Homeசெய்திகள்கொரோனாவால் பாஸ் ஆனவர்களுக்கு சேல்ஸ்மேன் தேர்வில் நிபந்தனை

கொரோனாவால் பாஸ் ஆனவர்களுக்கு சேல்ஸ்மேன் தேர்வில் நிபந்தனை

Date:

Latest stories

தீபவிழா:கோயிலில் போலீசின் அதிகாரம் குறைப்பு

கார்த்திகை தீபவிழாவில் கோயிலுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என 3 துறை...

புதுமண தம்பதியை மிரட்டி வசூல்-திருநங்கைகள் மீது எப்.ஐ.ஆர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த புதுமண தம்பதிகளை அடித்து பணம் கேட்டதாக...

திருநங்கைகள் மீண்டும் அடாவடி வசூல்

திருவண்ணாமலையில் திருமண கோஷ்டியிடம் திருநங்கைகள் அடாவடி வசூலில் ஈடுபட்டனர். இதை படம்...

சாத்தனூர் அணைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

சாத்தனூர் அணையில் கடந்த 2 நாட்களில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்...

நல்லதுதான் செய்கிறோமா? எ.வ.வேலுக்கு வந்த டவுட்

மக்களுக்கு நல்லது செய்கிறோமா? கெட்டது செய்கிறோமா? என சந்தேகம் எழுந்ததாக அமைச்சர்...

கொரோனா நேரத்தில் 10ம் வகுப்பில் ஆல்பாஸ் ஆனவர்களுக்கு சேல்ஸ்மேன் தேர்வில் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர் (salesman) பணியிடத்தை நிரப்ப கடந்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்வு முறையாக நடைபெறவில்லை என கூறி தற்போதைய திமுக ஆட்சியில் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் 4ஆயிரம் நியாயவிலைக் கடை விற்பனையாளர் (salesman),  கட்டுநர்கள்(packer) (பொருட்களை தருபவர்) பணியிடங்கள் நிரப்ப அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாஸ் செய்தவர்களுக்கு சேல்ஸ்மேன் தேர்வில் கட்டுப்பாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 376 காலி பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 352 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட பணியிடங்களும், 3 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு உட்பட்ட பணியிடங்களும், 1 பிரதம கூட்டுறவு பண்டக சாலைக்கு உட்பட்ட பணியிடமும், 6 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு உட்பட்ட பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணியிடங்களுக்கு தொகுப்பு ஊதியமாக ஓராண்டு வரை ரூ. 6250ம், ஓராண்டுக்குப் பிறகு ரூ.8600-ரூ.29000 என ஊதிய விகிதம் இருக்கும்.
அதே போல் 3 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு உட்பட்ட பணியிடங்களும், 11 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு உட்பட்ட பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணியிடங்களுக்கு தொகுப்பு ஊதியமாக ஓராண்டு வரை ரூ.5500ம், ஓராண்டுக்குப் பிறகு ரூ.7800-ரூ.26000 என ஊதிய விகிதம் இருக்கும்.
விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலி பணியிடங்கள், எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு உள்ளது என்று கிராம உதவியாளர் பணியிட அறிவிப்பு போல் வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

See also  ஏடிஎம் கொள்ளையர்கள் படத்தை வெளியிட்டது போலீஸ்

மதிப்பிடப்பட்ட காலிப்பணியிடங்களின் (Estimated Vacancy) எண்ணிக்கை தற்காலிகமானது, (Tentative) மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் தலைவர் மற்றும் இணைப்பதிவாளர் தெரிவித்திருப்பதாவது,

362 சேல்ஸ்மேன் பணியிடத்திற்கு பொது பிரிவினருக்கு 112 இடங்களும் (கட்டுநருக்கு 4), பிற்படுத்தப்பட்டோருக்கு 96ம் (கட்டுநருக்கு 4) பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர்களுக்கு 13ம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 72ம் (கட்டுநருக்கு 3), ஆதிதிராவிடர்களுக்கு 54ம் (கட்டுநருக்கு 3), ஆதிதிராவிடர் அருந்ததியினருக்கு 11ம், பழங்குடியினருக்கு 4ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளுக்கு கட்டுநர் பணிக்கு இட ஒதுக்கீடு இல்லை.

விண்ணப்பதாரர்கள் 01.07.2022-அன்று 18 வயது இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

இதர வகுப்பினர் (OC) – 32 வயது. இதர வகுப்பினைச் (OC) சார்ந்த இராணுவத்தினர் – 50 வயது. இதர வகுப்பினைச் (OC) சார்ந்த மாற்றுத் திறனாளிகள் – 42 வயது.

கல்வித் தகுதிகள்:-

விற்பனையாளர்- மேல்நிலை வகுப்பு (பிளஸ் 2 தேர்ச்சி) (அல்லது) அதற்கு இணையான கல்வி தகுதி தேர்ச்சி

கொரோனாவால் பாஸ் செய்தவர்களுக்கு சேல்ஸ்மேன் தேர்வில் கட்டுப்பாடுகட்டுநர்:- பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி (பத்தாம் வகுப்பு தேர்ச்சி)

விண்ணப்பிக்கும் முறை:-

அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் http://drbtvmalai.net என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்

See also  திருவண்ணாமலை:காட்டில் மர்ம பையை எடுத்த கர்நாடக போலீஸ்

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்படவுள்ள நபர்களின் பெயர்ப்பட்டியல் திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளம் வழியாக வெளியிடப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் (E-Mail),  குறுஞ்செய்தி (SMS) மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதங்களை, விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அழைப்புக் கடிதத்துடன் வராத விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பத்தினைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரத்திற்குப் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான வசதி நிறுத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் [email protected] என்ற இ-மெயில் மூலம் திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மின்னஞ்சல் முகவரியில் அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

உதவி மையம் தொடர்பு தொலைப்பேசி எண்: 04175-298343, 7338749504

விண்ணப்பதாரர்கள் தெரிவுக்கு விண்ணப்பிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நேரும் போது, விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்வதில் தாமதமோ அல்லது தொழில் நுட்பச் சிக்கல்களோ எழ வாய்ப்புள்ளது மேற்கூறிய தொழில்நுட்பக் காரணங்களால் அல்லது வேறு காரணங்களால், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களைக் கடைசிக் கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் பொறுப்பாகாது.

ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் 14.11.2022 நேரம் மாலை 05.45 மணி.

நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் மதிப்பு (weightage for academic marks) மற்றும் நேர்முகத் தேர்வில் அளிக்கப்பட்ட சராசரி மதிப்பெண்கள் முறையே 50 : 50 என்ற விகிதத்தில் இருக்கும்.

  • முக்கிய குறிப்பு:-

  • 2020-2021-ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறிப்பிடப்படாமல் ஒவ்வொரு பாடத்திற்கும் எதிராக மதிப்பெண் குறிப்பிடாமல் வெறும்  PASS என்று குறிப்பிட்டு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் தாங்கள் படித்த பள்ளியில் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழினை அந்தத் தலைமை ஆசிரியரின் சான்றொப்பம் பெற்று (மொத்த மதிப்பெண்கள், பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு) அதனை, 10-ஆம் வகுப்பு PASS என்று வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்தகைய நேர்வுகளில் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழினையும் இணைக்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை அறியவும். இத்தகைய நேர்வுகளில் 10-ஆம் வகுப்புக்கு பதிலாக விண்ணப்பதாரர்களின் 9-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே உரிய மதிப்பு வழங்கப்படும்.
See also  மாஸ்டர் படம் வெற்றி பெற பசு தானம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2  அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெறாத நபர்கள் அதை விட அதிகமான கல்வித் தகுதி பெற்றிருந்தாலும் இத்தெரிவிற்கு தகுதி உடையவர்களாக கருதப்படமாட்டார்கள். இத்தெரிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கு இணையான கல்வித் தகுதி உரிமை கோரும் நபர்கள், இத்தெரிவு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளன்றோ அதற்கு முன்னரோ வெளியிடப்பட்ட உரிய அரசாணையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால் தனியரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இவ்வாறு ஆள்சேர்ப்பு நிலையத்தின் தலைவர் மற்றும் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

2020-21ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே 9-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Related stories

spot_img
error: Content is protected !!