Homeசெய்திகள்கலெக்டர் அறிவிப்பு: ரயில் நிலையம் சென்ற பக்தர்கள் ஏமாற்றம்

கலெக்டர் அறிவிப்பு: ரயில் நிலையம் சென்ற பக்தர்கள் ஏமாற்றம்

கலெக்டர் அறிவிப்பு: ரயில் நிலையம் சென்ற பக்தர்கள் ஏமாற்றம்

கலெக்டர் அறிவித்தபடி சித்ரா பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு 14  ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர். 

2 வருடத்திற்கு பிறகு

கொரோனா நோய் பரவலை தடுத்திடும் பொருட்டு திருவண்ணாமலை கிரிவலத்திற்கு கடந்த 2 வருடங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா நோய் கட்டுக்குள் வந்ததை அடுத்து கடந்த மாதம் முதல் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த மாதம் சித்ரா பவுர்ணமிக்கு தீபத்திருவிழாவைப் போல் கிரிவலத்திற்கு பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

20 லட்சம் பக்தர்கள்

சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு 15லட்சத்திலிருந்து 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும்¸ அவர்களது வசதிக்காக குடிநீர் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள்¸  15 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்¸ பாதுகாப்புக்கு 3242 போலீசார்¸ சிசிடிவி கேமராக்கள் மற்றும் 39 பைக் மூலம் கண்காணிப்பு¸ 9 ரோடுகளிலும் 42 இடங்களில் இலவச குளியறை¸ 9 தற்காலிக பஸ் நிலையங்கள் போன்றவைகள் செய்து தரப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கலெக்டர் அறிவிப்பு 

14 ரயில்கள் 

முக்கியமாக தமிழகத்தில் பல்வேறு மார்கங்களிலிருந்து 14 ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்¸ பத்திரிகை செய்தியில் தெரிவித்திருந்தார். இதே போல் 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும் கூறியிருந்தார். பிறகு அது 2800ஆக குறைக்கப்பட்டது. 

வாரத்திற்கு 6 ரயில்கள்

விழப்புரத்திலிருந்து¸ திருவண்ணாமலை வழியாக காட்பாடிக்கு தினமும் காலை 6.33 மணிக்கும்¸ காட்பாடியிலிருந்து விழுப்புரத்திற்கு மாலை 6.38க்கும்¸ ராமேஸ்வரத்திலிருந்து¸ திருப்பதிக்கு திங்கள்¸ வெள்ளி¸ சனி ஆகிய 3 நாட்கள் அதிகாலை 4.18க்கும்¸ திருப்பதியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு மாலை 3.58க்கும்¸ மன்னார்குடியிலிருந்து திருப்பதிக்கு திங்கள்¸ புதன்¸ வெள்ளி 3 நாட்கள் காலை 10.48க்கும்¸ விழப்புரத்திலிருந்து கரக்பூருக்கு செவ்வாய்கிழமை பகல் 1 மணிக்கும்¸ விழுப்புரத்திலிருந்து புருலியாவுக்கு புதன்¸ சனிக்கிழமைகளில் பகல் 1 மணிக்கும்¸ பாண்டிச்சேரியிலிருந்து தாதருக்கு ஞாயிறு¸ செவ்வாய்¸ புதன்கிழமைகளில் இரவு 11 மணிக்கும்¸ தாதரிலிருந்து பாண்டிச்சேரிக்கு அதிகாலை 4.18க்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

இதே போல் திருப்பதியிலிருந்து மன்னார்குடிக்கு ஞாயிறு¸ செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 3.58க்கும்¸ கரக்பூரிலிருந்து விழப்புரத்திற்கு மாலை 5.10க்கும்¸ புருலியாவிலிருந்து விழுப்புரத்திற்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 5.10க்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி வாரம் முழுவதும் காட்பாடி வழியாக 6 ரயில்களும்¸ விழப்புரம் வழியாக 6 ரயில்களும் இயக்கப்படுகின்றன. 

கலெக்டர் அறிவிப்பு: ரயில் நிலையம் சென்ற பக்தர்கள் ஏமாற்றம்

கலெக்டர் அறிவிப்பு: ரயில் நிலையம் சென்ற பக்தர்கள் ஏமாற்றம்

கலெக்டர் அறிவிப்பு: ரயில் நிலையம் சென்ற பக்தர்கள் ஏமாற்றம்

ரயில் நிலையத்தில் காத்திருப்பு 

இந்நிலையில் சித்ரா பவுர்ணமிக்கு 14 ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அறிவித்த படி ரயில்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். கிரிவலம் முடிந்து வந்த பக்தர்கள் ரயில் வரும் என ரயில் நிலையத்திலேயே காத்திருந்தனர். பலர் குழந்தைகளுடன் அசதியில் தரையில் படுத்திருந்தனர். 

டிக்கெட் கவுன்டரில் விசாரித்ததில் கூடுதல் ரயில்கள் ஏதும் இயக்கப்படவில்லை என்றும்¸ வழக்கமான ரயில்களில் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறித்தும் தெரியவந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வழக்கமான ரயில்களில் தாதர் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. 

இன்று வந்த புருலியா செல்லும் ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் பயணம் செய்ய முடியும் என்ற நிலையில் காலையிலிருந்து காத்திருந்த பக்தர்கள் பகல் 1-15 மணிக்கு வந்த புருலியா செல்லும் ரயிலில் முண்டியடித்து ஏறினர். 

கலெக்டர் அறிவிப்பு: ரயில் நிலையம் சென்ற பக்தர்கள் ஏமாற்றம்

ஏற்பாடு செய்யப்படவில்லை

இது பற்றி ரயில்வே நிர்வாகத்திடம் விசாரித்ததில் ரயில்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்பதாலும்¸ ரயில்களில் கட்டணம் குறைவு என்பதாலும் ஒரு முறை சித்ரா பவுர்ணமியன்று கூடுதல் ரயில்களை இயக்க அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஏற்பாடுகளை செய்தார். ஆனால் இந்த முறை எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. மாவட்ட நிர்வாகம்¸ தென்னக ரயில்வேவுக்கு கூடுதல் ரயில்களை இயக்க கேட்டிருந்தால் அதுபற்றி பரிசீலிக்கப்பட்டிருக்கும். இந்த சித்ரா பவுர்ணமிக்கு தமிழகத்தில் பல்வேறு மார்கங்களிலிருந்து 14 ரயில்கள் ஏதும் இயக்கப்படவில்லை என்றனர். 

பக்தர்கள் கோரிக்கை

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும்¸ பொதுமக்களும் வந்து செல்கின்றனர். அண்ணாமலையார் கோயில்¸ புகழ் பெற்ற மகான்களின் ஆசிரமங்கள் ஆகியவற்றிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி தினத்திலும்¸ கார்த்திகை தீபத் திருவிழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகின்றனர். 

எனவே இந்த சித்ரா பவுர்ணமிக்கு ஏமாற்றியது போல் இல்லாமல் பவுர்ணமி போன்ற சிறப்பு நாட்களில் ரயில் வசதியை ஏற்படுத்தி தர ஆட்சியாளர்களும்¸ மக்கள் பிரதிநிதிகளும் முன் வர வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. 

See also  லஞ்ச வழக்கில் பெண் தாசில்தார் கைது

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!