Homeஅரசியல்கிரிவலப்பாதையில் கருணாநிதிக்கு சிலை- பாஜக முக்கிய அறிவிப்பு

கிரிவலப்பாதையில் கருணாநிதிக்கு சிலை- பாஜக முக்கிய அறிவிப்பு

கிரிவலப்பாதையில் கருணாநிதிக்கு சிலை- பாஜக முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதிக்கு சிலை வைப்பதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம் என பாஜக அறிவித்துள்ளது. 

பாஜக முன்னாள் தேசியத் தலைவர் எச்.ராஜா¸ திருவண்ணாமலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை இன்று மாலை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது¸ 

ராணுவ வீரர்களின் நலன்¸ ஜம்மு காஷ்மீரை முறையாக இந்தியாவோடு இணைத்தது¸ ராம ஜென்மபூமி¸ முத்தலாக் தடை சட்டத்தை செயல்படுத்தும் துணிச்சல் இப்படி நீண்ட கால கோரிக்கைகளை மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. 3 கோடி இந்தியர்களின் வங்கி கணக்கு 8 வருடத்தில் 46 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கொரோனா கால கட்டத்தில் 200 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொருளாதாரம் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட்டது. இப்படி முன்மாதிரியாக¸ முன்னேற்ற அரசாக மோடி அரசாங்கம் உள்ளது. 

ஆனால் தமிழ்நாட்டில் ஓராண்டை நிறைவு செய்திருப்பதை யொட்டி சட்டமன்றத்தில் முதல்வர் பேசியதைப் பார்த்து அழுவதா¸ சிரிப்பதா என தெரியவில்லை. உக்ரைனில் சிக்கித் தவித்த 10¸300 தமிழக மாணவர்களை ஒரு கீறல் கூட இல்லாமல் கொண்டு வந்ததாக பச்சை பொய் சொல்லியிருக்கிறார். 4 மத்திய அமைச்சர்கள் மேற்பார்வையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை தவிர 30 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்களை பத்திரமாக மத்திய அரசு கொண்டு வந்து சேர்த்ததை இவர் சொந்தம் கொண்டாடுகிறார். இவர்கள் செய்வதெல்லாம் ஊழல் மட்டும் தான். ஆவுடையார் கோவில் யூனியனில் பாரதப் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 435 வீடுகளுக்கான பணம் ரூ 9 கோடியை பி.டி.ஓ முறைகேடாக எடுத்துள்ளார். ஊழலை புதுசாக கண்டுபிடிக்கிறார்கள். திட்டம் போட்டு திருடுகிற கூட்டம் திருடிக் கொண்டு இருக்கிறது என்ற பாடல் தமிழ்நாட்டுக்கு தான் பொருந்தும். திராவிட மாடல் என்றால் ஊழல் என்று அர்த்தம்.

ஊழல் நடக்கும் போதே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லபக் என்று பிடித்து விடுவதால் அரசு பின்வாங்கி விடுகிறது. முடிவை மாற்றிக் கொள்ளும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கிறது. கோயில்களை அழிப்பதற்காக தொடங்கப்பட்டதுதான் இந்து அறம் அழிக்கும் ஊழல் துறையான இந்து சமய அறநிலைத்துறை ஆகும். கோயில் சொத்துக்கள் குறித்தான வழக்கில் பெரும்பாலான அறநிலை துறை அதிகாரிகள் பணம் வாங்கிக் கொண்டு கோர்ட்டில் ஆஜராகுவதில்லை. இதனால் தீர்ப்பு எக்ஸ் பார்ட்டி ஆகிவிடுகிறது. இதைக் கண்டித்து திருவண்ணாமலையில் விரைவில் தர்ணா போராட்டம் நடக்கும்.  

கிரிவலப்பாதையில் கருணாநிதிக்கு சிலை- பாஜக முக்கிய அறிவிப்பு

ஆரம்பத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்று இருந்தது. இப்போது செயற்கை கருவூட்டல் மையங்கள் தான் குழந்தை தர முடியும் என்ற நிலைக்கு தள்ளி விட்டது தான் திராவிட மாடல் ஆகும். மாட்டுக்கு தான் செயற்கை கருவூட்டல் செய்வார்கள் இப்போது மனிதனுக்கும் வந்து விட்டது. 1969 ஆம் ஆண்டு தமிழனை குடிகாரனாகி குடி கெடுத்தவர்தான் கருணாநிதி. நாடு முழுவதும் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். திமுக இருப்பது தமிழ் நாட்டுக்கு நல்லது இல்லை. மேகதாது அணை தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என மத்திய அமைச்சர் சொல்லிவிட்டார். காவிரி பிரச்சினையில் திமுகவும்¸ கருணாநிதியும் தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்தனர். அவங்க தேவைக்கு அவங்க கட்டுகிறார்கள் என அணை கட்டுவது குறித்து சட்டமன்றத்தில் கருணாநிதி பேசியது என்னிடம் உள்ளது. இப்படி தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்த கருணாநிதியை தலைவர் இல்லை என அறிவித்துவிட்டு துரைமுருகன் பேசட்டும். 

இந்து கோயில் விவகாரங்களில் திமுக மோசமாக நடந்து வருகிறது. காணிக்கை கொடுத்த நகைகளை எப்படி உருக்க முடியும் இது நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாகும். கோவில் நகைகளை உருக்குவது என்பது திருடுவதற்கு ஒப்பாகும். கோயில் நகைக்கெல்லாம் கணக்கில்லை. அதனால்தான் அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்¸ அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்கிறோம். இதை சொன்னால் சேகர் பாபுவுக்கு கோபம் வருகிறது. அவர் அக்கா (ஜெயலலிதா) முன் எப்படி இருந்தாரோ அப்படித்தான் ஆதீனத்தின் முன் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி பேஸ்புக்கில் படத்தை பதிவிட்டேன். திருப்பி அடித்தால் என்ன ஆகும் என்று மதுரை ஆதீனத்தை மிரட்டுகிறார் சர்ச்சுக்கு சென்று சொத்தை தொட முடியுமா? அதற்கு ஸ்டாலினுக்கு முதுகெலும்பு உள்ளதா? முஸ்லிம் சொத்தை தொட முடியுமா? இது இந்து விரோத அரசு. ஆனால் தான் கருணாநிதியை விட ஸ்டாலின் மோசமானவர் என்று சொன்னேன். இந்து சொத்துக்களை அழிப்பதற்காகவும்¸ சூறையாடுவதற்கும் தான் இந்த அரசு உள்ளது.

சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் பாப்பன் சத்திரத்தில் உள்ள குயின்ஸ் லேண்ட் என்ற வணிக நிறுவனம் காங்கிரஸ் எம்எல்ஏ விற்கு சொந்தமானது இங்கு மத மாற்றம் நடக்கிறது இந்த இடம் காசி விஸ்வநாதர்¸ வேணுகோபால் சுவாமி கோயிலுக்கு சொந்தமானதாகும். 4 வாரத்திற்குள் இதை இடித்து விட்டு நிலத்தை கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குயின்ஸ்லேண்ட் நிறுவனம் ஒன்பதரை கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை ஏன் அமல்படுத்தவில்லை. இந்து விரோத அரசு என்பதால் செயல்படுத்தவில்லை. 

திமுகவினரால் எல்லாத் தொழிலுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது பிச்சை எடுக்கும் தொழிலுக்கும் ஆபத்து உள்ளது அவர்களை எழுப்பி விட்டு இவர்கள் உட்கார்ந்து விடுவார்கள். ஓபிஎஸ்¸ இபிஎஸ் பாஜகவை பற்றி பேசினால் பதிலளிக்கலாம்¸ மற்றவர்கள் (ஜெயக்குமார் போன்றோர்)வாய்க்கு வந்தபடி பேசுவார்கள். திமுகவை சித்தாந்த ரீதியாகவும்¸ செயல்பாடு ரீதியாகவும் பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது 35 நாட்களுக்குள் 7 லாக்கப் டெத் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் காவல்துறை உள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியாக யாரை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கலாம் என்ற கவனத்தை டிஜிபி சட்டம் ஒழுங்கில் காட்ட வேண்டும். 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படுவதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம். ஆன்மீகவாதிகள் கிரிவலம் வரும் பாதையில் நாத்திகவாதிக்கு சிலை வைப்பது அகம்பாவத்தின் உச்சகட்டம். அறிவாலயத்தில் வைத்தார்கள். வைத்துக் கொள்ளட்டும்¸ நாங்கள் ஏதும் சொல்லவில்லை. இலவச வீட்டு மனை பட்டா தரப்பட்ட இடத்தில் கருணாநிதிக்கு சிலை எப்படி வைக்க முடியும்? அங்கு வைப்பது இடைஞ்சலை தரும். வேறு ஏதாவது இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வணங்கும் ஆன்மிகவாதிகள் இவரது முகத்தை பார்ப்பதா? இதை ஏற்க மாட்டோம். சட்ட குழுவினரோடு கலந்தாலோசித்து கோர்ட்டுக்கு செல்வோம். நாளைக்கே செல்ல தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது  பா.ஜ.க மாவட்டத் தலைவர் ஆர்.ஜீவானந்தம்¸ மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சதீஷ்குமார், மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார்¸ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் டி.எஸ்.சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர். 

See also  ரஜினியால் திமுகவுக்கு பாதிப்பா? பொன்முடி பதில்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!