Homeஆன்மீகம்திருவண்ணாமலை கோயிலில் மன்மதனை எரித்தார் சிவபெருமான்

திருவண்ணாமலை கோயிலில் மன்மதனை எரித்தார் சிவபெருமான்

திருவண்ணாமலை கோயிலில் மன்மதனை எரித்தார் சிவபெருமான்
திருவண்ணாமலை கோயிலில் மன்மதனை எரித்தார் சிவபெருமான்

திருவண்ணாமலை கோயிலில் வசந்த உற்சவத்தின் நிறைவு நாளான இன்று மன்மதனை, சிவபெருமான் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் என்பது எல்லா மக்களுக்கும் இறைவன் அருட்பார்வையால் தீட்சை அளிக்கும் நிகழ்வாக கருதப்படுகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 1 வருடத்தில் 12 மாதங்களில் பல்வேறு விழாக்கள் நடக்கின்றன. இங்கு நடைபெறும் விழாக்கள் தனிச்சிறப்புடையனவாகும். பெரிய வாகனங்களில் சாமி ஊர்வலங்கள்¸ அவற்றிற்கேற்ப அலங்காரங்களும் கண்கொள்ளா காட்சியாகும்.    

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம்¸ அதன்படி இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 5ந் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது. தினமும் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பூமாலை அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது¸ அதனைத்தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன்  எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உள்ள  பன்னீர் மண்டபத்தில் பொம்மை பூ போடுதல் நடைபெற்றது.

பாவை என்று அழைக்கப்படுகின்ற பூக்கூடை வைத்திருக்கும் பொம்மை மகிழ மரத்தை பத்து முறை சுற்றி வந்த அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு காற்றில் மிதந்தபடி பூ போட்டதை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர். 

5 மற்றும் 7வது திருவிழாவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்ட பிறகு சுவாமி மீது இருக்கும் நகைகள் அனைத்தும் களையப்பட்டது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் பூக்களால் ஆன பூ ஆடை அணிவிக்கப்பட்டது. பின்பு அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு எந்த ஒரு வெளிச்சமும் இல்லாமல் அண்ணாமலையார்¸ இருட்டில் மன்மதனை தேடுதல் நடைபெற்றது. அதன்பிறகு அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் மூன்றாம் பிரகாரம் வலம் வந்து மகிழமரம் பின்பு தீப்பந்தத்தின் ஒளியில் காட்சி தந்து ஆனந்த நடனமாடி பக்தர்களை மகிழ்வித்தார் அப்போது பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற பக்தி கோஷமிட்டு வணங்கினர். 

திருவண்ணாமலை கோயிலில் மன்மதனை எரித்தார் சிவபெருமான்
திருவண்ணாமலை கோயிலில் மன்மதனை எரித்தார் சிவபெருமான்

சித்திரை வசந்த விழாவின் நிறைவு நாளான இன்று அண்ணாமலையார்¸ உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் கோயிலில் இருந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மன் புறப்பட்டு ஜய்யங்குளத்தினை சென்றடைந்தனர். ஜய்யங்குளத்தில் சிவசாச்சரியார்கள் வேதமந்திரம் ஒலிக்க சூலத்துடன் 3 முறை குளத்தில் மூழ்கி தீர்த்தவாரி நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து சூலத்திற்கு பால்¸தயிர். சந்தனம்¸மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று தீப ஆராதனை நடைபெற்றது. இந்த தீர்த்தவாரியை யொட்டி தீயணைப்பு துறையின்  சார்பில் அய்யங்குளம் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீசஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தடுப்புக்கிடையே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

திருவண்ணாமலை கோயிலில் மன்மதனை எரித்தார் சிவபெருமான்

இரவு கோயிலில் மன்மத தகனம் நடைபெற்றது. பங்குனி உத்திரத்தில் சிவன் பார்வதிக்கு திருமணம் நடைபெறும். அவர்கள் ஒன்று சேர பிரம்மாவால் படைக்கப்பட்ட தட்சணாமூர்த்தியும்¸ நான்கு முனிவர்களும் சேர்ந்து சுப ஓரைகள் குறித்து தருகின்றனர். அந்த நேரத்தில் சிவன் ஆழ்ந்த தியானத்தில் இருந்து விட அவரை எழுப்ப படாதபாடுபட்டனர். மேளதாளங்கள்¸ வாணவேடிக்கைகள் முழங்கப்பட்டும் சிவபெருமானின் தியானத்தை கலைக்க முடியவில்லை. இதையடுத்து மன்மதனை வரவழைத்து மன்மதபானம் விட செய்தனர். இதனால் பயங்கர கோபம் கொண்ட சிவபெருமான் மன்மதனை அழிக்க புறப்பட்டார். இதற்காகத்தான் பத்து நாள் உற்சவம் நடக்கிறது. ஐந்தாவது நாள் மற்றும் ஏழாவது நாள் விழாவில் இருட்டில் மன்மதனை தேடும் நிகழ்வு நடக்கும். பத்தாவது நாள் உற்சவத்தில் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை சுட்டு பொசுக்குவார் சிவபெருமான். இதை குறிப்பிடும் வண்ணமே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மன்மத தகனம் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை கோயிலில் மன்மதனை எரித்தார் சிவபெருமான்
திருவண்ணாமலை கோயிலில் மன்மதனை எரித்தார் சிவபெருமான்

அலங்கார மண்டபத்தில் அண்ணாமலையார்¸ உண்ணாமலையம்மனுக்கு 16 வகையான தீபாராதளை காட்டப்பட்டது. மகாதீபாராதனை முடிந்ததும் 3ம் பிரகாரத்தை வலம் வந்த பிறகு உண்ணாமலையம்மன் எதாஸ்தானம் சென்றடைய¸ தன் மீது அம்பு எய்த மன்மதனை தனது நெற்றிக்கண்ணால் அழிக்க அண்ணாமலையார் புறப்பட்டார். இதற்காக கோயிலின் 3வது பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு கையில் வில்லோடு¸ 20 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான மன்மத பொம்மை உருவாக்கப்பட்டிருந்தது. எதிரில் நிறுத்தப்பட்டிருந்த அண்ணாமலையாரின் முன்பிருந்து பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பற்றி எரிந்தது. அப்போது வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. 

மன்மதன் எரிக்கப்பட்ட சாம்பலை கர்மவினைகள்¸ கண் திருஷ்டி போக வீட்டில் வைத்துக் கொள்வதற்காக பக்தர்கள் எடுத்துச் சென்றனர். சிவாலயங்களில் அண்ணாமலையார் கோயிலில் மட்டுமே இந்த மன்மத தகனம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!