Homeசெய்திகள்விவசாயிகள் கூட்டத்தில் வாக்குவாதம்- கலெக்டர் வெளிநடப்பு

விவசாயிகள் கூட்டத்தில் வாக்குவாதம்- கலெக்டர் வெளிநடப்பு

விவசாயிகள் கூட்டத்தில் வாக்குவாதம்- கலெக்டர் வெளிநடப்பு

திருவண்ணாமலையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் டென்ஷனான கலெக்டர் வெளிநடப்பு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி அந்தக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி¸ வேளாண்மை இணை இயக்குனர் முருகன் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள்¸ ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். வேட்டவலம் மணிகண்டன் பேசுகையில் இம்மாவட்டத்தில் விவசாயத்தைத் தவிர மற்ற தொழில்கள் ஏதும் இல்லாததால் 50¸000 மின் இணைப்புகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வெள்ளை கண்ணு பேசுகையில்¸ நார்த்தாம்பூண்டியில் சமீபத்தில் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் நெல் பதிவு செய்ய முடிவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் தருவதில்லை என ஒரு விவசாயி குற்றம்சாட்டி பேசினார். 

விவசாயிகள் கூட்டத்தில் வாக்குவாதம்- கலெக்டர் வெளிநடப்பு

இதைத்தொடர்ந்து பேசிய சில விவசாயிகள் பஞ்சமி நிலம் (டி.சி.லேண்ட்) குறித்துப் பேசினர். இங்கு விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றி பேசுங்கள் என அதற்கு கலெக்டர் பதிலளித்தார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சிலர் கலெக்டருடன் வாக்குவாதம் செய்தனர். நீங்கள் இப்படி செய்தால் டிஆர்ஓவை மீட்டிங் நடத்த சொல்லுவேன் என கலெக்டர் சொன்னார். நீங்க போங்க ஏன் இங்கு வந்தீர்கள்? என கலெக்டர் பார்த்து ஒரு விவசாயி கோபமாக கேட்டார். அப்போது இருக்கையிலிருந்து எழுந்து வெளியே செல்ல முயன்ற கலெக்டர் முருகேஷ் மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்தார். நான் வந்து எத்தனை டி.சி லேண்ட் எடுத்துக் கொடுத்துள்ளேன் என்பது எனக்கு தெரியும் என்று விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அப்போதும் விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால் டென்ஷனான கலெக்டர் முருகேஷ் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். 

விவசாயிகள் கூட்டத்தில் வாக்குவாதம்- கலெக்டர் வெளிநடப்பு
விவசாயிகள் கூட்டத்தில் வாக்குவாதம்- கலெக்டர் வெளிநடப்பு

சிறிது நேரம் கழித்து மீண்டும் கூட்டத்திற்கு வந்து இருக்கையில் அமர்ந்தார். அப்போது விவசாயிகள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராடுவோம் போராடுவோம் மாவட்ட ஆட்சித் தலைவரை எதிர்த்து போராடுவோம் தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்காதே¸ சேரி மக்களை வஞ்சிக்காதே என கோஷங்களை எழுப்பினர். இதனால் கூட்டத்தில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டனர் அவர்கள் விவசாயிகளை சமாதானப்படுத்த முயன்றனர். போலீசைப் பார்த்து உங்களுக்கு இங்கு வேலை இல்லை என விவசாயி ஒருவர் கோபமாக கூறினார். இதனிடையே விவசாயிகள் இருதரப்பினரிடையே வாக்குவாதம் மூண்டது. ஒருவழியாக அதிகாரிகளும்¸ போலீசாரும் விவசாயிகளை சமாதானப்படுத்தி அமர வைத்தனர். 

பிறகு கலெக்டர் முருகேஷ் பேசியதாவது¸

டிசி லேண்ட் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும் டிசி லேண்ட்யை விட்டுக் கொடுக்கமாட்டேன் எஸ்சி எஸ்டி மக்களுக்கு எவ்வளவு நல்லது செய்து இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இந்த மீட்டிங்கில் திட்டுகிறீர்கள்¸ நான் கவலைப்படவில்லை என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது விவசாயி சிலர் எழுந்து இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் டென்ஷனான கலெக்டர் மேசையை வேகமாகத் தட்டி இப்போது நான் தான் பேசுவேன்¸ உங்களை பேச விட்டேன், என்னை பேச விடுங்கள் என மைக்கில் சத்தமாக கூறினார்.

விவசாயிகள் கூட்டத்தில் வாக்குவாதம்- கலெக்டர் வெளிநடப்பு

தொடர்ந்து அவர் பேசியதாவது¸ 

பல எஸ்சி எஸ்டி அமைப்புகள் என்னை சந்திக்கிறார்கள் அவர்களது கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கி உள்ளேன். டி.சி லேண்ட்யை மீட்டு தந்துள்ளேன். காலனிகளுக்கு சாலை¸ கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். இந்த மாவட்டத்தில் விவசாய பிரச்சனைகள் அதிகமாக உள்ளது அதைத்தான் பேச வேண்டும் என நினைக்கிறேன். இங்கு ஆவேசமாக பேசுகிறீர்கள். மரியாதை இல்லாமல் பேசுகிறீர்கள். விவசாய பிரச்சனைகளை இங்கு பேசுங்கள்¸ டி.சி லேண்ட் பிரச்சனையை என்னிடம் வந்து பேசுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து பேசிய முத்தகரம் பழனிச்சாமி  நிலத்தில் என்ன பயிர் செய்துள்ளோம் என்பதை யாரும் நேரில் வந்து ஆய்வு செய்வது இல்லை இதனால்தான் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடக்கிறது. விஏஓ க்கள் நேர்மையாக இருந்தால் அனைத்தும் நேர்மையாக நடக்கும் என்றார்.

இதற்கு பதிலளித்த கலெக்டர் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை களைய தீவிரமாக கண்காணித்து வருகிறோம். வாரந்தோறும் கூட்டம் நடத்தி வருகிறோம்.மார்ச் மாதம் வரை 55 ஆயிரம்மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.ஏப்ரலில் 65 ஆயிரம் மெட்ரிக் டன்னும்¸ மே மாதம் 80 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் எந்த தாலுகாவில் இருந்து எந்த ஊரிலிருந்து பதிவு செய்கிறார்கள் என்பதை அறியும் வசதி சாப்ட்வேரில் இல்லை. எனவே அடுத்த கொள்முதலில் இதை சரி செய்ய சொல்லி இருக்கிறோம் பதிவு செய்த விவசாயிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம் எனக் கூறினார்.

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்வது வழக்கம். ஆனால் கலெக்டர் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

See also  திருவண்ணாமலை:நிரப்பப்பட உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!