Homeஆன்மீகம்ராட்சத ஏணி மூலம் கோபுரம் சுத்தப்படுத்தும் பணி

ராட்சத ஏணி மூலம் கோபுரம் சுத்தப்படுத்தும் பணி

ராட்சத ஏணி மூலம் முதன்முறையாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்களை சுத்தம் படுத்தும் பணி தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 24.11.2022 அன்று துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறவுள்ளது.

முதல் நாள் திருவிழா 27.11.2022 கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. டிசம்பர் 6ந் தேதி உலகமே எதிர்நோக்கும் மலை மீது மகாதீபம் ஏற்றும் நிகழ்வு நடக்கிறது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக மாடவீதிகளில் சாமி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா நோய் கட்டுக்குள் வந்திருப்பதால் இந்த முறை தீபத்திருவிழாவை காண திருவண்ணாமலைக்கு 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராட்சத ஏணி மூலம் கோபுரம் சுத்தப்படுத்தும் பணி

9 கோபுரம் கொண்ட கோயில்

சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 24 ஏக்கர் பரப்பளவில் 6 பிரகாரங்கள், ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், பேகோபுரம், அம்மணியம்மன் கோபுரம் என 4 பெரிய கோபுரங்கள் மற்றும் உட்புற கோபுரங்கள் என 9 கோபுரங்கள் கொண்ட கோயிலாக விளங்கி வருகிறது.

கிழக்கு கோபுரம் ராஜ கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது 217 அடி உயரமும், 11 நிலைகளை கொண்டதாகும். தெற்கு திசையில் உள்ள கோபுரம் திருமஞ்சன கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது 157 அடி உயரம் கொண்டதாகும்.

மேற்கு திசையில் உள்ள கோபுரம் பேகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது 160 அடி உயரம் கொண்டதாகும். வடக்கு திசையில் உள்ள கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோபுரம் 171 அடி உயரம் கொண்டதாகும்.

தூசி படர்ந்த கோபுரம்

தீபத்திருவிழா தொடங்க உள்ள நிலையில் கலெக்டர் பா.முருகேஷ், அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது கோபுரங்கள் தூசி படர்ந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஆலோசனை கூட்டத்தில் பேசிய கலெக்டர் முருகேஷ், கோயில் கோபுரங்கள் மழை பெய்தால் சுத்தமாகி விடும் என்கிறார்கள். ஆனால் புறா எச்சில்களாலும், தூசி படர்ந்தும் மோசமாக உள்ளது. எனவே ஸ்கை பைப் மூலம் கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

ராட்சத ஏணி மூலம் கோபுரம் சுத்தப்படுத்தும் பணி

இதையடுத்து தீயணைப்பு துறை இயக்குனர் வி.கே. ரவி உத்தரவின் பெயரில் மத்திய சென்னை மண்டல அலுவலர் சரவணன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்களை சுத்தம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

ராட்சத ஏணி

தமிழகத்திலேயே 2வது பெரிய கோபுரமான 217 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களும் ஸ்கை லிப்ட் எனப்படும் ராட்சத ஏணியை பயன்படுத்தி தண்ணீரை பீச்சி சுத்தப்படுத்தப்படுகிறது. திருவண்ணாமலை கோயில் கோபுரங்கள் முதன்முறையாக ஸ்கை லிப்ட் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.

ராட்சத ஏணி மூலம் கோபுரம் சுத்தப்படுத்தும் பணி

கலெக்டருக்கு பாராட்டு

சென்னை போன்ற ஊர்களில் உள்ள பெரிய, பெரிய கட்டிடங்களில் ஏற்படும் தீயை அணைக்க இந்த ஸ்கை லிப்ட் பயன்படுத்தப்படும். இதன் மூலம் தரை தளத்தில் இருந்து உயரமான கட்டிடங்களுக்கு சுலபமாக செல்ல முடியும். 4 நபர்கள் அளவு மீட்டு கொண்டு வரவும் முடியும்.

கோபுரங்களை சுத்தப்படுத்த முதன்முறையாக இந்த ஸ்கை லிப்ட்டை வரவழைத்துள்ள கலெக்டர் முருகேஷ்சை பக்தர்கள் பாராட்டியுள்ளனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!