அந்நியர் படையெடுப்பால்
சிதைந்து போன காளியம்மன் கோயில்
ரூ. 2 கோடியில் கட்டும் பணி துவக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவிலுக்கும் நெடுங்குணம் தீர்க்க ஜலஈஸ்வரர் கோவிலுக்கும் மத்தியில் ஒரே நேர்கோட்டில் சேத்துப்பட்டு கண்ணனூர் ஏரிக்கரை வேப்பமர நிழலில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தில் வடக்கு பார்த்தவாறு அமர்ந்த கோலத்தில ஆதிபராசக்தி இரத்தினக் கல் மூக்குத்தியின் ஒளியில் சிரித்த முகத்துடன் காளியம்மன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பில்லி சூனியம் ஏவல் போன்ற செய்வினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் காளியம்மனை வணங்கி கோவிலின் முன் உள்ள திரிசூலத்தில் எலுமிச்சை பழத்தை சொருகினால் தீயசக்தி விலகி புத்துணர்ச்சியுடன் செல்லலாம் என்பது இத்தலத்தின் ஐதீகமாக உள்ளது.
குழந்தை வரம் வேண்டியும் பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேரவும்¸ விவசாயம் செழிக்கவும் விளைச்சல் பெருக்கவும் நோய் நொடியின்றி வாழவும் கல்வியில் சிறக்கவும் கடன் சுமை குறையவும் இந்த அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
திருமண தடை உள்ள ஆண் பெண் காளியம்மன் கோவிலுக்கு வந்து செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கேற்றினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவே உள்ளது. அப்படி தடை நீங்கி திருமணம் நடைபெற்றவர்கள் திருமண கோலத்துடன் தம்பதிகளாக வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து மகிழ்கின்றனர்.
புற்றில் அமர்ந்திருந்த காளி
ஆதிகாலத்தில் ஊரில் உள்ளவர்கள் கண்ணனூர் ஏரிக்கரை பகுதியில் தினந்தோறும் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவருவதையே வழக்கமாக கொண்டிருந்தனர். ஏரியின் கீழ்உள்ள புற்றில் ஒரு பசுமாடு தினந்தோறும் பால் சுரப்பதையே வழக்கமாக கொண்டிருந்தன. இப்படி தினந்தோறும் பாலை சுரந்து சுரந்து புற்றிலிருந்த காளியம்மன் சிலை வெளியே தெரிய ஆரம்பித்தது. இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து ஊர்மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் ஊர்மக்கள் ஒன்றுகூடி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து கீற்றுகொட்டகை அமைத்து வழிபட்டு வந்தனர் என்பது இன்றயளவும் செவிவழி செய்தியாகவே உள்ளது.
இத்தகைய பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் கற்கோயிலாக கட்டப்பட்டு வருகிறது. கருவறை 3 நிலை விமான கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமான பணி நடைபெற்றுவருகிறது. அந்நியர் படையெடுப்பால் 1000 ஆண்டுகளுக்குமுன் சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கப்பட்ட திருக்கோயில் சிதிலமடைந்து மண்மேடாக இருந்தது. இக்கோயில் மீண்டும் 05.08.2020ல் பாலாலயம் செய்யப்பட்டு சித்தர்களின் வழிகாட்டுதலின்படி கற்கோயில் ஆக கட்ட முடிவு செய்யப்பட்டு திருப்பணி நடைபெற்றுவருகிறது. இந்த திருப்பணியில் நீங்களும் ஒருவராக இருந்து பொருளுதவியோ பண உதவியோ தந்து காளியம்மனின் அருளை பெறலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு
கண்ணனூர் அருள்மிகு சுயம்பு காளியம்மன் திருக்கோயில்¸ கண்ணனூர் மதுரா¸ சேத்பட்டு¸ திருவண்ணாமலை மாவட்டம் – 606 801¸ தமிழ்நாடு¸ இந்தியா.
கண்ணனூர் காளியம்மன் திருக்கோயில் டிரஸ்டிகள்:-
திரு. எம்.சுந்தரமூர்த்தி 8144609575
திரு. இ.கிருஷ்ணமூர்த்தி 9942572242
திரு. கே.செந்தில்குமார் 8825778345
திரு. எம்.ஜோதி 8940544490
திரு. எம்.மோகன் 9362874384
திரு. இ.ரமேஷ் 9543281466
திரு. கே.ராமதாஸ் 8838289464
திரு. எம்.பாலு 9994938652
திரு. எஸ்.வெங்கடேசன்¸ ஆலயபூசாரி 6374017334
கோயில் திருப்பணி கான்ட்ராக்டர்
சிற்பி எம்.மாதேஸ்வரன்
எம்.கே.சிற்ப கலைக்கூடம்
2ஃ79ஏஏ1¸ சின்னபெருமாபாளையம்
காடச்சநல்லூர் அஞ்சல்
பள்ளிபாளையம்
குமாரபாளையம் தாலுக்கா
நாமக்கல் மாவட்டம் – 638 008.
8248760006 , 9865005924
அமைவிடம் :
திருவண்ணாமலை மாவட்டம் அவலூர்பேட்டை வழியாக ஆரணி செல்லும் அனைத்து பேருந்துகளும் சேத்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும். பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கண்ணனூர் காளி கோவில் உள்ளது. சென்னை¸ போளூர்¸ வந்தவாசி¸ ஆரணி ஆகிய பகுதிகளிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.