Homeஅரசு அறிவிப்புகள்செங்கல் சூளைகளுக்கு ரூ.60 ஆயிரம் கட்டணம் நிர்ணயம்

செங்கல் சூளைகளுக்கு ரூ.60 ஆயிரம் கட்டணம் நிர்ணயம்

செங்கல் சூளைகளுக்கு ரூ.60 ஆயிரம் கட்டணம் நிர்ணயம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேம்பர் சூளை, நாட்டு செங்கல் சூளைகள் கட்டணம் செலுத்தாமல் இயங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

சேம்பர் சூளை மற்றும் நாட்டு செங்கல் சூளைக்கு அனுமதி வழங்குவதற்கு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் சேம்பர் சூளை மற்றும் நாட்டு செங்கல் சூளைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி அனைத்து சூளை உரிமைதாரர்களும் விண்ணப்பக்கட்டணமாக ரூ.1500ம், பதிவு கட்டணமாக ரூ.300ம் செலுத்த வேண்டும். மேலும் சேம்பர் செங்கல் சூளைக்கு ஆண்டு கனிம கட்டணமாக ரூ.60,000 மற்றும் நாட்டு செங்கல் சூளைக்கு ஆண்டு கனிம கட்டணம் ரூ.12,000 ஆகியவற்றை மாவட்ட கருவூலத்தில் செலுத்திட வேண்டும்.

அசல் செலுத்து சீட்டுடன் களிமண் வெட்டி எடுக்க கூடிய புலத்தின் கிராம கணக்குகளுடன், பிறர் நிலமெனில் பட்டாதாரரிடமிருந்து மண் எடுக்க பெறப்பட்டதற்கான இசைவு கடிதம் ஆகியவற்றுடன் இணைப்பு IV-A   படிவம் 1–ன் படி துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து செங்கல் சூளை உரிமம் பெற்றுக் கொள்ள சேம்பர் சூளை மற்றும் நாட்டு செங்கல் சூளை உரிமைதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செங்கல் சூளைகளுக்கு ரூ.60 ஆயிரம் கட்டணம் நிர்ணயம்
 
உரிய அனுமதியின்றி இயங்கும் சேம்பர் சூளை மற்றும் நாட்டு செங்கல் சூளை உரிமைதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் முதல் தளத்தில் இயங்கும் துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தை அணுகுமாறு சேம்பர் சூளை மற்றும் நாட்டு செங்கல் சூளை உரிமைதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
See also  தீபாவளி பலகாரத்தில் குறைபாடா? புகார் தெரிவிக்கலாம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!