Homeசெய்திகள்பத்தியாவரம் பள்ளியில் மாணவர்களின் மர்ம மரணங்கள்

பத்தியாவரம் பள்ளியில் மாணவர்களின் மர்ம மரணங்கள்

பத்தியாவரம் பள்ளியில் மாணவர்களின் மர்ம மரணங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் பத்தியாவரம் பள்ளியில் பல மாணவர்கள் மர்மமான முறையில் இறந்திருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாக இந்து முன்னணி கூறியிருக்கிறது. 

இது சம்மந்தமாக கிறிஸ்துவ பள்ளிகளில் ஆய்வு நடத்தி மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றவும் இந்து முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது. 

திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் வேலூர்¸ புதுச்சேரி¸ சேலம் ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த மாவட்டங்களின் மண்டல பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 600 பேர் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு வேலூர் கோட்டத் தலைவர் கோ. மகேஷ் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் பக்தன்¸ மாநில செயலாளர் மணலி மனோகர்¸ புதுச்சேரி மாநிலத் தலைவர் சனில் குமார்¸ கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாநில பொதுச் செயலாளர் பி. முருகானந்தம் சிறப்புரையாற்றினார். 

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பொதுசிவில் சட்டம் 

நமது நாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்ந்து வருகிறது. நமது அனைத்து குடிமக்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் நோக்கமாகும். நமது நாட்டில் பல்வேறு சாதி¸ சமய¸ வட்டார பழக்க வழக்கங்கள் இருந்த போதும் பெரும்பான்மையான மக்களை கருத்தில்கொண்டு குற்றவியல் சட்டங்கள்¸ அனைவருக்கும் பொதுவானவையாக இயற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதே வேளையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 44-வது பிரிவு¸ இந்திய மக்கள் அனைவருக்கும் பொது சிவில் சட்டத்தை பரிந்துரை செய்கிறது. ஆனால் தற்காலிக ஏற்பாடாக சமய சார்புகளின் அடிப்படையில் தனிநபர் சட்டங்கள் இயற்றப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதால்¸ ஒரே நாட்டில் ஒன்றாக வாழும் இருவேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே மாதிரியான குற்றத்தை செய்யும் போது¸ மத அடிப்படையில் ஒருவர் குற்றவாளி என்றும் மற்றொருவர் நிரபராதி என்றும் இரண்டு வகையான தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு சமசீரான நீதியும்¸ சம உரிமையும் மறுக்கப்பட்டு வருகிறது. 1985 ல் ஷாபானு ஜீவனாம்ச வழக்கு¸ 1995 ல் ஜிஜேந்திரா மாத்தூர் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கதற்காக மதம் மாறிய வழக்கு¸ 2019 ல் ஷாயிராபானுவின் முத்தலாக் வழக்கு மற்றும் பல்வேறு தீர்ப்புரைகளில் மாண்புமிகு நீதிபதிகள்¸ இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பரிவு 44 ல் குறிப்பிட்டுள்ள சிவில் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளனர்.

See also  அதிகாரியை பகைத்துக் கொண்டதால் ஊராட்சியில் பயனற்று கிடக்கும் ரூ.1.50 கோடி

மதசார்பற்ற நாடு என்று அறிவித்துக் கொண்டு பல்வேறு மதங்களுக்கு ஏற்றவாறு சட்டங்களை வகுத்து கொள்வதால் குடியாட்சியின் மாண்புகள் சீர்குலைக்க படுகின்றன. மேலும் நீதியே கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. தற்போது ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் வௌ;வேறு பரிமாணம் எடுத்து வருகின்ற இந்த வேளையில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்ற நிலைப்பாட்டை நிலைநிறுத்த¸ அனைத்து பிரஜைகளுக்கும் சம நீதி¸ சம உரிமை கிடைத்திட மத்திய அரசு பொதுசிவில் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

பத்தியாவரம் பள்ளியில் மாணவர்களின் மர்ம மரணங்கள்

ட்சி பேதமில்லாதவருக்கு அறங்காவலர் பதவி 

உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் அறங்காவலர்களை நியமிக்க இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுபோல் மாவட்ட அறங்காவலர்கள் நியமிக்க நேர்காணல் நடத்தியுள்ளனர். 

நெல்லை மாவட்ட அறங்காவலர் குழு நேர்காணலில் ஆளும்கட்சியினருக்கு மட்டுமே திமுக மாவட்ட செயலளாளர் பரிந்துரை செய்பவர் மட்டுமே¸ அறங்காவலராக நியமிக்கப்படுவர் என நேர்காணல் நடத்திய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது ஆலய சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் செயலாகும்.

எனவே நெல்லை¸ தூத்துக்குடி¸ தென்காசி¸ குமரி மாவட்டங்களில் ஆலயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள்¸ கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்து தர்மத்திற்காக¸ ஆலய பாதுகாப்பிற்காக சமூக பணி செய்பவர்களை கட்சி பேதமின்றி குறிப்பாக ஆளுங்கட்சி தலையீடு இன்றி மாவட்ட திருக்கோவில் அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என இப்பொழுதுக்குழு வலியுறுத்துகிறது. 

பத்தியாவரம் பள்ளியில் மாணவர்களின் மர்ம மரணங்கள்

மாணவர்களின் மர்ம மரணங்கள் 

See also  திருவண்ணாமலை:நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம்¸ சேத்துப்பட்டு ஒன்றியம்¸ பத்தியாவரத்தில் புனிதவளனார் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கே உள்ள தங்கும் விடுதியில் தாய் தந்தை இல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள். இந்நிலையில் இங்கு படிக்கும் மாணவர்களை தொடர்ந்து பல வருடங்களாக பாதிரியார் சகாயராஜ் மற்றும் விடுதி வார்டன் துரைப்பாண்டி ஆகியோர் விடுதியில் உள்ள மாணவர்களை ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தி பாலியில் தொந்தரவுகளை செய்து வந்துள்ளனர். இந்த கொடுமையை தாங்க முடியாதஅந்த மாணவர்கள் சைல்ட் லைன் அமைப்புக்கு தொடர்புகொண்டு புகார் தந்துள்ளனர்.

சைல்ட் லைன் அமைப்பினர்¸ சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். இந்த புகாரால் பாதிரியார் சகாயராஜ் மற்றும் வார்டன் துரைப்பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பத்தியாவரம் பகுதியில் கிறிஸ்துவ நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளியில் மாணவர்களுக்கு அங்குள்ள பாதிரியார் மற்றும் வார்டன்களால் பாலியல் ரீதியாக தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இங்கு பயின்ற ஒரு மாணவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து சாகடிக்கப்பட்ட வழக்கில் இங்குள்ள வார்டன் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறான். இங்கு பயிலும் பல மாணவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல் வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து சிறுபாண்மை நிறுவனங்களில் பாதிக்கப்படும் மாணவர்களைப் பற்றி எந்த அரசாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். 

தமிழக அரசாங்கமும்¸ மாவட்ட நிர்வாகமும் உடனடியாகவே இந்த பகுதியில் உள்ள கிறிஸ்துவ நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து இதுவரை எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இறந்துள்ளனர் என்பதை உடனடியாக ஆய்வுசெய்து இங்குள்ள மாணவர்களை அரசாங்கத்தினால் நடத்தப்படும் வேறு விடுதி மற்றும் பள்ளிகளுக்கு மாற்றி தாய்¸ தந்தை இல்லாத ஆதரவற்ற மாணவர்களின் படிப்பையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க உறுதி அளிக்க வேண்டும்.

பத்தியாவரம் பள்ளியில் மாணவர்களின் மர்ம மரணங்கள்

க்கிரமிப்பை அகற்றி கோயிலுக்கு கும்பாபிஷேகம் 

See also  பூ லாரியில் போதை பொருள்: திருவண்ணாமலை சேர்ந்தவர்கள் கைது -ரூ.12 லட்சத்துடன் வேன்-கார் பறிமுதல்

இராணிப்பேட்டை மாவட்டம்¸ காவேரிப்பாக்கத்தில் சுமார் 2000 வருடம் பழமை வாய்ந்த கொங்கணேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை சுற்றி உள்ள குளத்தை சுற்றிலும், மதில் சுவருக்கு உள்ளேயும் பல வருடங்களாக சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டி உள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு இந்து முன்னணி சார்பில் மனு கொடுத்தும்¸ ஆர்ப்பாட்டம் நடத்தியும் இந்துசமய அறநிலையத்துறை இந்த ஆக்கிரமிப்பை அகற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஆகவே உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி இந்து முன்னணி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கையகப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இதை கடந்த அரசாங்கமும் துளியும் கண்டுகொள்ளவில்லை. தற்பொழுது திமுகவின் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்ட கோயில் நிலத்தை வருட வாடகை வசூல் செய்துகொள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது திருடனுக்கு திருடிய பொருளை கொடுத்து அதற்கான கட்டணம் வசூலிப்பது போல் ஆகும். 

இந்து அறநிலையத்துறை ஆணையரின் இந்த அறிவிப்பு 2000 வருடத்திற்கு பழமைவாய்ந்த கொங்கணேஸ்வரர் கோயில் முற்றிலும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் போக வாய்ப்புள்ளது. தற்போது ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ள இந்த கோயில் மிகவும் பாழடைந்து வழிபாடு இல்லாமல் உள்ளது. தமிழக அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்து ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு உடனடியாக கும்பாபிஷேகம் செய்து பக்தர்களுக்கு வழிபாட்டுக்கு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

முடிவில் திருவண்ணாமலை மாவட்ட பொதுச்செயலாளர் இரா. அருண்குமார் நன்றி கூறினார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!