Homeசெய்திகள்மழையில் நனைந்த மாணவர்கள்-அதிகாரிகளை திட்டி தீர்த்த பெற்றோர்கள்

மழையில் நனைந்த மாணவர்கள்-அதிகாரிகளை திட்டி தீர்த்த பெற்றோர்கள்

மழையில் நனைந்த மாணவர்கள்-அதிகாரிகளை திட்டி தீர்த்த பெற்றோர்கள்

அமைச்சர் கலந்து கொண்ட ஒலிம்பியாட் ஜோதி பேரணிக்காக மாணவ-மாணவியர்களை மழையில் நனைய விட்ட அதிகாரிகளை பெற்றோர்கள் திட்டி தீர்த்தனர்.

சென்னை மாமல்லபுரத்தில் பூஞ்சேரி கிராமத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்ப்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா மிக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28.07.2022 அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு  ஒலிம்பியாட் ஜோதி பேரணியை அமைச்சர் எ.வ.வேலு இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணிக்காக ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். 

திருவண்ணாமலையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. சில மணி நேரங்களில் 16.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகாலையில் சிறிது சிறிதாக குறைந்த மழை தூறலாக மாறியது. அதே சமயம் கீழ்பென்னாத்தூர் போன்ற சுற்றுப்புறங்களில் மழை வெளுத்து வாங்கியது. மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஒலிம்பியாட் ஜோதி பேரணிக்காக விடுமுறை அளிக்காமல் மாவட்ட நிர்வாகம் அமைதி காத்தது. 

மழையில் நனைந்த மாணவர்கள்-அதிகாரிகளை திட்டி தீர்த்த பெற்றோர்கள்

இதனால் பெற்றோர்கள் மழையில் நனைந்தபடி பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். அதே சமயம் ஒலிம்பியாட் ஜோதி பேரணிக்காக காலை 6 மணிக்கு வரவழைக்கப்பட்ட மாணவ-மாணவியர்கள் ஆங்காங்கே மழையில் நனைந்தபடி அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது அதிக மழை பெய்தது. இதனால் மாணவ-மாணவியர்கள் அருகில் இருந்த கடைகளின் முன்பு போடப்பட்டிருந்த கூரையின் கீழே சென்று நின்றனர். 

மழையில் நனைந்த மாணவர்கள்-அதிகாரிகளை திட்டி தீர்த்த பெற்றோர்கள்
மழையில் நனைந்த மாணவர்கள்-அதிகாரிகளை திட்டி தீர்த்த பெற்றோர்கள்

இந்நிலையில் பெரியார் சிலை அருகே ஒலிம்பியாட் ஜோதியை காலை 8 மணிக்கு அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார். பேரணி துவங்கியதால் மழையில் நனைந்த படி மாணவ- மாணவியர்கள் பங்கேற்றனர். உடல் நிலை சரியில்லாத மாணவியர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் குடை பிடித்து சென்றதை பார்க்க முடிந்தது. பிள்ளைகள் மழையில் நனைந்ததை கேள்விப்பட்டு அதிகாரிகளை பெற்றோர்கள் திட்டித் தீர்த்தனர். 

பேரணி பெரியார் சிலையிலிருந்து தொடங்கி காந்தி சிலை, இராஜகோபுரம், கடலைக்கடை சந்திப்பு, சக்தி தியேட்டர், கிருஷ்ணா லாட்ஜ், பூதநாராயண கோவில், அசோக்பில்லர், அறிவொளிபூங்கா, ராமகிருஷ்ணா ஒட்டல் வழியாக அண்ணா நுழைவு வாயில் அருகே முடிவடைந்தது. பேரணி செல்லும் வழிநெடுகிலும் ஆங்காங்கே மங்கல இசை,பறை இசை, தப்பாட்டம், பொய்க்கால குதிரை, கரகாட்டம், நாதஸ்வர இசை, கெண்டை மேளம், பாப்பாம்பாடி மேளம் உள்ளிட்ட பல்வேறு  சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

மழையில் நனைந்த மாணவர்கள்-அதிகாரிகளை திட்டி தீர்த்த பெற்றோர்கள்

காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ள அமைச்சர் எ.வ.வேலு பேரணியில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். அமைச்சர், அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் மழையினால் நனையாமல் இருக்க குடை பிடிக்கப்பட்டது. 

See also  கள்ளச் சாராய வேட்டை: திமுக கவுன்சிலர் கைது

பெரியார் சிலையிலிருந்து காந்தி சிலை வரை அமைச்சரும், காந்தி சிலையிலிருந்து இராஜகோபுரம் வரை சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டியும், ராஜகோபுரத்திலிருந்து கடலைக்கடை சந்திப்பு வரை எஸ்.கே.பி.பொறியயில் கல்லூரி முதல்வர் கருணாநிதியும்,  கடலைக்கடை சந்திப்பிலிருந்து சக்தி தியேட்டர் வரை தேசிய கைப்பந்து விளையாட்டு வீரர் மிதுன்குமாரும், சக்தி தியேட்டரிலிருந்து கிருஷ்ணா லாட்ஜ் வரை மாநில கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை கோகிலாவாணிவும், கிருஷ்ணா லாட்ஜிலிருந்து பூதநாராயண கோவில் வரை வர்த்த சங்கம் மற்றும் ஓட்டல் சங்க உரிமையாளர்களும், பூதநாராயண கோவிலிலிருந்து அசோக் பில்லர் வரை லயன்ஸ் கிளப் மற்றும் தன்னார்வலர்களும், அசோக் பில்லரிலிருந்து அறிவொளி பூங்கா வரை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களும், அறிவொளி பூங்கா முதல் அண்ணா நுழைவு வாயில் வரை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியும் ஒலிம்பியாட் ஜோதியினை ஏந்திச் சென்றனர். 

இந்த பேரணியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவிகள், தூய்மை அருணை இயக்கம் சார்ந்தவர்கள், வணிகர் சங்கங்கள், ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப், பார்அசோசியேசன், தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட 5000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

See also  எஸ்.டி சான்று கேட்டு 500 பேர் திரண்டனர்

இதைத் தொடர்ந்து ஈசான்ய மைதானத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது உலகளவில் தமிழகத்தை உற்று நோக்கும் விதமாக 187க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும்  44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்திற்கு வருவதற்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம். உக்ரைனில் நடக்க வேண்டியதை நான் நடத்துகிறேன் என மார்தட்டி தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததற்காக முதலமைச்சருக்கு இம்மாவட்டத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

பேரணியில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை,  மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, சட்டமன்ற உறுப்பினர்கள்; மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்),  ஓ.ஜோதி (செய்யார்), செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் எம்.எஸ்.தரணிவேந்தன்,   மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நான்சி, எ.வ.வே.கம்பன்,   திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திவேல்மாறன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். 

See also  கிரிவலப்பாதையில் விவேகானந்தர் சிலைக்கு அனுமதி கேட்கும் ஆசிரமம்

நிகழ்ச்சிகளை முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் இரா.ஸ்ரீதரன் தொகுத்து வழங்கினார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!