Homeசெய்திகள்உணவோடு தட்டு இலவசம்-கருணாநிதி சிலை முன்பு அலைமோதிய கூட்டம்

உணவோடு தட்டு இலவசம்-கருணாநிதி சிலை முன்பு அலைமோதிய கூட்டம்

உணவோடு தட்டு இலவசம்-கருணாநிதி சிலை முன்பு திரண்ட கூட்டம்

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. உணவோடு சில்வர் தட்டு இலவசமாக வழங்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், வேலூர் ரோடையும் இணைக்கும் சந்திப்பில் பீடத்தோடு சேர்த்து 30 அடி உயரத்திற்கு கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த மாதம் 8 ந் தேதி முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வந்து திறந்து வைத்தார். 

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி சிலையை தினமும் பலர் வந்து பார்த்து செல்பி எடுத்து செல்கின்றனர். கடந்த மாதம் 13ஆம் தேதி  ஆனி மாத பவுர்ணமி அன்று கருணாநிதி சிலை முன்பு அன்னதானம் வழங்குதல் துவங்கப்பட்டது. முன்னதாக திமுகவினர் கருணாநிதி சிலைக்கு பொரி கடலை, பழங்கள் வைத்து படையல் இட்டு தேங்காய் உடைத்து பூஜை செய்தனர். 

அன்றைய தினம் முதல் ஒவ்வொரு நாளும் திமுகவில் உள்ள அணி நிர்வாகிகள் மூலம் மாலை நேரங்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தக்காளி சாதம்,எலுமிச்சை சாதம், இட்லி, சுண்டல் என ஒவ்வொரு நாளும் விதவிதமாக அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் தரமாகவும், சுவையாகவும் இருப்பதால் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு அன்னதானத்தை பெற்று சென்றனர். அன்னதானத்தை பெற கருணாநிதி சிலை முன்பு காத்திருப்பவர்களும் உண்டு.

இந்நிலையில் தெற்கு மாவட்ட திமுகவை மிஞ்சும் அளவு இன்று திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை முன்பு வடக்கு மாவட்ட திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.  

உணவோடு தட்டு இலவசம்-கருணாநிதி சிலை முன்பு திரண்ட கூட்டம்

வெஜ் புலாவ், சில்லி பரோட்டா, இட்லி பிரை, ரவா கிச்சடி, கேசரி ஆகியவை தனித்தனி டப்பாக்களில் வைத்து  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அன்னதானத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி துவக்கி வைத்தார். இதில் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ, பெ.சு.தி.சரவணன், முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், எ.வ.வே.கம்பன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. எதிரொலி மணியன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

உணவோடு சேர்த்து எவர்சில்வர் தட்டும் வழங்கப்பட்டதால் அன்னதானத்தைப் பெற கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அன்னதானத்தை பெற்றுச் சென்றனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கூட்டத்தினர் அன்னதானம் இருந்த லாரியை சூழ்ந்து கொண்டு அதன் மீது ஏற முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திமுகவினர் திணறினர். இதனால் லாரியில் உணவு இருந்த டப்பாக்களை எடுத்து  பொதுமக்களுக்கு வழங்க ஆரம்பித்தனர். 

உணவோடு தட்டு இலவசம்-கருணாநிதி சிலை முன்பு திரண்ட கூட்டம்
உணவோடு தட்டு இலவசம்-கருணாநிதி சிலை முன்பு திரண்ட கூட்டம்

உணவோடு தட்டும் சேர்த்து தரப்படும் தகவல் கிடைத்ததும் மேலும் அங்கு கூட்டம் சேர ஆரம்பித்தது. 500 பேர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டதால் மற்றவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர். அதே சமயம் அன்னதானத்தை பெற்று சென்றவர்கள் உணவின் அளவு குறைவாக உள்ளதாக  ஆதங்கப்பட்டனர். 

ஒரு வார காலத்திற்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் தினமும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். 

See also  செய்யாரில் 1000 பேர் திரண்டு பைக் பேரணி

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!