Homeஅரசியல்ஜெயலலிதா படம் அகற்றம் -தாலுகா ஆபீசில் திரண்ட அதிமுகவினர்

ஜெயலலிதா படம் அகற்றம் -தாலுகா ஆபீசில் திரண்ட அதிமுகவினர்

ஜெயலலிதா படம் அகற்றம் -தாலுகா ஆபீசில் திரண்ட அதிமுகவினர்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜெயலலிதா படம் அகற்றப்பட்டதை கேள்விப்பட்டு அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

வருடந்தோறும் அந்தந்த தாலுகா அலுவலங்களில் ஜமாபந்தி எனும் வருவாய் கணக்கு தணிக்கை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வருவாய் கணக்கு தணிக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3ந் தேதி முதல் தொடங்கி 16ந் தேதிவரை நடக்கிறது. 

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில்  ஒவ்வொரு நாளும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் கலந்து கொண்டு கணக்குகளை தணிக்கை செய்தார். மொத்தம் 39 வருவாய் கிராம கணக்குகளை அவர் தணிக்கை செய்து முடித்தார். இதையடுத்து நிறைவு விழா இன்று பகல் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

ஜெயலலிதா படம் அகற்றம் -தாலுகா ஆபீசில் திரண்ட அதிமுகவினர்

இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறையின் சுவற்றில் தலைவர்களின் வரிசையில் மாட்டப்பட்டிருந்த ஜெயலலிதா படமும்¸ முன்னாள் முதல்வர்கள் வரிசையில் மாட்டப்பட்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி படமும் அகற்றப்பட்டிருந்ததும்¸ ஜெயலலிதா படம் உடைந்த நிலையில் தரையில் வைக்கப்பட்டிருந்ததும்¸ அதற்கு பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி படம் வைக்கப்பட்டிருந்ததும் வாட்ஸ் அப்பில் பரவியது. இதைப்பார்த்ததும் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஒவ்வொருவராக தாலுகா அலுவலகத்திற்கு வர ஆரம்பித்தனர். 

அப்போது அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் விழா கலெக்டர் தலைமையில் நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அண்ணாதுரை எம்.பி¸ கலசப்பாக்கம் எம்.எல்.ஏ சரவணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். விழா மேடை அருகில் அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக டி.எஸ்.பி குணசேகரன் தலைமையில் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

ஜெயலலிதா படம் அகற்றம் -தாலுகா ஆபீசில் திரண்ட அதிமுகவினர்

ஜெயலலிதா படம் அகற்றம் -தாலுகா ஆபீசில் திரண்ட அதிமுகவினர்

ஜெயலலிதா படம் அகற்றம் -தாலுகா ஆபீசில் திரண்ட அதிமுகவினர்

உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்காக அதிமுகவினர் தாசில்தார் அறைக்கு சென்றனர். இதனால் தாலுகா அலுவலக ஊழியர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி படங்களை வரவழைத்து தலைவர்களின் வரிசையில் மாட்டினர். இதையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்ட அதிமுகவினர்¸ ஜெயலலிதா¸ எடப்பாடி படங்களை அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷை சந்தித்து அதிமுகவினர். மனு அளித்தனர். 

See also  பிரதான எதிர்கட்சி அதிமுகவா? பா.ஜ.கவா? டிடிவி தினகரன் பதில்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!