திருவண்ணாமலை:நிரப்பப்பட உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 7ஆம் தேதி மாலை 5-45 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலனை 14ந் தேதி நடக்கிறது. நேர்காணல் முடிந்து டிசம்பர் மாதம் 19-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு,
வெம்பாக்கம் தாலுகாவில் 13 காலியிடங்கள்
1.சித்தாத்தூர்
2.மாங்கால்
3.செட்டித்தாங்கல்
4.மோரணம்
5.அரசங்குப்பம்
6.கீழ்நெல்லி
7.புல்லவாக்கம்
8.தண்டப்பந்தாங்கல்
9.மேனல்லூர்
10.உக்கம்பெரும்பாக்கம்
11.மேல்பூதேரி
12.புலிவலம்
13.ஆலந்தாங்கல்
ஜமுனாமரத்தூர் தாலுகாவில் 12 காலியிடங்கள்
1.அமிர்தி
2.வண்ணாங்குட்டை
3.குட்டக்கரை
4.நம்மியம்பட்டு
5.சீங்காடு
6.நீப்பலாம்பட்டு
7.புலியூர்
8.படபஞ்சமரத்தூர்
9.மேல்தட்டியாப்பட்டு
10.கீழ்தட்டியாப்பட்டு
11.நெல்லிவாய்
12.பெருமுட்டம்
கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் 11 காலியிடங்கள்
1.அகரம்
2.ஜமீன் கூடலூர்
3.வெண்ணியந்தல்
4.மானாவரம்
5.சிறுநாத்தூர்
6.ஐங்குணம்
7.கோணலூர்
8.கீரனூர்
9.பொலக்குணம்
10.செல்லங்குப்பம்
11.ஆங்குணம்
சேத்துப்பட்டு தாலுகாவில் 4 காலியிடங்கள்
1.நெடுங்குணம்
2.நரசிங்கபுரம்
3.சோழவரம்
4.சேத்துப்பட்டு
திருவண்ணாமலை தாலுகாவில் 10 காலியிடங்கள்
1.மங்கலம்
2.நூக்காம்பாடி
3.கிளியாப்பட்டு
4.சி.ஆண்டாப்பட்டு
5.பனையூர்
6.பறையம்பட்டு
7.பழையனூர்
8.மல்லவாடி
9.இனாம்காரியந்தல்
10.மாதலம்பாடி
செங்கம் தாலுகாவில் 8 காலியிடங்கள்
1.அன்வராபாத்
2.நீப்பத்துறை
3.பாய்ச்சல்
4.கண்ணக்குருக்கை
5.அல்லியந்தல்
6.மேல்நாச்சிப்பட்டு
7.ஆலத்தூர்
8.வடமாத்தூர்
தண்டராம்பட்டு தாலுகாவில் 10 காலியிடங்கள்
1.அல்லப்பனூர்
2.புத்தூர்செக்கடி
3.வேப்பூர்செக்கடி
4.மோத்தக்கல் 5.மழுவம்பட்டு
6.சேர்ப்பாப்பட்டு
7.வரகூர்
8.சேர்ந்தாங்கல்
9.அகரம்பள்ளிப்பட்டு
10.எடக்கல்
ஆரணி தாலுகாவில் 3 காலியிடங்கள்
1.இராட்டிணமங்கலம்
2.குன்னத்தூர்
3.அய்யம்பாளையம்
செய்யாறு தாலுகாவில் 15 காலியிடங்கள்
1.உக்கல்
2.வடஆளப்பிறந்தான்
3.பையூர்
4.வடநாங்கூர்
5.மேல்நர்மா
6.அளத்துறை
7.குண்ணவாக்கம்
8.தென்தண்டலம்
9.பழஞ்சூர்
10.நல்லாளம்
11.எச்சூர்
12.முனுகப்பட்டு
13.நாவல்பாக்கம்
14.சேராம்பட்டு
15.கண்டிவாக்கம்
வந்தவாசி தாலுகாவில் 12 காலியிடங்கள்
1.ஆச்சமங்கலம்-1
2.அமுடூர்-1
3.கிழங்குணம்-1
4.அருந்தோடு-1
5.பாதூர்-1
6.நம்பேடு-1
7.ஆயிலவாடி-1
8.கண்டவராட்டி-1
9.கொவளை-1
10.வெண்மந்தை-1
11.கீழ்ப்பாக்கம்-1
12.கண்டயநல்லூர்-1
போளூர் தாலுகாவில் 26 காலியிடங்கள்
1.வெண்மணி
2.சோமந்தப்புத்தூர்
3.படியம்பட்டு
4.குருவிமலை
5.பாப்பாம்பாடி
6.கேளூர்
7.பொத்தரை
8.விளாங்குப்பம்
9.புலிவானந்தல்
10.ஒதியந்தாங்கல்
11.மண்டகொளத்தூர்
12.சதுப்பேரிபாளையம்
13.மடவிளாகம்
14.ஜம்புகோணாம்பட்டு
15.எட்டிவாடி
16.வம்பலூர்
17.கொரால்பாக்கம்
18.கீழ்கரிக்காத்தூர்
19.கூடலூர்
20.அரும்பலூர்
21.ராந்தம்
22.சந்தவாசல்
23.துளுவ புஷ்பகிரி
24.கல்குப்பம்
25.அன்நதபுரம்
26.இருப்பிலி
கல்வி தகுதி:–
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:–
விண்ணப்பதாரர் 30.9.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
ஊதியம்:-
ரூ.11ஆயிரத்து 100 முதல் ரூ.35ஆயிரத்து 100 வரை.
நிபந்தனைகள்:-
1) இருசக்கர மிதிவண்டி நன்றாக ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
2) தமிழ்மொழியில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
3) பணி நியமனத்தின் போது உடல் தகுதிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
4) இரு தார மனைவி உடையவர்களாக இருக்கக்கூடாது மற்றும் வேறு கணவர், மனைவி உயிருடன் உள்ள ஒருவரை திருமணம் செய்திருக்க கூடாது.
5) விண்ணப்பதாரர் பணியிடம் காலியாக உள்ள கிராமம், வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
6) குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
7) தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
8) அழைப்புத் கடிதம் (Calling Letter) பெறுவது மட்டுமே வேலைக்கான உத்தரவு எனக் கருதப்பட மாட்டாது.
9) பரிசீலனையில் விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
10) நடைமுறையிலுள்ள அரசு விதிகள், அரசு ஆணைகளின்படி வயது குறித்த தகுதி பணி நியமனத்தின் போது நிர்ணயம் செய்யப்படும்.
11) நேர்முகத் தேர்வின் இறுதி முடிவுகள் இத்துறையின் நியமனக் குழுவின் முடிவிற்கு உட்பட்டதாகும்.
12) அனைத்து தகுதிகளையும் உடையவர் என பணி நியமன அலுவலர் திருப்தி அடைய வேண்டும் (Satisfaction of the Appointing Authority is Must).
13) விண்ணப்பதாரர்கள் தமிழக அரசின் இணையதளம் (https://www.tn.gov.in), வருவாய் நிர்வாகத் துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் திருவண்ணாமலை மாவட்ட இணையதளம் (https://tiruvannamalai.nic.in) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.