Homeசெய்திகள்அண்ணாமலையார் ஆசியால் அமைச்சரானேன்-நடிகை ரோஜா

அண்ணாமலையார் ஆசியால் அமைச்சரானேன்-நடிகை ரோஜா

அண்ணாமலையார் ஆசியால் அமைச்சரானேன்-நடிகை ரோஜா

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா  அண்ணாமலையாரின் ஆசியால் அமைச்சர் பதவி கிடைத்ததாக தெரிவித்தார்.

தமிழில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமான நடிகை ரோஜா அப்படத்தின் இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது  ரோஜா ஆந்திராவின் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

சித்ரா பவுர்ணமியான இன்று¸ அமைச்சர் ரோஜா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்தார். விநாயகர்¸ அண்ணாமலையார்¸ அம்மன் சன்னதிகளில் அவர் சாமி தரிசனம் செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது¸

அண்ணாமலையார் ஆசியால் அமைச்சரானேன்-நடிகை ரோஜா

கொரோனா காரணமாக இரண்டு வருடமாக அண்ணாமலையார் கோயிலுக்கு வர முடியாதது வருத்தமாக இருந்தது. இன்று அண்ணாமலையாரை பார்த்து பூஜை செய்து அவரது ஆசீர்வாதத்தை கொண்டு செல்லுகிறேன். அதிரடிப்படை படம் எடுத்தபோது மிகவும் கஷ்டத்தில் இருந்தேன் எனது தலை¸ கால்கள் உடைந்து ஆஸ்பத்திரியில் இருந்தேன். இதனால் படம் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது பணப் பிரச்சனை ஏற்பட்டது. 2002 வரை கஷ்டப்பட்டு கடன்களை அடைத்தேன்.

See also  வீட்டில் மகள் சாவு- காட்டில் காயங்களுடன் தந்தை உடல்

செம்பருத்தி படத்தில் காதல் செய்தேன், எங்கேஜ்மெண்ட்டும் முடிந்து விட்டது. ஆனால் திருமணம் 2002 இல் தான் நடந்தது. எனது மாமனார் எனது திருமணம் விரைவில் நடக்கவும்¸ கஷ்டங்கள் தீரவும் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை வேண்டிக்கொண்டு 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்றார். அண்ணாமலையாரின் ஆசியால் கஷ்டமெல்லாம் தீர்ந்து திருமணமும் நடந்து விட்டது.

அண்ணாமலையார் ஆசியால் அமைச்சரானேன்-நடிகை ரோஜா
அண்ணாமலையார் ஆசியால் அமைச்சரானேன்-நடிகை ரோஜா

தெலுங்கு தேசம் கட்சியில் இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் நின்று தோற்றுவிட்டேன். எனது கட்சிக்குள்ளே என்னை வளர விடாமல் தோற்கடித்து விட்டனர். ஜனங்களுக்கு சேவை செய்ய  என்னை ஜெயிக்க வைக்குமாறு அண்ணாமலையாரிடத்தில் வேண்டினேன். கிரிவலமும் சென்றேன். இதன் காரணமாக சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது முறை நின்ற போது வெற்றி பெற்றேன். இதற்காக மூன்று முறை கிரிவலம் செல்ல வேண்டும்.நானும் மூன்று முறை கிரிவலம் சென்று விட்டேன். அமைச்சராக வரவேண்டுமென அண்ணாமலையாரிடம்  வேண்டினேன். ஆசை நிறைவேறியது.  இதற்காக நன்றிக்கடன் செலுத்த வந்திருக்கிறேன்.

நான் அமைச்சர் ஆனதற்கு ஆந்திராவில் எப்படி வரவேற்பு உள்ளதோ அதேபோல் தமிழ்நாட்டிலும் வரவேற்கின்றனர். அம்மா வீடு(ஆந்திரா)¸மாமியார் வீடு(தமிழ்நாடு) என இரண்டு பேர் ஆசிர்வாதமும் எனக்கு உள்ளது. தங்கைக்கு உரிய மரியாதையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்திருக்கிறார் அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் அளவுக்கு என்னுடைய பணிகள் இருக்கும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நன்றாக உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார். சர்வதேச அளவில் பணி புரிய வேண்டுமென்றால் இங்கிலீஷ் மற்றும் இந்தி அவசியம். அனைத்து மாணவர்களுக்கும் தாய் மொழியோடு சேர்த்து இங்கிலீஷ், இந்தியும் முக்கியம். ஆனால் இந்தியை படிக்க வேண்டுமென கட்டாயப்படுத்த கூடாது.

See also  பெண்களுக்கு ரூ.1000- வீட்டுக்கு சென்று கலெக்டர் விசாரணை

இவ்வாறு அவர் கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!