பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

Date:

திருவண்ணாமலைக்கு 300 சிவனடியார்கள் பாதயாத்திரையாக வந்து அண்ணாமலையாரை தரிசித்தனர்.

பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

ஐம்பெரும் பூதத்தலங்களுள் நடுநாயகமாக விளங்கும் திருத்தலம் திருவண்ணாமலையாகும். நினைக்க முத்தி, சித்தி தரும் இத்தலத்தில் பத்தியுடன் பணிவார்க்கு நித்திய நற்பேறு தரும். ஞானத்திரளாய் நின்று நல்ல அன்பர்களுடைய ஊனத் திரளை நீக்கும் பரம்பொருளாகிய அண்ணாமலைப் பெருமான் எழுந்தருளியிருக்கிறார்.

படைப்புக் காலந்தொட்டுச் சிறப்புற்று விளங்கும் இந்த புனித தலத்திற்கு எண்ணில்லாத ஞானத் தபோதனர்கள் வந்திருக்கின்றனர். இன்றும் நாடி வருகின்றனர். ‘சோணாசலத்தின் மிக்க புண்ணிய ஸ்தலமில்லை, சோமவாரத்தின் மிக்க விரதமில்லை’ என்னும் பழமொழியும் திருவண்ணாமலையை பற்றியே எழுந்துள்ளது.

விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன் ஆகியோர் திருவண்ணாமலை வந்த பிறகே தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பது வரலாறாகும். திருவண்ணாமலைக்குச் சென்று அருணாசலேஸ்வரரை சரண் அடைந்தால் பாவங்கள் தீரும், வேண்டுதல் நிறைவேறும் என்பதை நம்பிக்கையாக கொண்டு பவுர்ணமி, மகாதீப நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை தலத்தை நாடி வருகின்றனர்.

See also  100 கிலோ அன்னத்தால் அண்ணாமலையாருக்கு அலங்காரம்

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் சிவனடியார்கள் பாதயாத்திரையாக வந்து அண்ணாமலையாரை தரிசித்து செல்கின்றனர். திருவண்ணாமலை பகுதியிலிருந்து திருப்பதிக்குத் தான் பெரும்பான்மையான பக்தர்கள் பாதயாத்திரை செல்வார்கள். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக சிவனடியார்கள் திருவண்ணாமலைக்கு புரட்டாசி மாத பிறப்பன்று பாதயாத்திரையாக வந்து அண்ணாமலையாரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

இந்த ஆண்டு புரட்டாசி மாத பிறப்பன்று, திண்டிவனத்தில் ஒன்று கூடிய 300 சிவனடியார்கள், திந்திரிணீஸ்வரர் கோயில் முன்பிருந்து பாதயாத்திரையை தொடங்கினார்கள். 69 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்த அவர்களுக்கு வழியில் பொதுமக்கள், குடிதண்ணீர், உணவு வழங்கி உபசரித்தனர். வழி நெடுகிலும் சிவனடியார்கள், திருமுறைகளை ஓதியபடி வந்தனர்.

நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு அண்ணாமலையார் கோயிலை வந்தடைந்த அவர்கள், மண்டபத்தில் காத்திருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அண்ணாமலையாரை தரிசித்தனர்.

பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

இது குறித்து சிவனடியார்கள் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், எங்களுடன் வந்த சிவனடியார்களுக்கு பலவித வேண்டுதல்கள் இருக்கும். ஆனால் எங்களுடைய பொதுவான நோக்கம் சைவத்தை வளர்ப்பது ஆகும். இதற்காகத்தான் திருமுறைகளை ஓதியபடியும், அதனுடைய பொருள்களை விளக்கியபடியும், 63 நாயன்மார்கள் வழியில் நடக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்தியும் 16வது ஆண்டாக பாதயாத்திரையாக வந்திருக்கிறோம் என்றனர்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4299 கொடி கம்பங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், அமைப்பு சார்ந்த கொடி கம்பங்கள் 4299...

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர்

போலீஸ் நிலையத்தை பாமகவினர் முற்றுகையிட்டதால் பிடித்துச் சென்ற தொண்டரை போலீசார் விடுவித்தனர். திருவண்ணாமலை...

வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக வாய்ப்பு

கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர்வதற்கான வாய்ப்பை...

வெளிநாட்டு பெண் பலாத்காரம்-வாலிபருக்கு மாவுகட்டு

திருவண்ணாமலை மலை மீது வெளிநாட்டு பெண்ணை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தவருக்கு...

திமுகவை எதிர்கட்சியாக கூட இல்லாமல் ஆக்கி விடுவோம்

எதிர்கட்சியாக கூட இல்லாமல் ஆக்கி விடுவோம் என திமுகவிற்கு வருவாய் அலுவலர்...

திருவண்ணாமலையில் ரவுடி கொலை-9பேர் சிக்கினர்

திருவண்ணாமலை அருகே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர்...
error: Content is protected !!