Homeசெய்திகள்பள்ளி பஸ்சை லாவகமாக ஓட்டிச் சென்ற கலெக்டர் முருகேஷ்

பள்ளி பஸ்சை லாவகமாக ஓட்டிச் சென்ற கலெக்டர் முருகேஷ்

பள்ளி பஸ்சை லாவகமாக ஓட்டிச் சென்ற கலெக்டர் முருகேஷ்

பள்ளி பஸ்சை ஓட்டிச் சென்று அலுவலகத்தை ரவுண்டு வந்த கலெக்டர் முருகேஷ், சர்வ சாதாரணமாக பஸ்சை இயக்கியதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இன்று தனியார் பள்ளி பஸ்கள்¸ விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்படுகின்றனவா? என்ற ஆய்வை அதிகாரிகள் குழு நடத்தியது. இதை மேற்பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் திருவண்ணாமலையில் மணலூர் பேட்டை ரோட்டில் உள்ள விஜய் வித்யாலாயா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் பஸ்சை டிரைவர் சீட்டில் உட்கார்ந்து இயக்கினார். 

பள்ளி பஸ்சை லாவகமாக ஓட்டிச் சென்ற கலெக்டர் முருகேஷ்

விளையாட்டு மைதானம்¸ மாற்று திறனாளிகள் அலுவலகம்¸ கலெக்டர் அலுவலகம் வழியாக பஸ்சை ஓட்டிச் சென்ற கலெக்டர் மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து பஸ்சை நிறுத்தினார். கலெக்டர், சர்வ சாதாரணமாக¸ வளைவுகளில் லாவகமாக திருப்பி பஸ்சை ஓட்டிச் சென்று ரவுண்டு வந்தததை அங்கிருந்தவர்கள் ஆச்சிரியத்துடன் பார்த்தனர்.

கலெக்டருடன் பஸ்சில்¸ வட்டார போக்குவரத்து அலுவலர் குமாரா¸ கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பயணம் செய்தனர். 

இந்நிலையில் பள்ளி வாகனங்களை  இயக்க 10 கட்டுப்பாடுகளை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் விதித்துள்ளார். கூட்டாய்வுக்கு உட்படுத்தப்படாத வாகனங்களை இயங்க அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸ 

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் பள்ளி மாணவர்கள் பள்ளி பேருந்துகளில் சிரமமின்றியும் விபத்தின்றியும் பயணம் செய்யும் வண்ணம் அரசு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி பேருந்துகளை ஆண்டுக்கு ஒருமுறை கூட்டாய்வு செய்த பின்னரே பொது சாலையில் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி பேருந்துகளையும் மோட்டார் வாகனம் மற்றும் விதிகளின்படி வாகனங்கள் நடப்பில் உள்ள ஆவணங்களுடன் வாகனம் பொது சாலையில் இயக்குவதற்கு தகுதி உள்ளவைதானா என கூட்டாய்வு செய்த பின்னரே இயக்க வேண்டும்.  

இதற்காக வருவாய் கோட்டாட்சியரை தலைவராகவும், வட்டார போக்குவரத்து அலுவலர், காவல் துணை கண்காணிப்பாளர்,  முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1 மற்றும் 2 ஆகியோரை உறுப்பினராக கொண்டு மாவட்ட அளவிலான இடைநிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளி பஸ்சை லாவகமாக ஓட்டிச் சென்ற கலெக்டர் முருகேஷ்

வாகனங்கள் இயக்கத்தின்போதும் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து கல்வி நிறுவன பேருந்துகளுக்கும் அனுமதி சீட்டு(Permit)  நடப்பில் இருக்க வேண்டும்.

பொதுச்சாலையில் இயக்குவதற்கு தரமான வாகனம் என நடப்பில் உள்ள தகுதி சான்று (Fitness Certificate Validity) பெற்ற பின்னரே பொது சாலையில் இயக்கப்பட வேண்டும்.

நடப்பில் உள்ள காப்பு சான்று (Insurance Certificate Validity)ஆய்வுக்கு இருக்க வேண்டும்.

நடப்பு சாலை வரி (Current Road Tax) செலுத்திய பின்னரே வாகனம் பொதுசாலையில் இயக்கப்பட வேண்டும்.

நடப்பு புகை சான்று (Pollution Certificate) ஆய்வுக்கு இருக்க வேண்டும்.

கல்வி நிலைய பேருந்து இயக்கும் போது ஓட்டுநர்¸ உதவியாளர் சீருடையில் இருக்க வேண்டும்.

மோட்டார் வாகன விதி மற்றும் சட்டத்திற்குட்பட்டு கல்வி நிலைய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

நடப்பில் உள்ள ஆவணங்களின்றி பள்ளி வாகனம் பொது சாலையில் இயக்கப்படுமானால் அவற்றை மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு  சிறைபிடிப்பதோடு வாகனத்தின் அனுமதிசீட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி பேருந்துகள் மாணவர்களை அழைத்துச்செல்வதால் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.  

மாவட்ட ஆய்வுக்குழுவினரால் அனுமதிக்கப்பட்ட பள்ளி வாகனங்கள் மட்டுமே பள்ளி குழந்தைகளை அழைத்துவர உபயோகப்படுத்த வேண்டும்.

பள்ளி பஸ்சை லாவகமாக ஓட்டிச் சென்ற கலெக்டர் முருகேஷ்

கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்கள்  பொது சாலையில் இயக்க அனுமதி அளிக்கப்படமாட்டாது. 

இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை ஆர்.டி.ஓ அலுவலத்திற்கு உட்பட்டு 525 தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் வேக கட்டுப்பாட்டு கருவி¸ தீ தடுப்பு உபகரணங்கள்¸ அவசர வழி உள்ளிட்ட அரசின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என அதிகாரிகள் குழு சோதனை செய்தது. 

இன்று¸ பள்ளி பேருந்துகள் 439 ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.  அவற்றில் 47 பள்ளி பேருந்துகளில் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது.  அக்குறைகளை நிவர்த்தி செய்து மீளவும் கூட்டாய்விற்கு குழுவின் முன்பு வாகனத்தை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

See also  இறந்த குரங்கிற்கு இறுதி சடங்கு செய்த கிராம மக்கள்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!