போலீஸ்-சிறை காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி அரசு சார்பில் திருவண்ணாமலையில் அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பபட்டுள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்காக சுமார் 3552 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்கள் முதல் எஸ்.சி, எஸ்.டி,SC/SCA/ST மற்றும் மூன்றாம் பாலினம் சார்ந்தவர்கள் 31 வயதிற்குள்ளும், BC/MBC/BCM 28 வயதிற்குள்ளும், OC 26 வயதிற்குள்ளும், ஆதரவற்ற விதவைகள் 37 வயதிற்குள்ளும், முன்னாள் இராணுவத்தினர் 47 வயதிற்குள்ளும் உள்ளவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 15.08.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
இப்போட்டி தேர்விற்கு திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 25.07.2022 அன்று முதல் நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பாடபிரிவிற்கும் தனித்தனி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.
இப்போட்டித்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.