Homeஅரசியல்ஜெயலலிதா இருந்தால் நாக்கை அறுத்திருப்பார்-கோகுல இந்திரா ஆவேசம்

ஜெயலலிதா இருந்தால் நாக்கை அறுத்திருப்பார்-கோகுல இந்திரா ஆவேசம்

ஜெயலலிதா இருந்தால் நாக்கை அறுத்திருப்பார்-கோகுல இந்திரா ஆவேசம்

ஜெயலலிதா இருந்தால் நாக்கை இழுத்து வைத்து அறுத்திருப்பார் என திருவண்ணாமலையில் கோகுல இந்திரா ஆவேசமாக கூறினார்.

திமுகவை எதிர்ப்பதுதான் அதிமுகவின் வேலை, ஓபிஎஸ்-சை சமாதானப்படுத்துவது அதிமுகவிற்கு ஆரோக்கியமானது அல்ல, அவரை ஒதுக்குவது என்பது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் கூறினார்.

அதிமுக பொதுக் கூட்டம்

திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே நேற்று இரவு அதிமுக பொதுக் கூட்டம், மாவட்ட செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

jayalalitha-would-have-cut-off-her-tongue-gokula-indira-obsession

அப்போது அவர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கி பேசினார்.

அவர் பேசியதாவது,

திமுகதான் எதிரி

திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக தோற்றுவிக்கப்பட்டது. என்றைக்குமே திமுக தான் நமக்கு எதிரி என்பது ஓ பன்னீர் செல்வத்துக்கு நன்றாகவே தெரியும். எடப்பாடியார் திமுகவை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். மீண்டும் அதிமுக ஆளுங்கட்சியாக வர அவர் போராடி வருகிறார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற சூழல் எதற்கு வந்தது? சட்டமன்றத் தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் நாம் தோற்று போனோம். பல தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றோம்.

எடப்பாடி முதல்வராக கூடாது

தென் பகுதிகளுக்கு ஓபிஎஸ் சென்று அம்மாவின் திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்லவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் இட ஒதுக்கீடு குறித்து மக்களிடம் எடுத்து சொல்லவில்லை. ஸ்டாலின் வந்தால் கூட பரவாயில்லை, மீண்டும் எடப்பாடி முதல்வராக வரக்கூடாது என நினைத்து அவர் செயல்பட்டார்.

சட்டமன்றத் தேர்தல் நேரத்தின் போது அதிமுகவில் யார் முதல்வர் என்ற குழப்பத்தை மக்களிடையே ஏற்படுத்தியவர் ஓபிஎஸ். இன்றைக்கு ஸ்டாலின் முதல்வராக வந்து திராவிட மாடல், திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

jayalalitha-would-have-cut-off-her-tongue-gokula-indira-obsession

கீ கொடுத்த பொம்மை

ஆளுங்கட்சியாக வந்துவிட்டு இன்றைக்கு ஒரு தொண்டனையோ, பொறுப்பாளரையோ, சட்டமன்ற உறுப்பினர்களையோ, முக்கிய நிர்வாகிகளையோ, அமைச்சர்களையோ கட்டுப்படுத்த திராணி இல்லாத ஒரு நபராக கீ கொடுத்த பொம்மை மாதிரி நில்லுனா நிற்கணும், உட்கார் என்றால் உட்காரணும் போட்டோ ஷூட் என்றால் போட்டோ ஷூட எடுக்க வேண்டும்.

சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றால் சைக்கிள் ஓட்டணும், சீன் போட வேண்டும் என்றால் சீன் போடணும், குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட வேண்டும் என்றால் ஊட்டணும், இது மாதிரியான போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருக்கிற முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். திமுகவிற்கு ஓட்டு போட்டு விட்டோமே என பெண்கள் வருத்தப்படுகின்றனர்.

இதுதான் தலைவருக்கு அழகா?

ஓபிஎஸ் தனக்கு பதவி இல்லை என்றதும் தர்மயுத்தம் நடத்தினார். பதவி இல்லை என்றதும் விசாரணை ஆணையம் கேட்டார். அவர் கேட்டதால் தான் ஆறுமுகம் சாமி ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது, ஆணையம் அமைத்தால் தான் அதிமுகவில் ஒன்றாக இணைவேன் என்று சொன்னவர் ஓபிஎஸ்.

ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு ஆணையத்தால் விசாரணைக்காக அழைக்கப்படும் போதெல்லாம் இவர் சொல்லவே இல்லை. திமுக ஆட்சியில் வேறு வழி இல்லாமல் விசாரணைக்கு ஆஜராகி ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை, மக்கள் சொன்னார்கள், அதற்காக ஆணையம் அமைக்க சொன்னேன் என்று சொன்னார். இதுதான் தலைவருக்கு அழகா? உங்களை அண்ணா திமுக தொண்டன் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

jayalalitha-would-have-cut-off-her-tongue-gokula-indira-obsession

3 சதவீதம் வாக்குகள்

இழவு வீடு என்றால் நான் தான் பிணமாக இருப்பேன், கல்யாண வீடு என்றால் நான் தான் மாப்பிள்ளையாக இருப்பேன் அப்படின்னா எப்படி? ஒரு 50 பேரை வைத்துக் கொண்டு அண்ணா வாழ்க, அண்ணா வாழ்கன்னு கோஷம் போடச் சொல்வாரு, ஏர்போர்ட்ல ஏறுவாரு, இறங்குவாரு, வீட்டில் படுத்துக்குவாரு.

எனக்கு ஹவுசிங் போர்டு தான் வேணும், பொதுப்பணித்துறைதான் வேண்டும் என அமைச்சர் பதவியை கேட்டு பெற்று உழைக்காமல், சிரத்தை எடுக்காமல் சம்பாதித்த ஓபிஎஸ்தான் 3 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோற்றதற்கு காரணமாக அமைந்தவர்.

அசிங்கமாக இல்லையா?

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்க தங்க கவசத்தை டிஆர்ஓ விடம் கொடுக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது தேவையா? நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இது அதிமுகவின் சொத்து, இது அம்மா கொடுத்த சொத்து. பிரச்சனைகளை பிறகு பேசிக் கொள்ளலாம் என நீங்கள் (ஒபிஎஸ்) ஒதுங்கி இருந்தால் அது நியாயம். அதை தொண்டன் ஏற்றுக் கொள்வான். நீங்கள் ஒன்று சேர வேண்டும் என்று சொல்வதை கூட தொண்டர்கள் திரும்பிப் பார்ப்பார்கள்.

ஆனால் எனக்கு கிடைக்காதது, யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று அவர் நினைத்ததால் டி.ஆர்.ஓ விடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிமுக பேர் வாங்க திமுக விடுவார்களா? மற்றவர்களுடைய உழைப்பை வாங்கி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக உட்கார அசிங்கமாக இல்லையா? அம்மாவுடைய உழைப்பில் சுகம் கண்டவர் தான் ஓபிஎஸ்.

ஒதுக்குவது கட்டாயம்

ஒற்றை தலைமைக்கு எடப்பாடியார் ஆசைப்பட்டார், அதை அபகரித்துக் கொண்டார் என்றெல்லாம் இல்லை. அவர் ஒற்றை தலைமையை கேட்கவே இல்லை. எல்லோருடைய கோரிக்கை ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான். கட்சி பொறுப்புக்காக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் கையெழுத்து போட மறுத்துவிட்டார். கட்சி பொறுப்பில் என்னுடைய ஆட்களை நியமித்தால் தான் கையெழுத்து போடுவேன் என சொல்லிவிட்டார்.

அதிலும் பிரச்சனை. இப்படி எல்லாவற்றிலும் பிரச்சனை என்றால் நாங்கள் திமுகவை எதிர்ப்பதா? மீண்டும் ஆளும் கட்சியாக வருவதா? ஓபிஎஸ் உடன் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டும், அவர் கோபித்துக் கொண்டு சென்றால் சமாதானப்படுத்துவது தான் நடந்து கொண்டிருந்தது. இது அதிமுகவிற்கு ஆரோக்கியமானது அல்ல. இவரைப் போ என்று சொல்வதும், ஒதுக்குவதும் காலத்தின் கட்டாயம்.

மிடாஸ் மதுபான ஆலை

அதிமுக ஆட்சியின் போது டாஸ்மாக்கால் பெண்கள் விதவைகளாக தென்படுகின்றனர் என கனிமொழி கூறினார். இன்னைக்கு திமுக ஆட்சியில் இந்த 3 நாட்களில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு? உங்க ஆட்சியில் பெண்கள் பாதிக்கப்படவில்லையா? இதுவரை எத்தனை டாஸ்மாக் கடையை மூடி இருக்கீங்க? படிப்படியாக நாங்கள் கடையை மூடி காட்டினோம், நீங்கள் இன்னும் அதிகமாக கடையை திறந்து கொண்டிருக்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கொள்முதல் நிறுத்தப்பட்ட சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலைக்கு, திமுக ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி ஆர்டரை வழங்கியிருக்கிறார். ஆதாரப்பூர்வமாக நாங்க சொல்ல முடியும்.

jayalalitha-would-have-cut-off-her-tongue-gokula-indira-obsession

ஜெயலலிதா இருந்தால் நாக்கை அறுத்திருப்பார்

ஓபிஎஸ் திமுகவிற்கு அனுசரணையாக இருப்பார். அவரது மகன் புகழ்ந்து பேசுவார். பராசக்தி வசனத்தை எங்க அப்பா மனப்பாடம் செய்வார் என சொல்வார். அம்மா (Jayalalitha) இருந்திருந்தால் நாக்கை இழுத்து வைத்து அறுத்து இருப்பார். கட்சியை விட்டு தூக்கி எறிந்து இருப்பார்கள். அம்மா இருக்கும்போது சொல்ல வேண்டியது தானே. குனிந்து குனிந்து கும்பிட்டு அம்மாவையும் ஏமாற்றினீர்கள்.

நீங்கள் பொறுப்பு முதலமைச்சர் ஆக இருந்துவிட்டு அம்மா மருத்துவமனை இருந்தபோது அம்மாவை போய் பார்க்கவே இல்லை என்று சொன்னீர்களே? அந்தப் பதவி எனக்கு பதவி வேண்டாம், என் தாயை (Jayalalitha) நான் பார்க்க வேண்டும் என சொல்லியிருந்தால் அத்தனை அமைச்சர்களும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள்.

வாழ விடுங்கள்

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடந்தது. ஓபிஎஸ் வீட்டில் ஏன் நடக்கவில்லை. நீங்கள் மட்டும் வயிற்றில் ஈர துணியை கட்டிக் கொண்டு பக்கத்து வீட்டில் கடன் வாங்கி கஞ்சியை குடித்தீர்களா?

அப்பலோ மருத்துவமனையில் நடந்தது என்ன? என்பது எங்களுக்கும் தெரியும். பிக்னிக் வந்த மாதிரி வந்து போனாங்க. சிபிஐ விசாரணை கேட்கிறார் டிடிவி தினகரன், அப்பலோவில் நடந்தது பற்றி அவருக்கு என்ன தெரியும்? அவரைத்தான் ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கி விட்டாரே?

எங்களை வாழ விடுங்கள். அதிமுகவுக்கு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தால் இருங்கள். இல்லையென்றால் ஒதுங்கி விடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!