அண்ணாமலையார் கோயிலில் வேலை வாய்ப்பு

Date:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 33 காலிபணியிடங்களுக்கான பணியாளர் நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாமலையார் கோயிலில் வேலை வாய்ப்பு

புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிளம்பர், அலுவலக உதவியாளர், காவலர், உதவி சுயம்பாகம், பெருக்குபவர் போன்ற பணியிடங்கள் நிரப்பட உள்ளது.

அண்ணாமலையார் கோயிலில் வேலை வாய்ப்பு

இது சம்மந்தமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையாளர் கே.பி. அசோக் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு,

திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கீழ்க்கண்ட விவரப்படியான அங்கீகரிக்கப்பட்ட சம்பள பட்டியலின்படி உள்ள காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த இந்து மதத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிதற்கான கடைசி தேதி 18.10.2022 மாலை 5.30 மணி ஆகும். அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதர விபரங்களை அலுவலகத்தில், அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

பதவியின் பெயர்- பிளம்பர். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை- 2.
சம்பளம்- ரூ.18000 – ரூ.55900
தகுதிகள்- அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால். குழாய் தொழில் குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் ஐந்தாண்டுகள்
அனுபவம் அல்லது இரண்டாண்டுகள் தொழில் பழகுநர் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்- அலுவலக உதவியாளர். காலிப் பணியிடங்களின்
எண்ணிக்கை- 1.
சம்பளம்- ரூ.15900 – ரூ.50400
தகுதிகள்- 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்- காவலர். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை- 3.
சம்பளம்- ரூ.15900 – ரூ.50400
தகுதிகள்- தமிழ் எழுதவும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்- உதவி சுயம்பாகம். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை- 2.
சம்பளம்- ரூ.10000 – ரூ. 31500
தகுதிகள்- தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்- பெருக்குபவர், உபகோயில். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை- 25.
சம்பளம்- ரூ.10000 – ரூ. 31500
தகுதிகள்- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

அண்ணாமலையார் கோயிலில் வேலை வாய்ப்பு

நிபந்தனைகள்

1) விண்ணப்பதாரருக்கு 01.07.2022-ல் 18-வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
2) விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
3) தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
4) நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப் பணியிலிருந்தும், பொது ஸ்தாபானங்களில் இருந்தும், இதர திருக்கோயில்களில் இருந்தும் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள். திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்த்தவர்கள், அவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
5) நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவுபெற்ற உயர் அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
6) விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
7) விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
8) வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
9) நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்பாடி ஏதும் வழங்கப்பட மாட்டாது.
10) நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபரை எவ்வித காரணங்களும் கூறாது நிராகரிக்கவும், பணி நியமனம் வழங்காமல் இருக்கவும் திருக்கோயிலின் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.
11) நியமணம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
12) விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவுபெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்பக் கூடாது.
13) அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்வுக்கு அழைக்கும்போது எடுத்து வரவேண்டும்.
14) விண்ணப்பதாரர் கல்விச் சான்று நகல் வயதுச் சான்று நகல், உடல் தகுதிக்கான மருத்துவச் சான்று நகல் மற்றும் நன்னடத்தைச் சான்று நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
15) அரசாணை செப்டம்பர் 2022ன்படி யெளியிடப்பட்ட திருத்தன்தின்படி உச்ச வயது வரம்பு 45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
16) திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100 கட்டணம் நேரில் செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். திருக்கோயில் நிர்வாகத்தால் வழங்கப்படும் அசல் விண்ணப்ப படிவம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். பிற விண்ணப்பங்கள் தகுதியுற்றதாக கருதப்படும்
17) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் திருக்கோயிலில் பெற்ற ரூ.100 கட்டண ரசீது நகல் இணைக்கப்பட வேண்டும்.
18) இத் திருக்கோயில் ஆகம விதிகளின்படியும், நடைமுறை பழக்க வழக்கங்களின் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்படும்.
19) திருக்கோயில் பணியில் முன் அனுபவம் இருப்பின் கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

விண்ணப்பங்களை அனுப்படவேண்டிய முகவரி:-

தக்கார்/இணை ஆணையர்/செயல் அலுவலர்.

அருள்மிகு. அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை.

இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிடிஓ உள்பட 24 அதிகாரிகள் மீது பாய்ந்தது வழக்கு

பிடிஓ உள்பட 24 அதிகாரிகள் மீது பாய்ந்தது வழக்கு விஜிலென்ஸ் அதிரடி...

பார்ட் டைம் ஜாப்-ரூ.6 லட்சத்தை ஏமாந்த “இந்தியன்”

இந்தியன் என்ற வாலிபர் பார்ட் டைம் ஜாப் என்பதை நம்பி ரூ.6...

உணவு,தங்குமிடம்,ரூ.4 ஆயிரத்துடன் ஓதுவார் பயிற்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உணவு, தங்குமிடம், மாதம்ரூ.4 ஆயிரத்துடன் ஓதுவார் பயிற்சிப்...

லஞ்ச வழக்கில் பெண் தாசில்தார் கைது

லஞ்ச வழக்கில் பெண் தாசில்தார் கைது திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பு ஆரணி தாசில்தார் மஞ்சுளா,...

புதிய பஸ் நிலையம் இடம் போதாது- அமைச்சர் முடிவு

புதிய பஸ் நிலையம் இடம் போதாது- அமைச்சர் முடிவு திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும்...

திருவண்ணாமலை தீ விபத்து- சேதம் ரூ.2 கோடி

திருவண்ணாமலை தீ விபத்து- சேதம் ரூ.2 கோடி பாஜக பிரமுகர் கடையில் இருந்த...
error: Content is protected !!