Homeசெய்திகள்திருவண்ணாமலையில் கொட்டி தீர்த்த மழை-மக்கள் அவதி

திருவண்ணாமலையில் கொட்டி தீர்த்த மழை-மக்கள் அவதி

திருவண்ணாமலையில் கொட்டித் தீர்த்த கன மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பேராற்றில் பைக் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

திருவண்ணாமலையில் கொட்டி தீர்த்த மழை-மக்கள் அவதி

ஆந்திர கடற்கரை ஓரம் நிலவி வரும் காற்றழத்த தாழ்வு பகுதியால் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்த தாழ்வு பகுதி நகர்ந்து சென்று காற்றழத்த மண்டலமாக மாறும் என்றும், இதனால் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், தமிழகத்தில் 48மணி நேரத்திற்கு மழை இருக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர் ந.செல்வகுமார் கூறியிருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2ந் தேதி 14.81 சென்டி மீட்டர் மழை பெய்தது. திருவண்ணாமலையில் 3.44 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. நேற்று 3ந் தேதி மாவட்டத்தில் செங்கம், ஜமுனாமரத்தூர், போளுர், திருவண்ணாமலை, கலசப்பாக்கம் ஆகிய தாலுகாக்களில் 11.69 சென்டி மீட்டர் மழை பெய்தது. திருவண்ணாமலையில் 2.91 சென்டி மீட்டர் மழை பதிவானது.

திருவண்ணாமலையில் கொட்டி தீர்த்த மழை-மக்கள் அவதி

இந்நிலையில் திருவண்ணாமலையில் இன்றும் மழை வெளுத்து வாங்கியது. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கன மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீரோடு சேர்ந்து கழிவு நீரும் புகுந்தது. நல்லவன்பாளையத்தில் கெங்குசாமி நாயுடு மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள துர்க்கையம்மன் நகரில் வெள்ளம் புகுந்தது. இதே போல் தாமரை நகர் பகுதிகளிலும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அப்பகுதியில் ரோடுகளில் மழை நீர் கடல் போல் தேங்கி நின்றது. வீடுகளில் புகுந்த தண்ணீரை வாளி மூலம் குடியிருப்புவாசிகள் வெளியேற்றினர்.

See also  கிரிவலப்பாதையில் திடீர் பள்ளம் -புகார் கொடுக்க அமைச்சர் உத்தரவு

ஜமுனாமரத்தூரில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 6 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக அருவிகளிலும், ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செங்கம் குப்பநத்தம் ஜமுனாமரத்தூர் மலைஅடிவார பகுதியான துரிஞ்சிகுப்பத்தில் உள்ள நாமக்கல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலையில் கொட்டி தீர்த்த மழை-மக்கள் அவதி

நேற்று பெய்த பலத்த மழையினால் ஜமுனாமரத்தூர் நம்மியம்பட்டு பகுதியில் ஓடும் பொய்யாற்றின் நடுவில் உள்ள பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளத்தில் தத்தளித்தவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றினார்கள். ஆனால் மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!