Homeஆன்மீகம்பர்வதமலைக்கு செல்லும் படி உடைந்ததாக வதந்தி

பர்வதமலைக்கு செல்லும் படி உடைந்ததாக வதந்தி

பர்வதமலைக்கு செல்லும் படி உடைந்ததாக வதந்தி

திருவண்ணாமலை அடுத்த பர்வதமலைக்கு செல்லும் படி உடைந்ததாக வதந்தி பரவியதன் காரணமாக ஒரே பாதையை பக்தர்கள் பயன்படுத்தினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம்¸ கலசப்பாக்கம் தொகுதி தென்மகாதேவ மங்கலம் என்னும் பர்வதமலையில் மல்லிகார்ஜீனர் என்ற பெயருடன் சிவன் அருள்பாலிக்கிறார். 

பர்வதமலைக்கு செல்லும் படி உடைந்ததாக வதந்தி

நந்திமலை¸ பர்வதமலை

அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து பறந்து சென்றபோது கீழே விழுந்த ஒரு பகுதியே இந்த மலை என்பதால் சஞ்சீவி பருவதமலை என்றும் தென்மகாதேவமங்கலம் அழைக்கப்படுகிறது. இந்த மலையில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோயில் உள்ளது. இம்மலை சுமார் 4560 அடி உயரம் உள்ளது. மலை ஏறி செல்லும்போது மேகங்கள் நம்மீது தவழ்ந்து செல்லும். 700 அடி உயரம் உள்ள செங்குத்தான கடப்பாரை படி¸ ஏணிப்படி¸ ஆகாயப்படி உள்ள அதிசய மலையாகும். இந்த மலையின் உச்சியில் பல நூற்றாண்டுகளை கடந்த பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை உடனமர் மல்கார்ஜுன திருக்கோயில் உள்ளது. இங்கு சிவபெருமான் நந்தியாகவும் லிங்கமாகவும்¸ திரிசூலமாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 

நோய் தீர்க்கும் மல்லிகார்ஜீனர்

இவரை கிரிவலம் வந்து பவுர்ணமி அன்று வழிபட்டால் தீராத நோய்கள் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் திரும்பலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சிவனை வழிபட்டு செல்கின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பர்வதமலை ஏறவும்¸ கிரிவலம் வரவும தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால் இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 4560 அடி உயர மலையை ஏறி சாமி தரிசனம் செய்தனர். 

சிமெண்ட் படி உடைந்ததாக தகவல் 

மலை ஏறுவதற்கென ஒரு படியையும்¸ இறங்குவதற்கென ஒரு படியையும் பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடப்பாறை மற்றும் கம்பியை பிடித்து மலையேற முடியாதவர்களுக்காக போடப்பட்டிருந்த படி ஒன்று  கட்டுக்கடங்காத கூட்டத்தால் உடைந்து விட்டதாக தகவல் பரவியது. இதனால் பக்தர்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனால் சிமெண்ட் படியை பயன்படுத்துவதை தவிர்த்து ஒரே படியை ஆயிரக்கணக்கான பக்தர்களும் பயன்படுத்தியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

பர்வதமலைக்கு செல்லும் படி உடைந்ததாக வதந்தி

பர்வதமலைக்கு செல்லும் படி உடைந்ததாக வதந்தி

பர்வதமலைக்கு செல்லும் படி உடைந்ததாக வதந்தி

இதையடுத்து அதிகாரிகள் மலைக்கு சென்று பார்த்த போது படி உடைந்ததாக பரவிய தகவல் வதந்தி என்பது தெரிய வந்தது. படிகளை ஆய்வு செய்ததில் இரும்பு படி ஒன்றில் போல்ட் ஒன்று விழும் நிலையில் இருந்ததை கண்டுபிடித்து அதை சரி செய்தனர்.  இதையடுத்து கூட்டத்தை ஒழங்கு படுத்திய போலீசார் 2 படிகளையும் பக்தர்கள் பயன்படுத்த செய்தனர். மேலும் தீப்பெட்டி போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என பக்தர்களின் பைகளை சோதனை செய்த பிறகே மலையேற அனுமதித்தனர். மலை மீது பக்தர்களுக்கு குடி தண்ணீரும்¸ உணவும் வழங்கப்பட்டது. 

மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் 26 கீ.மீ தூரம் உள்ள கிரிவலப்பாதையை சுற்றி வந்தனர். 

See also  திருவண்ணாமலை கோயிலில் பசு மாடு இறந்த விவகாரம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!