Homeஅரசு அறிவிப்புகள்பால் பதப்படுத்துதல், கால்நடை தீவன உற்பத்திக்கு கடன்

பால் பதப்படுத்துதல், கால்நடை தீவன உற்பத்திக்கு கடன்

பால் பதப்படுத்துதல், கால்நடை தீவன உற்பத்திக்கு கடன்

பால் பதப்படுத்துதல், கால்நடை தீவன உற்பத்திக்கு கடன் பெறலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், கால்நடை தீவன உற்பத்தி, தடுப்பூசி தயாரிப்பு ஆலைக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் (Agricultural Infrastructure Fund) விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் திட்டம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

பால் பதப்படுத்துதல், கால்நடை தீவன உற்பத்திக்கு கடன் பெறலாம்

இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில்முனைவோர், தனியார் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புகூட்டுதல், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்புகூட்டுதல், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், இனமேம்பாட்டு தொழிற்நுட்பம் மற்றும் இனபெருக்க பண்னை, கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்து தயாரிக்கும் ஆலைகள், வேளாண் கழிவு மேலாண்மை ஆலைகள் அமைத்திடவும், விரிவாக்கம் செய்திடவும் வங்கிக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

See also  திருவண்ணாமலை: ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயம்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில்முனைவோர், தனியார் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் முறையான திட்ட மதிப்பீட்டறிக்கையுடன் (Project Proposal) https://dahd.nic.in/ahid அல்லது https://ahidf.udyamimitra.in என்ற வலைதளத்தில் நேரடியாக விண்ணப்பித்திட தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதியின் அடிப்படையில் மொத்த திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் வரை வங்கிக் கடன் பெறும் வசதி உள்ளது. இத்திட்டத்தில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையானது சிறு குறு நடுத்தர நிறுவனங்களாக இருப்பின் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலும் இதர நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரையிலும் ஆகும்.

எனவே இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள நபர்கள் மேற்கூறிய வலைதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9445001119 என்ற கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

பால் பதப்படுத்துதல், கால்நடை தீவன உற்பத்திக்கு கடன் பெறலாம்

வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி (Agricultural Infrastructure Fund)

அறுவடைக்குப் பின்செய் மேலாண்மைக்கான நிலைத்த கட்டமைப்புகளுக்கும் சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கும் தேவைப்படும் முதலீடுகளுக்கான நிதி உதவி மத்திய காலக்கடன் நீண்ட கால கடனுக்கு வட்டி தள்ளுபடி மற்றும் கடனுக்கான உத்தரவாதம் போன்ற வசதிகள் செய்து தரப்படும். இதற்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5990 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

See also  பட்டாசு கடைக்கு லைசென்ஸ் பெற புதிய முறை

பயன்கள்

மதிப்பு கூட்டுதல், விளைப்பொருட்கள் வீணாவதை தடுத்தல், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்தல்.

முக்கிய அம்சங்கள்

அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, ஏழு ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு 3 சதவீத வட்டிக் குறைப்பு (Interest Subvention) வழங்கப்படுகின்றது.

ரூ.2 கோடிக்கு மேற்பட்ட கடனாக இருந்தால், ரூ.2 கோடி வரையிலான தொகைக்கு மட்டும் 3 சதவீத வட்டிக் குறைப்பு கட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கான கடன் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

பால் பதப்படுத்துதல், கால்நடை தீவன உற்பத்திக்கு கடன் பெறலாம்

தகுதியான பயனாளிகள்

தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள்(ACCS)
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs)
சுயஉதவிக் குழுக்கள் (SHGs), சுய உதவிக்குழுக்களின்
கூட்டமைப்புகள்
விவசாயிகள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் (JLGs)
கூட்டுறவு விற்பனை சங்கம், பல்வகை கூட்டுறவு சங்கங்கள்
வேளாண் தொழில்முனைவோர்
புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்கள் (Start Ups)
மத்திய – மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி
அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு தனியார்
பங்கேற்புடன் கூடிய அமைப்புகள்
வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்குழுமங்கள் (APMCs)
தேசிய மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள்.

See also  சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

கடன் வழங்கும் நிறுவனங்கள்

அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்.
பட்டியலிடப்பட்ட கூட்டுறவு வங்கிகள்.
பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs).
சிறிய நிதி வங்கிகள்.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs).
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC).
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள்
மாவட்ட மத்திய கூட்டுறவு கடன் வங்கிகள்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!