திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 20¸69¸091 வாக்காளர்கள் கொண்ட பட்டியலை கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று வெளியிட்டார்.
இறுதி வாக்காளர் பட்டியல்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 20.01.2021 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி வெளியிட திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ம. ஸ்ரீதேவி பெற்றுக் கொண்டார். இதில்¸ மாவட்ட வருவாய் அலுவலர் பொ. இரத்தினசாமி¸ கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி¸ பயிற்சி உதவி ஆட்சியர் அமித்குமார்¸ பயிற்சி துணை ஆட்சியர் அஜிதா பேகம்¸ தேர்தல் வட்டாட்சியர் தியாகராஜன்¸ அதிமுக சார்பில் வழக்கறிஞர் குமரன்¸ திமுக சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன்¸ பா.ஜ.க மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், தேமுதிக சார்பில் வழக்கறிஞர் காளிங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாக்காளர்களின் விபரம்
சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் புதியதாக 55¸737 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் அதன் விபரம் பின்வருமாறு¸
முதன்முறை வாக்களிப்பு
16¸696 வாக்காளர்கள் இறந்தோர்¸ இடம் பெயர்ந்தோர் மற்றும் இருமுறைப் பதிவு என வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட இறுதி வாக்களர் பட்டியலில் 18 முதல் 19 வயதுடைய 49¸879 வாக்காளர்கள் முதன் முறையாக வரும் தேர்தலில் வாக்களிப்பவர்களாக உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்கள்¸ வட்டாட்சியர் அலுவலகங்கள்¸ நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அந்தந்த பகுதி வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரி பார்த்துக் கொள்ளலாம்.
பெயரை சேர்க்க
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 20.01.2021 முதல் தொடர்த் திருத்தம் 2021 பணி நடைபெறவுள்ளது. இதன்படி இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தகுதியுடைய நபர்கள் விடுபட்டு இருப்பின் அதாவது 01.01.2003 வரை பிறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்க்க படிவம்-6 சமர்பித்து பெயரை பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் தகுந்த படிவங்களும் அதற்கான ஆதாரங்களை சமர்பித்து தங்களின் குறைகளை வாக்காளர் பட்டியலில் சரி செய்துக் கொள்ளலாம்.
மேலும் வாக்காளர்கள் தங்கள் வீட்டிலிருந்தவாறே பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய https://www.nvsp.in/ என்ற இணையதளத்தினை பயன்படுத்தலாம். வாக்காளர் பட்டியலில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் வரும் 21.01.2021 முதல் 31.01.2021 வரை மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களும்¸ மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளும் நடைபெறவுள்ளது.
தகுதியுடைய மாற்றுத்திறனாளி நபர்கள் அனைவரும் முகாம்களில் பங்கேற்று தங்கள் பெயரை உரிய ஆதாரங்களுடன் சமர்பித்து வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
தேசிய வாக்காளர் தினம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 2372 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. தற்போது 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 644 வாக்குச் சாவடி மைங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டு¸ மொத்தம் 3016 வாக்குச் சாவடி மைங்கள் அமைக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 25.01.2021 அன்று 11-வது “தேசிய வாக்காளர் தினம்” சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் வாக்காளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறும் வாக்காளர் தின விழாவில் கலந்து கொண்டு வாக்காளர் உறுதி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.