Homeசுகாதாரம்சம்பள பணம் எங்கே? சஸ்பெண்ட் செய்து விடுவேன்

சம்பள பணம் எங்கே? சஸ்பெண்ட் செய்து விடுவேன்

சம்பள பணம் எங்கே? சஸ்பெண்ட் செய்து விடுவேன்

சாணானந்தல் பள்ளியில் 2 வருடமாக துப்புரவு பணியாளர் இல்லாத நிலையில் சம்பள பணம் ஒதுக்கப்பட்டிருப்பது கலெக்டர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து அந்த பணியாளர் இடத்திற்கான சம்பளம் எங்கே சென்றது? என கிடுக்குப்பிடி பிடித்த கலெக்டர் முருகேஷ்¸ தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து விடுவேன் என எச்சரித்து கணக்கு வழக்கு விவரங்களை தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை-அவலூர்பேட்டை ரோட்டில் உள்ளது சாணானந்தல் கிராமம். துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கியுள்ள இந்த ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதை  மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

- Advertisement -

ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.65 லட்சம் மதிப்பீட்டில் வட்டார நாற்றாங்கால் அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நாற்றாங்கால் பண்ணையில் பழச்செடிகள் நடவு செய்யும் முறை¸ மாட்டுத் தீவனங்களுக்கான விதையினை தூவி நடவு பணியினை பார்வையிட்டார்.

சம்பள பணம் எங்கே? சஸ்பெண்ட் செய்து விடுவேன்

மேலும் முருங்கை¸ பலா¸ கொய்யா¸ நெல்லி¸ சீத்தா போன்ற பழ வகை கன்றுகள் நடும் பணியினை கேட்டறிந்தார். இது போன்ற மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  மேலும் மண்புழு உரங்கள் தயாரிக்கும் பணியினையையும் நேரில் பார்வையிட்டு தயாரிக்கும் முறையினையையும் கேட்டறிந்தார். 10 நாட்களுக்குள் வளர்ந்து பலன் தரக்கூடிய ஆடு¸ மாடு¸ மீன்களுக்கு உணவாக வழங்கப்படும் அசோலா வளர்ப்பு முறையை பற்றியும் கேட்டறிந்தார்.  இந்த அசோலாவினை வளர்ப்பதற்கு விவசாயிகள் விரும்பினால் அவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் தெரிவித்த கலெக்டர் முருகேஷ்; அங்கு ரூ.9.40 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை அளகு செயல்படுத்தப்படும் முறையினை குறித்தும் ஆய்வு செய்தார்.

தூய்மை பாரத இயக்கம் சார்பில் வட்டத்திற்கு ஒரு இயந்திரம் வழங்கப்பட்டு¸ பிளாஸ்டிக்கை மறு சுழற்சி முறையில் சுத்தம் செய்து அதனை வீட்டு உபயோக பொருட்களான நாற்காலி தயாரித்தல் மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களை தயாரிப்பதற்கு இந்த இயந்திரத்தினை பயன்படுத்தி மாதம் ஒன்றுக்கு 1.40 டன் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி முறையில் சுத்தம் செய்து பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இப்பணிக்கு மகளிர் சுயஉதவிக்குழுக்களை இணைத்து உற்பத்தியினை பெருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

சம்பள பணம் எங்கே? சஸ்பெண்ட் செய்து விடுவேன்

பிறகு சாணானந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்படும் சத்துணவினையையும்¸ குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த அவர் மாணவ¸ மாணவியர்களுக்கு பாடவாரியாக வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிறதா என்பதனையும் கேட்டறிந்தார். பின்னர் மாணவ¸ மாணவியர்களின் வகுப்பறைக்கு நேரில் சென்று அவர்களுடன் உரையாடி நீங்கள் எல்லாம் நல்லமுறையில் கல்வியை பயின்று வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

பள்ளியை சுற்றிப்பார்த்த கலெக்டர் முருகேஷ்¸ சுகாதார குறைபாடு இருப்பதை பார்த்து துப்புரவு பணியாளர் எங்கே? என தலைமையாசிரியரிடம் கேட்டார். அதற்கு அவர் வயது மூப்பின் காரணமாக அவர் வேலையிலிருந்து நின்று விட்டதாக தெரிவித்தார். எத்தனை நாட்களாக துப்புரவு பணியாளர் இல்லை என கலெக்டர் கேட்டதற்கு 2 வருடமாக இல்லை என தலைமையாசிரியர் பதிலளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர். அப்படியானால் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சம்பளம் எங்கே செல்கிறது? என கேட்டார். சம்பளம் வருவதில்லை என தலைமையாசிரியர் சொல்ல¸ சம்பளம் வழங்கி வருகிறோம் என ஒன்றிய ஆணையாளர் பதிலளித்தார்.

சம்பள பணம் எங்கே? சஸ்பெண்ட் செய்து விடுவேன்
தலைமையாசிரியரிடம் விசாரணை

துப்புரவு பணியாளருக்கான சம்பளம் எங்கே? என கலெக்டர் மீண்டும் கேட்க¸ அதற்கு தலைமையாசிரியர் பதிலளிக்காமல் துப்புரவு பணியாளர் நியமிக்க வேண்டும் என கடிதம் அனுப்பி விட்டதாக தெரிவித்தார். கொரோனா முடிந்து பள்ளி திறக்கப்பட்டதும் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் பணியாளரை நியமிக்காதது ஏன்? என்று கலெக்டர் கோபமாக கேட்டார். உங்க பாக்கெட்டிலிருந்து அல்லது ஊராட்சி தலைவர் பாக்கெட்டிலிருந்தா சம்பளம் தருகிறீர்கள்? அரசு சம்பளம் தரும் போது நியமிக்காதது ஏன்? அந்த பணம் எங்கே செல்கிறது? என கேட்டார். 1 வாரத்திற்குள் துப்புரவு பணியாளர் நியமித்திட வேண்டும் என உத்தரவிட்ட கலெக்டர் முருகேஷ்¸ துப்புரவு பணியாளர் சம்பள விவர கணக்குகளை தன்னிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும்¸ இல்லையென்றால் தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து விடுவேன் என எச்சரித்தார்.

அப்போது கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல்¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் உமாலட்சமி¸ உதவி இயக்குநர் கருணாநிதி¸ துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி¸ விஜயலட்சுமி¸ வட்டாட்சியர் சுரேஷ்¸ சாணானந்தல் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஷ்வரி¸ உதவி பொறியாளர்கள் தன்வந்தன்¸ அருணா மற்றும் பலர் உடனிருந்தனர்.

- Advertisement -
email
contact@agnimurasu.com -ல் செய்தி, கட்டுரைகளை அனுப்பலாம்.

Must Read

error: Content is protected !!