Homeஅரசியல்பவுர்ணமி நாளில் கருணாநிதி சிலைக்கு தீபாராதனை

பவுர்ணமி நாளில் கருணாநிதி சிலைக்கு தீபாராதனை

பவுர்ணமி நாளில் கருணாநிதி சிலைக்கு தீபாராதனை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கருணாநிதி சிலைக்கு பவுர்ணமி நாளில் திமுகவினர் படையல் போட்டு தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

திருவண்ணாமலை-போளுர் ரோடு கிரிவலப்பாதை சந்திப்பில் தனியார் இடத்தை விலைக்கு வாங்கி திமுக சார்பில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை அமைக்க இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கார்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கையடுத்து சென்னை உயர்நீதி மன்றம் சிலை வைக்க தடை விதித்தது. பிறகு கார்த்தி வழக்கை வாபஸ் பெற்றார். இதை தொடர்ந்து அந்த இடத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது. லட்சக்கணக்கானோர் கிரிவலம் வரும் பாதையில் நிறுவப்பட்டுள்ள 9 அடி உயர கருணாநிதி சிலையை கடந்த 8ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

பவுர்ணமி நாளில் கருணாநிதி சிலைக்கு தீபாராதனை

மு.க.ஸ்டாலின் வருகைக்கு முன்னதாக திருவண்ணாமலைக்கு வந்த பாஜக முன்னாள் தேசியத் தலைவர் எச்.ராஜா, கிரிவலப்பாதையில் இடையூறாக கருணாநிதி சிலை வைக்கபட்டுள்ளதா? என்பதை நேரில் பார்வையிட்டார். சிலை உள்ள இடத்திற்கு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகு தான் 250 சதுர அடிக்கு பட்டா வழங்கப்பட்டது 92அடியாக மாறியது என்ற அவர் கிரிவலம் வருபவர்களுக்கு கண் உறுத்துகிற மாதிரி நாத்திகர் சிலை இங்கிருப்பது தவறு, இதை எதிர்த்து ஆன்மீக சக்திகளை இணைத்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றார். 

பவுர்ணமி நாளில் கருணாநிதி சிலைக்கு தீபாராதனை

கருணாநிதி சிலையை திறந்து வைத்து ஸ்டாலின் பேசுகையில் திருவண்ணாமலையும், தீபத்தையும் பிரித்து பார்க்க முடியாது. அதுபோல் திருவண்ணாமலையும், திமுகவையும் பிரித்து பார்க்க முடியாது. தமிழ்மொழியை காக்கவும், இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கவும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டிய திருவண்ணாமலையில் அண்ணா நுழைவு வாயில் மற்றும் கருணாநிதி சிலை அமைத்திருப்பது பொருத்தமானது என்று பாஜகவுக்கு பதிலடி தரும் வகையில் பேசினார். 

பவுர்ணமி நாளில் கருணாநிதி சிலைக்கு தீபாராதனை

பவுர்ணமி நாளில் கருணாநிதி சிலைக்கு தீபாராதனை
பவுர்ணமி நாளில் கருணாநிதி சிலைக்கு தீபாராதனை

பவுர்ணமி நாளில் கருணாநிதி சிலைக்கு தீபாராதனை

இந்நிலையில் ஆனி மாத பவுர்ணமியை யொட்டி இன்று மாலை கருணாநிதி சிலை உள்ள இடத்திற்கு அமைச்சர் எ.வ.வேலுவின் மகனும், மாநில மருத்துவ அணி துணைத் தலைவருமான எ.வ.வே.கம்பன் தலைமையில் வந்த திமுகவினர், அவரது சிலையின் பீடத்தில் பொரி கடலை, பழங்கள் வைத்து படையலிட்டனர். பிறகு தேங்காய் உடைத்து கருணாநிதிசிலைக்கு  தீபாராதனை காட்டி வணங்கினர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புளி சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், சுண்டல் ஆகியவற்றை அன்னதானமாக வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நகர திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

வழக்கமாக பெரிய தெருவில் பழைய மாவட்ட திமுக அலுவலகம் செயல்பட்டு வந்த இடத்தில், கார்த்திகை தீபம், சித்ரா பவுர்ணமி அன்று மட்டுமே பக்தர்களுக்கு திமுகவினர் அன்னதானம் வழங்குவார்கள். இப்போது முதன்முறையாக பவுர்ணமி நாளில் கருணாநிதி சிலை முன்பு அன்னதானம் வழங்குவதை தொடங்கியுள்ளனர்.  

பவுர்ணமி நாளில் கருணாநிதி சிலைக்கு தீபாராதனை

இதற்கிடையில் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இன்று இரவு அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். கொரோனா நோயிலிருந்த தந்தை பூரண குணமடைய அவர் அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. 

See also  6 வார்டுகள் புறக்கணிப்பா? அமைச்சர் விளக்கம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!