திருவண்ணாமலையில் ஒரு சர்ச்சில் இருந்த 50 மாணவ-மாணவியர்களை இந்து முன்னணியினர் மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள ஒரு கிறிஸ்துவ சர்ச்சில் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியர்களை அழைத்து வந்து மதமாற்றம் செய்வதாக இந்து முன்னணி அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் இரா.அருண்¸ மாவட்ட செயலாளர் எஸ்.சிவா¸ நாகா. செந்தில்¸ மஞ்சுநாதன் மற்றும் நிர்வாகிகள் அந்த சர்சுக்கு சென்று குழந்தைகளை வெளியே அழைத்து விசாரித்தனர். அப்போது பைபிளில் உள்ள வாசகங்களை சொல்லிக் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்களை அங்கிருந்து வெளியேற்றிய இந்து முன்னணியினர் அவர்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தெரிவித்த இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் இரா.அருண்¸ அசம்பிளி ஆப் காட் சர்ச் என்கின்ற இடத்தில் 50க்கும் மேற்பட்ட இந்து குழந்தைகளை மதிய உணவு¸ பழங்கள்¸பழச்சாறுகள் கொடுத்து கோடை வகுப்பு என்ற மாயையில் மதமாற்றம் செய்து கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டது என்றார்.
இச்சம்பவம் குறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் எஸ்.சிவா திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் அசம்பிளி ஆப் காட் சர்ச்சில் குழந்தைகளை வாகனங்களில் அழைத்து வந்து கட்டாய மதமாற்றம் செய்து கொண்டிருந்தனர். இதை தடுத்து நிறுத்தி குழந்தைகளை மீட்டு அனுப்பி வைத்தோம். அப்போது இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு சர்ச்சில் இருந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
சர்ச்சில் இருந்து குழந்தைகளை இந்து முன்னணியினர் மீட்டு வந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.