திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குறைந்த கட்டணத்தில் நீச்சல் கற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
கோடைகால நீச்சல் பயிற்சி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல்குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மாணவ-மாணவியர்கள் மற்றும் பொது மக்களுக்கு நடத்தப்பட உள்ளது.
• 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீச்சல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு நீச்சல் பயிற்சி பெறலாம். மாணவ- மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் உரிய நீச்சல் உடையினை பயன்படுத்திட அறிவுறுத்தபப்படுகிறார்கள்.
• இப்பயிற்சி வகுப்புகள் வேலை நாட்களில் நடத்தப்படும். ரூ.1200 பயிற்சி கட்டணம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சானிடைசரை பயன்படுத்த
வேண்டும்
• நீச்சல் கற்றுக்கொள்பவர்கள் அனைவரும் அடிக்கடி சோப்பு அல்லது 70சதவீதம் ஆல்காஹாலைக் கொண்ட சானிடைசரைப் பயன்படுத்த வேண்டும் .சளி அல்லது இருமல் இருக்கும் பட்சத்தில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
• காய்ச்சல்¸ இருமல்¸ தசை வலி¸தலை வலி¸ அனோஸ்மியா போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் நீச்சல் குளத்தினை பயன்படுத்திட அனுமதி கிடையாது.
• மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குறைந்த கட்டணத்தில் நீச்சல் கற்று பயன் பெறலாம்.
போனில் தொடர்பு கொள்ளலாம்
மேலும் கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு(ம) இளைஞர் நலன் அலுவலரை¸ அலுவலக வேலை நாட்களில் 04175-233169 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.