Homeசெய்திகள்கையோடு பெயர்ந்து வரும் புதிய தார் சாலை

கையோடு பெயர்ந்து வரும் புதிய தார் சாலை

கையோடு பெயர்ந்து வரும் புதிய தார் சாலை

ஜவ்வாதுமலையில் ரூ.34 லட்சத்தில் போடப்பட்ட தார் சாலை கையோடு பெயர்ந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

சாலை போடும் போது பழைய சாலையை சுரண்டி எடுத்து விட்டுதான் சாலை அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, தரம் குறைவற்ற சாலைகளினால் விபத்து ஏற்படுவதை சுட்டிக்காட்டி சரியான அளவில் சாலைகள் போட வேண்டும் எனவும் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்ட சம்பவம் ஜவ்வாதுமலை பகுதியில் நடந்துள்ளது. அதுவும் பாதை இல்லாமல் சிரமப்பட்டு வரும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டம், செங்கம் வட்டம் மற்றும் ஜமுனாமரத்தூர் வட்டங்களை உள்ளடக்கிய ஜமுனாமரத்தூர் 150 சதுரகிலோ மீட்டர் தூரம் பரந்து விரிந்து கடல் மட்டத்திலிருந்து சுமார் 3ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. சுமார் 280 கிராமங்களைக் கொண்ட ஜமுனாமரத்தூரில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 87 கிலோ மீட்டர் தூரம் கொண்ட தார் சாலையும், 18 கிலோ மீட்டர் ஜல்லி சாலையும், 60 கிலோ மீட்டர் மண்சாலையும் இவர்களது பயன்பாட்டிற்காக உள்ளது. இங்கு சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் பல உள்ளன. 

இந்நிலையில் ஜவ்வாதுமலை ஒன்றியம் ஊர்கவுண்டனூர் ஊராட்சி குட்டூர் கிராமத்தில் 3 நாட்களுக்கு முன்பு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதியதாக தார் சாலை போடப்பட்டது. தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதற்காக ரூ.34 லட்சத்து 14 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. 

சாலை போடும் பணி முடிவடைந்ததும் அந்த சாலையை மக்கள் பயன்படுத்த தொடங்கினர். அப்போதுதான் சாலை தரமற்று இருந்தது தெரிய வந்தது. சாலையை சோதித்த போது ரோடு கையோடு பெயர்ந்து வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. சாலையை போட்டவர் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதையடுத்து சாலை கையோடு பெயர்ந்து வரும் வீடியோவை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

See also  கடனுக்காக கல்லூரி பேராசிரியர் கடத்தலா?

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!