Homeசெய்திகள்வரி செலுத்தாமல் அடிப்படை வசதிகளை கேட்பதா?கலெக்டர் கேள்வி

வரி செலுத்தாமல் அடிப்படை வசதிகளை கேட்பதா?கலெக்டர் கேள்வி

வரி செலுத்தாமல் அடிப்படை வசதிகளை கேட்பதா?கலெக்டர் கேள்வி

வரி செலுத்தாமல் அடிப்படை வசதிகளை எப்படி எதிர்பார்க்க முடியும்? என கலெக்டர் முருகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது போல் மாநகராட்சி, நகராட்சிகளில் பகுதி சபை கூட்டங்களை நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று ஊராட்சி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சியில் இந்த கூட்டம் 1 வது வார்டில் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் போளுர் ரோட்டில் உள்ள பச்சையம்மன் கோயில் அருகே நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமை தாங்கி பேசினார்.

வரி செலுத்தாமல் அடிப்படை வசதிகளை கேட்பதா? கலெக்டர் கேள்வி

அவர் பேசியதாவது,

வரி வசூல்

“இந்தக் கூட்டத்துக்கு அமைச்சர் வருவதாக இருந்தது, திருப்பத்தூரில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். அதற்கு பதில் நாடாளுமன்ற உறுப்பினர் வருகை தந்திருக்கிறார். இந்த வார்டில் 7 சதவீதம் காலி மனை வரியும், 11 சதவீதம் குடி தண்ணீர் வரியும் தான் வசூல் ஆகி உள்ளது. இது மிகக் குறைவான வசூல்.

ரூ 36 லட்சம் நிலுவை

அரசு நிதியை மட்டும் நம்பி நகராட்சி இருக்க முடியாது. பஸ் நிலையம் கட்டுதல், வணிக வளாகம் கட்டுதல் போன்ற சிறப்புத் திட்டங்களுக்கு மட்டும் தான் அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். இந்த வார்டில் ரூ 36 லட்சம் சொத்து வரி நிலுவையில் இருக்கிறது.

மழை பெய்தால் வார்டுகளில் பிரச்சனை ஏற்படுகிறது. சாலை வசதி வேண்டும், கால்வாய் வசதி வேண்டும், தெருவிளக்கு எரியவில்லை என்றெல்லாம் நீங்கள் என்னிடம் வருகிறீர்கள். இது சரி செய்ய வேண்டுமென்றால் பணம் இருந்தால் தானே செய்ய முடியும்?

ஷாக் ஆகிவிட்டேன்

ரூ. 36 லட்சம் இருந்தால் செய்யலாம் அல்லவா? அடிப்படை வசதிகளை இந்த பணத்தை நம்பி தானே செய்ய முடியும்? இங்கு வந்து வரி வசூல் பட்டியலை பார்த்தவுடன் ஷாக் ஆகிவிட்டேன்.

வரி செலுத்தாமல் அடிப்படை வசதிகளை கேட்பதா? கலெக்டர் கேள்வி

திருவண்ணாமலை நகராட்சியில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. விரிவாக்கம் ஆக, ஆக கூடுதல் நிதிகள் தேவைப்படுகிறது. வரி வசூல் நிலுவையில் வைத்துள்ளவர்களின் பட்டியலை அடுத்த கூட்டத்தில் வாசிக்கப்பட வேண்டும்”

இவ்வாறு அவர் பேசினார்.

சி.என்.அண்ணாதுரை

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, நகரமன்றத் தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், ஆணையர் இரா.முருகேசன், துணைத் தலைவர் ராஜாங்கம், 1வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அ.கோவிந்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

1வது வார்டு ஒரு பார்வை

வார்டு 1 ல் ஆண்கள் 2343, பெண்கள் 2432 என மொத்தம் 4775 பேர் உள்ளனர். தெருக்கள் 29, சிறுபாலங்கள் 25, மொத்த தெருவிளக்குகள் 78, சிறுமின்விசை பம்புகள் 12, பொதுக்குழாய் 2, பொது விநியோக கடைகள் 3, அங்கன்வாடி மையம் 3, பள்ளிக்கூடங்கள் 1 என அமைந்துள்ளது.

தெருவோர வியாபாரிகள்

போளுர் மெயின் ரோடு பகுதியில் சுமார் 100 தெருவோர வியாபாரிகள் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சாலையோர கடைகள் வைத்து பயனடைந்து வருகிறார்கள்.

7.62 சதவிகிதம்

இந்த வார்டில் அனைத்து தெருக்களிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வார்டில் பொது மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, காலிமனைவரி மற்றும் குடிநீர் கட்டணம் ரூ.42.58 லட்சத்தில் ரூ.5.58 லட்சம் மட்டுமே செலுத்தியுள்ளனர். வசூல் தொகை 7.62 சதவிகிதம். ரூ.36.89 லட்சம் நிலுவையாக உள்ளது.

இந்த நிலுவைத் தொகையினை வசூல் செய்து அடுத்த நிதியாண்டில் இந்த வார்டில் உள்ள பொது மக்களின் பயன்பாட்டிற்காக ரோடு வசதி, தெரு வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக பயன்படுத்த வேண்டும் என்று இன்று நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.40 கோடிக்கு மேல் வரிபாக்கி வசூலாகாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!