செய்யார் பகுதியில் நாளொன்றுக்கு ரூ.280 சம்பளத்துடன் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் தெரிவித்திருப்பதாவது,
காலி பணியிடங்கள்
திருவண்ணாமலை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக
உள்ள 16 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 2 மூன்றாம் பாலினம் உட்பட
மொத்தம் 20 ஊர் காவல் படையினருக்கான தேர்வு நடைபெற உள்ளது.
10ம் வகுப்பு தேர்ச்சி
இத்தேர்வுக்கு செய்யாறு காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசு ஊழியர், தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வ
தொண்டு செய்ய விருப்பம் உள்ளவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை
கொண்ட 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்க
தகுதியுடையவர்கள் ஆவர்.
சம்பளம்
நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் பணி வழங்கப்பட்டு ஊக்கத்தொகை ரூ.280/- வழங்கப்படும் (சராசரியாக மாதம் 10 நாட்களுக்கு) அல்லது நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் பணி வழங்கப்பட்டு ஊக்கத்தொகை ரூ.560/- வழங்கப்படும் (சராசரியாக மாதம் 5 நாட்களுக்கு மட்டும்).
விண்ணப்பங்கள்

செய்யாறு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து, அண்மையில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 18.10.2022-ந் தேதி மாலை 5 மணிக்குள் செய்யாறு உட்கோட்ட காவல் துணை காண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நேர்காணல்
மனுக்களை ஆய்வு செய்து நேர்காணல் நடத்தி தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் செய்யாறு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் 9498100435 என்ற அலுவலக உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.