தில்லை நடராஜரையும்¸ காளியையும் பற்றி ஆபாச பதிவு வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் இந்து முன்னணி சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடராஜர் பற்றி அவதூறு ஒளிபரப்பை, யூ டியூப் நிறுவனம் தடை செய்துள்ளது.
மைனர் விஜய் என்பவர் இந்து மதத்தை பற்றி எதிர்மறையான கருத்துக்களை தனது யு2 புருடஸ் என்ற தனது யூ டியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். அதில் ஒன்றுதான சிதம்பரம் நடராஜர் பற்றிய ஆபாச பதிவு. நடராஜர் காலை தூக்கி நிற்க இதுதான் காரணம் எனும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள ஆபாச பதிவு பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளது.
இது சம்மந்தமாக கொதித்து எழுந்த இந்து அமைப்புகள்¸ அந்த மைனர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி அலுவலகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் கு.சரவணன்¸ திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது¸
ஐந்து நாட்களுக்கு முன்பு நான் யூடியூப் ( you tube)தளத்தை பார்வையிட்டபோது (U2 Brutus) என்ற கணக்கில் இயங்கி வரும் வீடியோ ஒன்று என் பார்வைக்கு வந்தது அதில் சிதம்பரம் நடராஜர் காலை தூக்கி நிற்க இதுதான் காரணம் என்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதை பார்த்த போது தில்லைக் காளிக்கும், நடராஜருக்கும் இடையில் நடந்த நடன திருவிளையாடலில் நடராஜர் உள்ளாடை அணியாமல் ஒரு காலைத்துக்கி நடனமாடி காளியை வென்றார் என்று அபாசமாக, வக்கரமாக, மிகவும் கேவலமாக பார்பவர் முகம்சுளிக்கும் வகையில் மைனர் விஜய் என்னும் ஒருவர் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்து நான் மனவேதனை அடைந்தேன்
இது என் கருத்து அல்ல. பல கோடி இந்து மக்கள் வணங்கி வழிபடும் தெய்வத்தை இழிவுபடுத்தி தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்து மதத்திற்க்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்புகின்ற அந்த யூடியூப் கணக்கை முடக்குமாறும், மதக்கலவரத்தை உருவாக்குகின்ற வகையில் பேசிய விஜய் மீதும் தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கோள்கிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதற்கிடையில் யு2 புருடஸ் யூ டியூப் சேனலில் ஒளிபரப்பான நடராஜர் பற்றிய அவதூறு பதிவை யூ டியூப் நிறுவனம் தடை செய்துள்ளது. அரசாங்கத்திடம் வந்த புகாரை தொடர்ந்து அந்த உள்ளடக்கம் கிடைக்காது என அந்நிறுவனம் கூறியிருக்கிறது. இதே போன்ற ஆபாச பதிவை வெளியிட்டுள்ள தத்தாச்சாரியார் பிளாக்ஸ்பாட் டாட் காம் என்ற இணையதளத்தையும் தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த 2020ம் ஆண்டு முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கறுப்பர் கூட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் இருந்த பதிவுகளை நீக்கிய போலீசார் அந்த பதிவை வெளியிட்டவர்களை கைதும் செய்தனர். இந்நிலையில் தற்போது யு2 புருடஸ் யூ டியூப் சேனலில், நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவனை பற்றிய ஆபாச பதிவை வெளியிட்ட மைனர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.