Homeஅரசியல்கோயில் சுவற்றில் திமுக விளம்பரம்- பாஜக எதிர்ப்பால் அழிப்பு

கோயில் சுவற்றில் திமுக விளம்பரம்- பாஜக எதிர்ப்பால் அழிப்பு

கோயில் சுவற்றில் திமுக விளம்பரம்- பாஜக எதிர்ப்பால் அழிப்பு

திருவண்ணாமலையில் கோயில் சுவற்றில் எழுதப்பட்டிருந்த திமுக விளம்பரம் பாஜகவின் கடும் எதிர்ப்பால் அழிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலைக்கு வர உள்ளார். அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில் திமுகவினர் இறங்கியுள்ளனர். ஆங்காங்கே சுவற்றில் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறது. 

திருவண்ணாமலை நகரிலும் பல இடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச் சுவரிலும் திமுக விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. இப்பள்ளியின் அருகில் நந்தன விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் சுற்றுச் சுவர் முழுவதும் திமுக விளம்பரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

கோயில் சுவற்றில் திமுக விளம்பரம்- பாஜக எதிர்ப்பால் அழிப்பு

கோயில் சுவற்றில் திமுக விளம்பரம் எழுதப்பட்டிருப்பதை பார்த்து ஆவேசம் அடைந்த பாஜகவினர்¸ ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் தலைமையில் அந்த இடத்தில் திரண்டனர். சுவரில் இருந்த திமுக விளம்பரத்தை அழிக்க தொடங்கினர். தகவல் கிடைத்ததும் அங்கு வந்த நகர போலீசார்¸ பாஜகவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். எழுதிய திமுகவினரே விளம்பரத்தை அழிப்பதாக சொல்லியிருப்பதாக அவர்களிடம் போலீசார் தகவல் தெரிவித்தனர். 

கோயில் சுவற்றில் திமுக விளம்பரம்- பாஜக எதிர்ப்பால் அழிப்பு

சிறிது நேரத்தில் திமுகவினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளி ஒருவர்¸ கோயில் சுவற்றில் எழுதியிருந்த விளம்பரங்கள் அனைத்தையும் அழித்தார். அதன்பிறகு ஜெய்¸ ஜெய் கணேசா என்ற கோஷத்தை எழுப்பி விட்டு பாஜகவினர் கலைந்து சென்றனர். 

கோயில் சுவற்றில் திமுக விளம்பரம்- பாஜக எதிர்ப்பால் அழிப்பு

இந்த போராட்டத்தில் மாநில துணைத் தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியம்¸ மாவட்ட செயலாளர்கள் சிவசங்கர். பிச்சாண்டி¸ இளைஞரணி பொதுச் செயலாளர் மூவேந்தன்¸ தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரதீஷ்குமார்¸ முன்னாள் மாவட்ட துணை தலைவர் கவிதா¸ அருண்¸ எஸ்.ஆர்.எஸ்.செல்வம்¸ ஏ.சி.விஜய்¸ ஜி.எஸ்.மணி¸ பி.எம்.ஆர். சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாஜகவினரின் போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!