அரசு உதவியாளர் பதவி வழங்க கூட தகுதி¸ பவர் இல்லை என திருவண்ணாமலை கலெக்டர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்¸ தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் இன்று (28.05.20022) தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது¸
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறுகின்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் வேலைவாய்ப்புக்காக நிறைய கோரிக்கை மனுக்கள் வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர்¸ கிளர்க் பணி கேட்டால் நாளைக்கே வந்து ஜாயிண்ட் செய்யுங்கள்¸ மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் என ஆர்டர் போட்டு தர கலெக்டருக்கு தகுதியில்லை. பவர் இல்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப்புறங்களை சார்ந்த நிறைய இளைஞர்கள் படித்து முடித்து விட்டு¸ தகுதியான வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால்¸ வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும்¸ வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பதிவு செய்து கலந்து கொண்டால் படிப்பிற்கு தகுந்தாற் போல் வேலை கிடைக்கும். அரசு துறையில் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால்¸ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் மூலமும்¸ வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்தவர்களுக்கும்¸ அரசுதுறையில் நேரடி நியமனம் மூலம் நேர்காணலில் தேர்வு செய்பவர்கள் ஆகிய 3 வழிகளில் தான் அரசு வேலைக்கு செல்ல முடியும்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடைபெறும் முகாம்கள் மூலம் தான் நிறைய இளைஞர்கள் வேலைக்கு செல்கிறார்கள். தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் கிட்டதட்ட 120 நிறுவனங்கள் இணைந்து தொழில்சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்றவர்கள் ரூ.8¸000 முதல் ரூ.30¸000 வரை ஊதியம் பெறுவார்கள். இப்பயிற்சியில் 18 வயதிற்கு மேல்¸ 35 வயதிற்குள் இருப்பவர்கள்¸ நலிவுற்றோர்¸ பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 45 வயது வரம்பும்¸ வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
போக்குவரத்து¸ உணவு¸ தங்குமிடம்¸ சீரூடை¸ பாடபுத்தகங்கள் அனைத்தும் இப்பயிற்சியில் இலவசமாக வழங்கப்படும். 3 முதல் 6 மாத காலம் இப்பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு குறைந்தப்பட்சம் ரூ.8¸000 முதல் ஊதியம் வழங்கப்படும். இப்பயிற்சியில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சான்றிதழ்களும் வழங்கப்படும். இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்களைப் பற்றி அறிந்து கொள்வதோடு¸ திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களையும் ஒருங்கே பெறுவதற்கு¸ இந்தத் திறன் திருவிழாக்கள் பேருதவியாக அமையும்.
120-க்கும் மேற்பட்ட தொல்லியல் துறை உள்ளது. வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் தையல்¸ உணவு பொருள்¸ சில்லரை வணிகம்¸ சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல்¸ கட்டுமானம்¸ னுipடழஅய போன்றவற்றில் பயிற்சி வேண்டுமென்றால் கௌசல் பாஞ்ச் (Kaushal Panjee) என்ற செயிலியை பதிவிறக்கம் செய்து உங்களுடைய விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம். பயிற்சி இல்லாமல் எந்த துறையிலும் முன்னேற முடியாது. எனவே¸ அதிகப்படியான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு உங்கள் திறனை வெளிப்படுத்தி நீங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட 700-க்கும் மேற்பட்ட இளைஞர்களில் 30-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சிக்கு 327 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 17 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினையும்¸ இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் கறவைமாடு வளர்ப்பு பயிற்சி பெறுவதற்காக தேர்வுசெய்யபட்ட 13 நபர்களுக்கு பயிற்சி பெறுவதற்காக தொழில் திறன் பயிற்சி சேர்க்கைக்கான சான்றிதழினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வழங்கினார்.
விழாவில் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப்¸ மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குநர் பா.அ.சையத் சுலைமான்¸ தாட்கோ பொதுமேலாளர் ஏழுமலை¸ தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன்¸ மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ஏ.தனகீர்த்தி¸ தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நிர்மலா¸ வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) கே.பி.மகாதேவன்¸ தாசில்தார் பரிமளா¸ மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா வெங்கடேசன்¸ ஒன்றியக்குழு உறுப்பினர் வித்தியா தேவேந்திரன்¸ ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முருகேசன்¸ பள்ளி தலைமை ஆசிரியர் அழகிரி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் இளைஞர்கள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.