திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி அன்று அமர்வு தரிசனத்திற்கும்¸ பரிந்துரை கடிதத்திற்கும் தடை விதிக்கப்பபட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மாபெரும் கிரிவலப்பதை தூய்மை பணிக்களுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (07.04.2022) நடைபெற்றது.
காவல் துறை¸ மருத்துவ துறை¸ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை¸ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை¸ இந்து சமய அறநிலையத்துறை மின்சாரத்துறை¸ போக்குவரத்துத்துறை¸ தீயணைப்பு துறை¸ உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
சித்திரை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மிகவும் விசேஷமாக அமைந்திருப்பதால்¸ அன்றைய தினம் பல இலட்சம் மக்கள் இத்திருத்தலத்திற்கு வருகை தந்து கிரிவலம் சென்று வருகின்றனர். எதிர்வரும் 15.04.2022 வெள்ளிக்கிழமை பின்னிரவு 2.32 மணியளவில் பௌர்ணமி திதி தொடங்கி¸ மறுநாள் 16.04.2022 சனிக்கிழமை அன்று பின்னிரவு 1.17 வரை பௌர்ணமி திதி உள்ளது. 16.04.2022 அன்று முழுமையான சித்ரா பௌர்ணமி என்பதால் கிரிவலம் வருவதற்கு உகந்த நாள் என்பதால் அன்று பக்தர்களின் வருகை கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சித்ரா பௌர்ணமி அன்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு¸ தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அன்று இரவு 11 மணி வரை நடை திறந்திருக்க ஆவண செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய வசதியாக கட்டணமில்லா தரிசன சேவை வசதியும்¸ சிறப்பு வழி தரிசனம் செய்ய விரும்புவோர் நலன்கருதி ரூ.50-க்கான கட்டண சேவை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிக அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் சுவாமி¸ அம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனமும்¸ முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களுக்கான அனுமதியும் ரத்து செய்யப்படுகிறது.
கோடை காலத்தை முன்னிட்டு¸ திருக்கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்கள் நடத்து செல்ல வசதியாக அனைத்து கோபுர நுழைவு வாயில்களிலிருந்து நடைபாதைகளில் நிழற்பந்தல்கள்¸ மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மற்றும் தேங்காய் நார் தரைவிரிப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் இளைப்பாறும் கூடங்களும்¸ ஆண்களுக்கும்¸ பெண்களுக்கும் கட்டணமில்லாத சேவையாக பயன்படுத்தும் வகையில் தனித்தனியே குளியல் அறைகள்¸ கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து கோபுரங்களில் நுழைவுவாயிலில் மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மூலம் தகுந்த கியூ லைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நீர் மோர்¸ பானகம் மற்றும் குடிநீர் பாட்டில்கள் பக்தர்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி¸ 64 நகராட்சி குடிநீர் குழாய்களும்¸ 25 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும்¸ கியூ வரிசை இடங்களிலும்¸ 5-ஆம் பிரகாரத்திலும் சின்டெக்ஸ் டேங்குகளும்¸ 7 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் அமைக்கப்பட உள்ளது. திருக்கோயில் வளாகம் முழுவதும் ழரவ ளுழரசஉiபெ மூலம் தனியார் நிறுவனத்தினரை கொண்டு சுத்தம் மற்றும் சுகாதாரப்பணிகள் செய்யப்படும்.
திருக்கோயில் 5-ம் பிராகாரம் தெற்கு பகுதியில் 11 கழிப்பறைகளும்¸ 10 சிறுநீர்கழிப்பிடங்களும் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது. அப்பர் இல்லம் பகுதியில் 11 கழிப்பறைகளும்¸ 3 குளியலறைகளும் உள்ளது. திருக்கோயில் 6-ஆம் பிரகாரம் (ஒத்தவாடை தெருவில்) 15 கழிப்பறைகளும்¸ 13 குளியலறைகளும் உள்ளது. திருக்கோயிலில் நிரந்தரமாக நடமாடும் கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன.
சித்ரா பௌர்ணமி நாட்களில் திருக்கோயிலின் உட்புறத்திலும் நகரம் முழுவதிலும்¸ நாள் முழுவதும் 24 மணி நேரமும்¸ தடையின்றி மின்சாரம் வழங்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மலை சுற்றும் பாதையில் மின் விளக்குகள் அனைத்தும் தொடர்ந்து எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபடும் நேரங்களில் ஜெனரேட்டர் மூலம் மின் சப்ளைக்கு 125 கே.வி. ஜெனரேட்டர் ஒன்றும்¸ 63 கே.வி.ஜெனரேட்டர் ஒன்றும் ஆக இரண்டு ஜெனரேட்டர்கள் யாவும் மின்தடை ஏற்படும் காலங்களில் தானியங்கி (Auto Starter) முறையில் தடையின்றி அனைத்து மின்விளக்குகளும் உடனடியாக எரியும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சுகாதாத்துறையின் சார்பாக¸ திருக்கோயிலின் கிளிகோபுரத்தின் உட்புறம் கொடிமரம் எதிரில் உள்ள தீபதரிசன மண்டபத்தில் மருத்துவ துறையின் மூலம் அவசர கால மருத்துவ சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படவும்¸ திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபம் எதிரில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் பக்தர்கள் வசதிக்காக அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்திடவும்¸ மலை சுற்றும் பாதையில் பக்தர்கள் வசதிக்காக அவசர சிகிச்சை பிரிவு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
சித்ரா பௌர்ணமி நாட்களில் அன்னதானம் செய்பவர்களை ஒழுங்குபடுத்தவும்¸ கிரிவலப்பாதையில் அன்னதானம் செய்யும் வகையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு இடையூறாக ஏற்பட நேரும் குப்பை¸ கூளங்களை மற்றும் அசுத்தங்கள் செய்வதையும் தடுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களிலும் பெருமளவு பக்தர்கள் கிரிவலம் மற்றும் திருக்கோயில் தரிசனத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்¸ மேற்கண்ட நாட்களில் கூட்ட நெரிசல் ஏற்படாதிருக்க திருக்கோயில் கூடுதலான பாதுகாப்புகளும்¸ முக்கிய பிரமுகர்கள் மற்றும் கியூ வரிசையில் வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு தேவையான ஏற்பாடுகள் காவல் துறையின் மூலம் செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார்¸ கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு¸பிரதாப்¸ உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்சுருத்தி¸ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்¸ திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல்¸ திருக்கோயில் மண்டல இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.