Homeசெய்திகள்ஏன் தோத்தீங்க தெரியுமா? மாணவனுக்கு விளக்கினார் கலெக்டர்

ஏன் தோத்தீங்க தெரியுமா? மாணவனுக்கு விளக்கினார் கலெக்டர்

https://www.agnimurasu.com/2022/07/blog-post_16.html

திருவண்ணாமலை சிஷ்யா பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டியில் தோல்வியுற்ற மாணவனுக்கு செஸ் விளையாட்டின் நுணுக்கங்களை கலெக்டர் சொல்லி கொடுத்தார். 

மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்ப்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28.07.2022 அன்று நடைபெற உள்ளது.

இதற்காக தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, இச்செஸ் போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென அறிவுறுத்தினார். 

ஏன் தோத்தீங்க தெரியுமா? மாணவனுக்கு விளக்கினார் கலெக்டர்

இதனை தொடர்ந்து இன்று (16.07.2022) 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 800க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் 17க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்குப் பெற்ற சதுரங்க போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் துவக்கி வைத்து பார்வையிட்டு, வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கினார்.

ஏன் தோத்தீங்க தெரியுமா? மாணவனுக்கு விளக்கினார் கலெக்டர்

ஏன் தோத்தீங்க தெரியுமா? மாணவனுக்கு விளக்கினார் கலெக்டர்

ஏன் தோத்தீங்க தெரியுமா? மாணவனுக்கு விளக்கினார் கலெக்டர்

போட்டியை உற்று கவனித்த மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், தோல்வி அடைந்த மாணவனுக்கு செஸ் காய்களை, இப்படி நகர்த்தியிருந்தால் ஜெயித்திருப்பீர்கள் என காய்களை நகர்த்தி காட்டி செஸ் விளையாட்டின் நுணுக்கத்தை சொல்லி கொடுத்தார். வெற்றி பெற்ற மாணவனை தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டினார். 

ஏன் தோத்தீங்க தெரியுமா? மாணவனுக்கு விளக்கினார் கலெக்டர்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நான்சி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், மாவட்ட முதன்னமை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளா வெங்கடரமனன், திருவண்ணாமலை வட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல், சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்  வி.என்.நேரு, சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் என்.மகாதேவன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக பள்ளிக்கு வந்த கலெக்டரை, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையுடன் முகத்தில் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை குறிக்கும் மாஸ்க்கை அணிந்து மாணவர்கள் வரவேற்றனர். 

https://www.agnimurasu.com/2022/07/blog-post_16.html

ஏன் தோத்தீங்க தெரியுமா? மாணவனுக்கு விளக்கினார் கலெக்டர்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் முன்பு செஸ் பலகை போன்று பிரம்மாண்டமாக கருப்பு வெள்ளை கட்டம் வரையப்பட்டுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!