Homeசெய்திகள்ஆன்லைனில் திருடப்பட்ட ரூ.10 லட்சம் மீட்பு- டிஜிபி பாராட்டு

ஆன்லைனில் திருடப்பட்ட ரூ.10 லட்சம் மீட்பு- டிஜிபி பாராட்டு

ஆன்லைனில் திருடப்பட்ட ரூ.10 லட்சம் மீட்பு- டிஜிபி பாராட்டு

திருவண்ணாமலையில் ஆன்லைன் வழியாக திருடப்பட்ட ரூ.10 லட்சத்தை மீட்ட இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசாருக்கு சைலேந்திரபாபு பாராட்டு சான்றை வழங்கினார். 

இதே போல் சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகளை சிறப்பாக செய்த டி.எஸ்.பிக்கள்¸ தனிப்பரிவு இன்ஸ்பெக்டர் தயாளனையும் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. 

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு¸ வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வருகை தந்து கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். பிறகு  வேலூர் சரகத்திற்க்குட்ப்பட்ட வேலூர்¸ திருவண்ணாமலை¸ இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 

திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் செல்போன் காணாமல் போனதாக போலீஸ் நிலையங்கள் மூலம் பெறப்பட்ட புகார்களை விசாரணை செய்து 150 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆன்லைன் வழியாக மோசடி கும்பலால் திருடப்பட்ட  ரூபாய் 10¸08¸160-யை கைப்பற்றி உரியர்களிடம் ஒப்படைத்தனர். 

கஞ்சா-குட்கா 

திருவண்ணாமலை மாவட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஆ.சத்யாநந்தன் தலைமையிலான போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட  கஞ்சா¸ குட்கா¸ சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 19 டன் ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் மேலும் 12 லாட்டரி வழக்குகளையும்¸ 10 வழிப்பறி வழக்குகளிலும் சிறப்பாக பணிபுரிந்தனர். 

ஆன்லைனில் திருடப்பட்ட ரூ.10 லட்சம் மீட்பு- டிஜிபி பாராட்டு

திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி தலைமையிலான போலீசார்  மங்கலம் அருகே நடைபெற்ற ஆதாயத்திற்காக கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு மணி நேரத்திற்குள் மூன்று சிறார்களை கைது செய்தனர். செய்யாறு தாலுகா இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 23  இருசக்கர வாகனங்களை மீட்டனர். 

சித்ரா பவுர்ணமி

ஆன்லைனில் திருடப்பட்ட ரூ.10 லட்சம் மீட்பு- டிஜிபி பாராட்டு

16.04.2022 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் திரண்டிருந்தனர். இத்திருவிழாவில் டி.எஸ்.பிக்கள் கிரண்ஸ்ருதி¸ அண்ணாதுரை¸ குணசேகரன்¸ மணிமாறன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் பாதுகாப்பு பணியை மிகச் சிறப்பாக செய்து முடித்தனர். 

இவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கி அவர்களை பாராட்டினார். அப்போது வேலூர் டிஐஜி ஆனி விஜயா¸ திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அ.பவன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!