Homeசெய்திகள்திருவண்ணாமலை: குரூப் 4 தேர்வில் 9727 பேர் ஆப்சென்ட்

திருவண்ணாமலை: குரூப் 4 தேர்வில் 9727 பேர் ஆப்சென்ட்

திருவண்ணாமலை: குரூப் 4 தேர்வில் 9700 பேர் ஆப்சென்ட்

திருவண்ணாமலையில் குரூப் 4 தேர்வில் 9727 பேர் ஆப்சென்ட் ஆனார்கள்.நேரம் தவறி வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் ஒரு பெண் கண்ணீர் விட்டு அழுதார். 

தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிசி மூலம் கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையர் என 7301 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. இப்பணிக்காக 21 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதன் மூலம் ஒரு பணிக்கு 300 பேர் போட்டியிட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 76 ஆயிரத்து 123 பேரில், 66 ஆயிரத்து 407 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 9ஆயிரத்து 727 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். தேர்வு எழுத வராதவர்கள் சதவீதம் 12.8 ஆகும். தேர்வு எழுதுபவர்களுக்காக 174 பள்ளிகள், 85 கல்லூரிகள் என 259 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

முறைகேடு நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க 34 பறக்கும் படைகளும், 53 மொபைல் யூனிட் அலுவலர்கள் மற்றும் 259 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் தேர்வு பணிகள் அனைத்தும் 272 வீடியோகிராபர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டன.

ஒவ்வொரு தாலுகாவிலும் தேர்வு எழுதியவர்கள் விவரம்

திருவண்ணாமலை: குரூப் 4 தேர்வில் 9700 பேர் ஆப்சென்ட்

திருவண்ணாமலையில் உள்ள 69 மையங்களில் வருகை புரிந்தவர்கள் 17560, வருகை புரியாதவர்கள் 3,220. ஆரணியில் உள்ள 11 மையங்களில் வருகை புரிந்தவர்கள் 11210 வருகை புரியாதவர்கள் 1675,  செங்கத்தில் உள்ள 11 மையங்களில் வருகை புரிந்தவர்கள் 5282, வருகை புரியாதவர்கள் 814. சேத்பட்டில் உள்ள 10 மையங்களில் வருகை புரிந்தவர்கள் 2893, வருகை புரியாதவர்கள் 322 செய்யாறில் உள்ள 24 மையங்களில்  வருகை புரிந்தவர்கள் 6193 வருகை புரியாதவர்கள் 790 . ஜமுனாமரத்தூரில் உள்ள 3 மையங்களில் வருகை புரிந்தவர்கள் 975 வருகை புரியாதவர்கள் 83. கலசபாக்கத்தில் உள்ள 10 மையங்களில்  வருகை புரிந்தவர்கள் 2951 வருகை புரியாதவர்கள் 359.  கீழ்பென்னாத்தூரில் உள்ள 11 மையங்களில்  வருகை புரிந்தவர்கள் 2525 வருகை புரியாதவர்கள் 424. போளுரில் உள்ள 25 மையங்களில்  வருகை புரிந்தவர்கள் 5863, வருகை புரியாதவர்கள் 671. தண்டராம்பட்டில் உள்ள 14 மையங்களில்  வருகை புரிந்தவர்கள் 3330, வருகை புரியாதவர்கள் 496. வந்தவாசியில் உள்ள 22 மையங்களில்  வருகை புரிந்தவர்கள் 5818 வருகை புரியாதவர்கள் 704. வெம்பாக்கத்தில் உள்ள 8 மையங்களில் வருகை புரிந்தவர்கள் 1802 வருகை புரியாதவர்கள் 169.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேனிலைப்பள்ளி மற்றும் வி.டி.எஸ்.ஜெயின் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற குரூப் 4 தேர்வினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காலை 9 மணிக்கு தேர்வு தொடங்கி பகல் 12-30 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு மையங்களில் 9.05 வரை தேர்வாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். திருவண்ணாமலை அடுத்த சின்னகாங்கேயனூர் பள்ளி தேர்வு மையத்தில் பெண் ஒருவர் 9-15மணிக்கு வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர் மனமுடைந்து அழுதபடி பள்ளி அருகில் உட்கார்ந்திருந்தார். அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!