்து¸ நீச்சல்¸ டேக்வாண்டோ¸ கையுந்துப்பந்து¸ பளுதூக்குதல்¸ கபாடி¸ டென்னிஸ்¸ ஜீடோ¸ ஸ்குவாஷ் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

விளையாட்டு போட்டிகளில் மாவட்டம்¸ மாநிலம் மற்றும் தேசிய அளவில்  வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

தங்குமிடம்¸ சத்தான உணவுடன் விளையாட்டு பயிற்சி

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ¸ மாணவியர்கள் www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான படிவத்தினை பூர்த்தி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள்: 22.03.2022 மாலை 4.00 மணிக்குள் ஆன்லைனில் சமர்பித்திட  வேண்டும்.  எக்காரணம் கொண்டும்   நேரில் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ஆம் வகுப்பு¸ 8-ஆம் வகுப்பு¸ 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான  திருவண்ணாமலை மாவட்ட அளவிலான தேர்வுகள் வரும் 23.03.2022  அன்று  திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் காலை 8.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு(ம) இளைஞர் நல அலுவலர் திருவண்ணாமலை மாவட்டம் அவர்களை 04175-233169 என்ற தொலைபேசியில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!