Homeசெய்திகள்பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்- குழு அமைப்பு -ஸ்டாலின்

பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்- குழு அமைப்பு -ஸ்டாலின்

பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்- குழு அமைப்பு -ஸ்டாலின்

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் நிச்சயமாக செய்து தரப்படும் என தெரிவித்த ஸ்டாலின்¸ பாஜகவை மறைமுகமாக தாக்கி பேசினார். 

திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அனைவரையும் வரவேற்றார். 

விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது¸

இன்றைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறக்கூடிய பல்வேறு மாபெரும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மதுரையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பெயரால் மாபெரும் நூலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

சென்னையில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமையப் போகின்றது. இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டுமென்றால்¸ சென்னை வங்கக் கடலோரம் வாஞ்சைமிகு தாலாட்டில்¸ தனது அண்ணனுக்கு அருகில் துயில் கொள்ளும்¸ நம்முடைய தலைவர் கலைஞருக்கு நினைவகம் நிறுவப்பட்டு வருகிறது. கடந்தகால ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்ட மாபெரும் திட்டமான மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்டச் சாலை அமையப் போகின்றது. கிழக்குக் கடற்கரைச் சாலை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இப்படி எண்ணற்ற பெரும் பணிகள்.

இவை அனைத்தையும் செயல்படுத்தும் பணிகளில் தன்னை ஒப்படைத்துக் கொண்டிக்கக்கூடியவர் தான் எ.வ.வேலு அவர்கள். கலைஞர் நினைவகமாக இருந்தாலும்¸ மதுரை நூலகமாக இருந்தாலும்¸ கிண்டி மருத்துவமனையாக இருந்தாலும்¸ இவையெல்லாமே வருங்காலத்தில் தமிழ்நாட்டின் அடையாளங்களாக மாறப் போகின்றது! அதனைச் சிறந்த செயல்வீரருக்கான அடையாளமாக இருக்கின்ற வேலு அவர்கள் அதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட அவருக்கு மட்டுமல்ல¸ எனக்கு மட்டுமல்ல¸ நம் அரசுக்கு மட்டுமல்ல¸ நம் மாநிலத்துக்கே பெருமைமிகு அடையாளங்களாக இவை அமையப் போகின்றது. 

கழக ஆட்சி அமைந்தாலே¸ திருவண்ணாமலை மாவட்டமானது புத்தெழுச்சி பெறும். அதை இங்கே கூடியிருக்கிற மக்களாகிய உங்கள் முகங்களில் நான் பார்க்கிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்கியதே தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்று நான் முன்பே சுட்டிக் காட்டினேன். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்துக் கொடுத்தவரும் கலைஞர்தான். சாத்தனூர் அணையைப் புனரமைப்பு செய்ததும் கழக ஆட்சியில் தான்! திருவண்ணாமலையை தனிப்போக்குவரத்து மண்டலமாக ஆக்கியதும் கழக ஆட்சியில் தான்! 

120 கோடி ரூபாயில் புதிய மருத்துவக் கல்லூரி¸ செய்யாறு சிப்காட் தொழிற் பூங்கா¸ ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம்¸ காரப்பட்டில் அரசு பட்டயக் கல்லூரி¸ திருவண்ணாமலை நகருக்கு புதிய பாதாள சாக்கடைத் திட்டம்¸ திருவண்ணாமலை நகராட்சிக்கு 36 கோடி ரூபாயில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்¸ புதிய விளையாட்டு அரங்கம்¸ புதிய நீச்சல் குளம்¸ செங்கம் குப்பநத்தம் அணை¸ போளுர் – செண்பகத்தோப்பு அணை¸ கலசப்பாக்கம் மிருகண்டாநதி நீர்த்தேக்கம்¸ தண்டராம்பட்டு தனி தாலுகா¸ தண்டராம்பட்டில் நுகர்பொருள் வாணிபக் கிடங்கு¸ புதுப்பாளையத்துக்கு சாத்தனூர் அணை கூட்டுக் குடிநீர்த் திட்டம்¸ அம்மாபாளையத்தில் 60 கோடி ரூபாயில் பால்பவுடர் தொழிற்சாலை¸ வந்தவாசியில் அரசுக் கல்லூரிக்கு 8 கோடி ரூபாயில் புதிய கட்டடம்¸ ஆரணியில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி.

பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்- குழு அமைப்பு -ஸ்டாலின்

இதில் மிக முக்கியமானது¸ 1975-ஆம் ஆண்டு அண்ணாமலையார் கோவில் அந்தத் திருப்பணியை முழுமையாக செய்தது கழக அரசு. இதைவிட முக்கியமாக இன்னொன்று¸ அண்ணாமலையார் கோவிலைப் பாதுகாத்ததும் கழக அரசுதான். அதைத் தொல்பொருள் துறை 2004-ஆம் ஆண்டு கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது பிரச்சாரத்திற்காக தலைவர் கலைஞர் அவர்கள் திருவண்ணாமலைக்கு வந்தார். அவரை ஊர் பொதுமக்களும்¸ பக்தர்களும் வந்து சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். “தொல்பொருள் துறை கட்டுப்பாட்டுக்குள் அது போனால்¸ ஆன்மிகப் பணிகள் தொய்வடையும்”- என்று சொன்னார்கள். அப்போது தலைவர் கலைஞர் சொன்னார்¸ “அடுத்து அமையும் ஆட்சியின் கவனத்துக்கு இதனைக் கொண்டு செல்வேன்” என்று உறுதி தந்தார்.

அன்றைக்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றிப் பெற்றோம். ஒன்றியத்தில் அமைந்த காங்கிரஸ் அரசிடம் பேசி¸ அண்ணாமலையார் கோவிலை பக்தர்களின் கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மறந்து விடக் கூடாது.

இன்றைக்கு¸ மதத்தின் பேரால் அரசியல் நடத்துபவர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது. அரசுடன் எண்ணத்திற்கேற்ப மீட்டுக் அண்ணாமலையார் கோவில் என்பது தமிழ்நாட்டின் சொத்து. அதைக் கட்டிக் காத்தது கழக அரசு! இவ்வாறு கழக அரசுக்கும் திருவண்ணாமலைக்கும் நீண்ட உறவு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான ஆன்மீகப் பணிகளும் நடந்து வருகிறது. அதன் முதல் கட்டமாக¸ தற்போது காந்தி சிலை முதல் திருவூடல் தெரு சந்திப்பு வரை ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ தூரத்திற்குப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அருணாசலேசுவரர் திருக்கோவில் வளாகத்தில் முதலுதவி மையத்தை காணொலி மூலமாக நான் ஏற்கனவே தொடங்கி வைத்தேன். அருள்மிகு திருஅண்ணாமலையார் வலம் வரும் நான்கு மாடவீதி சாலைகள்¸ கான்கிரீட் சாலைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டுமென்று நான் ஏற்கனவே சட்டபேரவையில் அறிவித்திருக்கிறேன்.

ஓதுவார் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டு மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். 1 கோடியே 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கோயில் மின்வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் 37 கோவில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கிராமப்புற பகுதியில் உள்ள 37 கோவில்களில் திருப்பணி செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

முன்னதாக நடைபெற்ற அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அவரது மருமகன் சபரீசன் பங்கேற்றார். கணவருடன் வந்திருந்த துர்கா ஸ்டாலின்¸ தனது குல தெய்வ கோயிலான மேல்மலையனூருக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

செய்யாறு அருள்மிகு பட்சீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 4.28 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை நகரம் அருள்மிகு வடவீதி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் மீட்கப்பட்டிருக்கிறது.

இந்த மாவட்டத்தில் மட்டும்¸ ஓராண்டில் 13 திருக்கோயில்களின் குடமுழுக்கு விழா சிறப்பாக¸ விமரிசையாக நடந்திருக்கிறது. 131 திருக்கோயில்களில் ரூ.6¸094 லட்சம் மதிப்பீட்டிலான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்போதும் என்னிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் வழிபாடு செய்யவும்¸ கிரிவலம் செல்லவும்¸ தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி¸ சித்ரா பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழாவின் போதும் கிரிவலம் செல்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அந்த கிரிவலத்திற்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த அரசு நிச்சயமாக சொல்கிறேன்¸ நிறைவேற்றித் தரும். 

திருவண்ணாமலை கிரிவலப்பாதை என்பது திருவண்ணாமலை நகராட்சி¸ அத்தியந்தல்¸ ஆணாய்ப் பிறந்தான்¸ அடி அண்ணாமலை¸ வேங்கிக்கால் ஆகிய 4 ஊராட்சிகளை உள்ளடக்கிய 14 கி.மீ தொலைவு கொண்டது. எனவே¸ கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக மின் விளக்குகள்¸ கண்காணிப்பு கேமராக்கள்¸ பொது அறிவிப்பு அமைப்பு ஆகியவற்றில் ஏற்படும் பழுதுகளும் உடனுக்குடன் சரிசெய்ய இயலாத நிலை இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு¸ அறநிலையத் துறையும்¸ உள்ளாட்சி அமைப்பையும் இணைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒரு குழு ஏற்படுத்தி¸ அந்த குழுவிற்கு¸ இந்தத் தொடர் செலவினங்களை முறைப்படுத்தி கண்காணிக்கவும் ஆவன செய்யப்படும் என்பதை நான் இங்கே அறிவிக்கிறேன்.

அதேபோல்¸ திருவண்ணாமலை மாவட்டத்திலும்¸ வேலூர் மாவட்டத்திலும்¸ இருக்கக்கூடிய ஜவ்வாது மலைப் பகுதியில் சுமார் 75000 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வாழக்கூடிய 20 மலைக் கிராமங்கள் இணைக்கக்கூடிய பரமனந்தல் ஜமுனாமுத்தூர் அமிர்தி சாலையை மேம்படுத்த வேண்டுமென்று இந்த வழியாக போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென்றும் கோரிக்கையை வைத்து வருகிறார்கள். இவர்கள் இந்த நீண்ட காலமாக கோரிக்கையை ஏற்று இதற்கான அறிக்கையை தயாரித்து வனத் துறையினுடைய விரிவான திட்ட அனுமதியைப் பெற்று 140 கோடி ரூபாய் செலவில் அது அகலப்படுத்தப்படும்¸

இவையெல்லாம் மதத்தை வைத்து அரசியல் செய்கின்ற கண்களுக்குத் தெரியாது. மதத்தை வைத்து அரசியல் செய்கின்றவர்களுக்கு¸ அவர்கள் கண்களுக்கெல்லாம் இது தெரியாது. ஏனென்றால் அவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகள் அல்ல¸ அவர்கள் உண்மையான ஆன்மீக வியாதிகள்! ஆன்மீகப் போலிகள்! ஆன்மீகத்தைத் தங்களது அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய எண்ணத்தைக் கொண்டவர்கள்! 

நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை! கட்சியானாலும்¸ ஆட்சியானாலும் மக்கள் முன் நின்று நாங்கள் ஆட்சி நடத்துறோம்¸ கட்சி நடத்துகிறோம்!! அதுதான் அனைத்துத் துறை வளர்ச்சி¸ அனைத்து மாவட்ட வளர்ச்சி¸ அனைத்துத் தொழில் வளர்ச்சி¸ அனைத்து சமூக வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை இன்றைக்கு நாம் நடத்தி வருகிறோம்.

முன்னதாக நடைபெற்ற அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அவரது மருமகன் சபரீசன் பங்கேற்றார். கணவருடன் வந்திருந்த துர்கா ஸ்டாலின்¸ தனது குல தெய்வ கோயிலான மேல்மலையனூருக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அந்த அடிப்படையில்தான் இந்து சமய அறநிலையத் துறை மூலமாகவும் சிறப்பான பணிகளை இந்த அரசு இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது. கோவிலுக்குத் திருப்பணி செய்வது திராவிட மாடலா? என்று சிலர் கேட்கிறார்கள்¸ கேள்வி எழுப்பி வருகிறார்கள். அனைத்துத் துறையையும் சமமாக வளர்ப்பதுதான் ‘திராவிடமாடல்’ என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்!

இன்னும் சொன்னால்¸ திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான நீதிக்கட்சி ஆட்சி காலத்தில்தான்¸ இந்துசமய அறநிலையத் துறை சட்டமே¸ சட்டமே போட்டோம்¸ 1925-ஆம் ஆண்டு அந்த சட்டம் உருவாக்கப்பட்டது. கோவில்களை முறைப்படுத்துவதற்காக¸ ஒரு சட்டம் வேண்டுமென்று ஆன்மீக எண்ணம் கொண்டவர்கள் கோரிக்கை வைத்தபோது அதனை ஏற்று¸ சட்டம் போட்ட ஆட்சிதான் நீதிக்கட்சியின் ஆட்சி. எது திராவிட மாடல்? என்று பிற்போக்குத்தனங்களுக்கும் பொய்களுக்கும் பெருமை எனும் முலாம் பூசி பேசுபவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆன்மீகத்தின் பெயரால் இன்றைக்கு அவர்கள் அரசியல் நடத்த முயற்சிக்கிறார்கள். ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல! ஆன்மீகத்தின் பெயரால் மனிதர்களை சாதியால்¸ மதத்தால் பிளவுபடுத்துபவர்களுக்குத்தான் அவர்களுக்கு நாங்கள் எதிரிகள். மனிதர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மீகம் இருக்க முடியாது. மனிதர்களைப் பிளவுபடுத்துவதற்கு ஆன்மீகத்தை பயன்படுத்துபவர்களும் உண்மையான ஆன்மீகவாதிகளாக அவர்கள் நிச்சயமாக இருக்க முடியாது.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதுதான் எங்கள் அறநெறி! ஒன்றே குலம்¸ ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் அறநெறி! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  என்பதுதான் எங்கள் அறநெறி! எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதுதான் எங்கள் அறநெறி. அத்தகைய அறநெறியைக் கொண்ட ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம்.

அறம் என்றால் என்னவென்றே தெரியாத¸ அறிவுக்கு ஒவ்வாத மூடக்கருத்துகளை முதுகில் தூக்கிச் சுமந்துக் கொண்டிருக்கும் சிலருக்கு போலியான பிம்பங்களைக் கட்டமைக்க வேண்டுமானால் உளறல்களும் பொய்களும் தான் தேவை! உள்கட்டமைப்பு புதிய மக்களுக்குத் தேவையான கல்வி சுகாதாரம் வசதிகள் வேளாண்மை தொழிலாளர் நலன்¸ வேலைவாய்ப்புகள் தொழில்கள் – புதிய முயற்சிகள் என்று தமிழ்நாடும் தமிழினமும் முன்னேற சிந்தித்து செயல்படுவதுதான்¸ திராவிட முன்னேற்றக் கழகம்! அதுதான் திராவிட அரசியல் மரபு!

அறிவார்ந்த யாரும்¸ எவரும் இந்த அரசுக்கு ஆலோசனைகள் சொல்லலாம். அதனை நாங்கள் செயல்படுத்துவோம். அறிவார்ந்தவர்கள் பேசுவதை மட்டுமே நாம் காதில் கேட்க வேண்டும்!  நமக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் காத்துக் கிடக்கிறது! இது தேர்தல் காலம் அல்ல! மக்களுக்கு நன்மை செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள காலம் இது. பொய்யும் புரட்டும் மலிவான விளம்பரம் தேடும் வீணர்களைப் பற்றி ஐ டோன்ட் கேர்! நான் மட்டுமல்ல- நீங்கள் ஒவ்வொருவரும்- ‘ஐ டோண்ட் கேர்’ என்று சொல்லி நகர வேண்டும்!

அப்படி பொய்களை அநாதைகளாக விட்டு¸ உண்மை எனும் வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு நடந்தாலே¸ நாம் முன்னேறலாம்! நம்முடைய இலக்குகளை அடையலாம்! நான் இங்கே இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளுக்கும்¸ அரசு அதிகாரிகளுக்கும் சொல்ல விரும்புவது¸ காலம் பொன் போன்றது¸ கடமை கண் போன்றது என்பதை யாரும் மறக்க வேண்டாம்!

கலைஞர் அவர்கள் சொல்வார் “கோப்புகள் சிகப்பு நாடாவிலே கட்டப்பட்டு உறங்கிக் கொண்டிருக்கும்போது¸ ஊழல் எழுந்து உட்கார்ந்து ஊர் சுற்றப் புறப்பட்டு விடுகிறது” என்று குறிப்பிடுவார். அதை மனதில் கொண்டு மக்கள் பிரதிநிதிகள்¸ மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எந்த கோப்பும் எந்தப் பணியும் தேங்க விடக்கூடாது என்ற எண்ணத்தோடு பணியாற்றுங்கள். இதனை அனைத்து மட்டத்திலும் உறுதி செய்வதற்காகத் தான்¸ எத்தனை அலுவல்களுக்கு நடுவிலும்¸ நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் திடீர் ஆய்வுகளை மேற்கொள்கிறேன் என்றால்¸ இது தான் காரணம். ஏனென்றால்¸ மக்கள்தான் நம் எஜமானர்கள்!

என்னுடைய மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் நாங்கள் மக்கள் பணியாற்றி வருகிறேன். என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. உங்கள் நம்பிக்கையைத்தான் நான் எல்லாவற்றையும்விட மேலானதாக நினைக்கிறேன். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது¸ தனிப்பட்ட என் மீதான நம்பிக்கை மட்டுமல்ல. ஒடுக்கப்பட்டிருந்த இந்தத் தமிழினம் ஒளிபெற¸ உதயசு10ரியன் என உதித்த¸ திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்i அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற என்றும் உங்களில் ஒருவனாக உழைப்பேன்!

இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக நடைபெற்ற அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அவரது மருமகன் சபரீசன் பங்கேற்றார். கணவருடன் வந்திருந்த துர்கா ஸ்டாலின்¸ தனது குல தெய்வ கோயிலான மேல்மலையனூருக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக நடைபெற்ற அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அவரது மருமகன் சபரீசன் பங்கேற்றார். கணவருடன் வந்திருந்த துர்கா ஸ்டாலின்¸ தனது குல தெய்வ கோயிலான மேல்மலையனூருக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 

பாஜகவை ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி பேசியிருப்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில்¸ திருவண்ணாமலையில் திமுக சார்பில் நடைபெற்ற கருணாநிதி சிலை மற்றும் அண்ணா நுழைவு வாயில் திறப்பு விழாவில் எதிர்கட்சிகளை தாக்கி பேசாத ஸ்டாலின் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பாஜகவை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். நலத்திட்ட உதவிகள் பெற ஆயிரக்கணக்கானோர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். மேலும் மகளிர் சுய உதவி குழுக்களும் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர். கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு பாஜகவை பற்றிய தங்களது கருத்தை பதிய வைப்பதற்காக ஸ்டாலின் பேசியிருக்கலாம். அதிமுகவை பற்றி ஒன்றும் பேசாமல் பாஜகவை தாக்கி பேசியிருப்பது மூலம் திமுகவிற்கு உண்மையான எதிர்கட்சி பாஜகதான் என்பதை சொல்லியிருக்கிறார் என்றனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!