Homeஆன்மீகம்யாக குண்ட அக்னியில் அம்மன் உருவம்-பக்தர்கள் பரவசம்

யாக குண்ட அக்னியில் அம்மன் உருவம்-பக்தர்கள் பரவசம்

யாக குண்ட அக்னியில் அம்மன் உருவம் – பக்தர்கள் பரவசம்

வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்தின் போது அக்னியில் அம்மன் போன்று உருவம் தோன்றியதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

அங்காளம்மன் கோவில்

https://www.agnimurasu.com/2022/10/yaga-kunda-agni-with-goddess-image-devotees-ecstasy.html

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ளது வடவெட்டி கிராமம். இந்த கிராமத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் (Angala parameshwari) கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் பல கிராம மக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது.

தேரோட்டம்

இக்கோயிலில் நடைபெறும் மாசி திருவிழா பிரபலமானதாகும் அப்போது மயான கொள்ளை, ஊஞ்சல் தாலாட்டு போன்றவையும், தேரோட்டமும் நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள்வார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து வைத்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.

தெப்பல் உற்சவம்

முக்கிய வீதிகள் வழியாக தேர் செல்லும்போது நிலங்களில் விளைந்த நவதானியங்களை அம்மனுக்கு தூவி பக்தர்கள் வணங்குவர். நிறைவு நாளில் அம்மன் திருமண வைபவமும், வல்ல குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். பாண்டிச்சேரி, சேலம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, வந்தவாசி பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள்.

அலங்கார ரூபம்

இதேபோன்று அமாவாசை நாட்களில் ஊஞ்சல் தாலாட்டும் நடைபெறும். இன்று ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு அங்காளம்மன் (Angala parameshwari), அலங்கார ரூபத்தில் காட்சியளித்தார். அப்போது சிறப்பு யாகம் நடைபெற்றது.

https://www.agnimurasu.com/2022/10/yaga-kunda-agni-with-goddess-image-devotees-ecstasy.html

ஓம் சக்தி, பராசக்தி

அந்த நேரத்தில் யாக குண்டத்திலிருந்து எழுந்த தீ ஜூவாலையில் அம்மன் போன்ற உருவம் தோன்றியதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என முழங்கி வழிபட்டனர்.

இந்த தகவல் பரவியதும் சுற்றுப்புற பகுதி மக்கள் கோயிலுக்கு படையெடுத்து வந்தனர். அதற்குள் தீ ஜூவாலையில் அம்மன் உருவம் மறைந்ததால் ஏமாற்றம் அடைந்து உற்சவரை வணங்கி விட்டு சென்றனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!