Homeஆன்மீகம்அதிருப்தி:கோசாலை நிகழ்ச்சியை ரத்து செய்தார் அமைச்சர் சேகர்பாபு

அதிருப்தி:கோசாலை நிகழ்ச்சியை ரத்து செய்தார் அமைச்சர் சேகர்பாபு

அதிருப்தியின் காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோசாலை மேம்பாட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை அமைச்சர் சேகர்பாபு ரத்து செய்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த வருட கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27ந் தேதி ஞாயிற்றுகிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.டிசம்பர் 6ந் தேதி மகாதீபமாகும்.

இதையொட்டி விழா முன்னேற்பாடுகள் செய்வது குறித்து தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று ஆய்வு செய்தார்.

இராஜகோபுரம் அருகில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்குள் உள்ள அன்னதான கூடம் மற்றும் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக வரிசையாக செல்லக்கூடிய பகுதிகளை பார்வையிட்டார்.

அதிருப்தி:கோசாலை நிகழ்ச்சியை ரத்து செய்தார் அமைச்சர் சேகர்பாபு
இதுல எப்படிங்க போக முடியும்?

அப்போது ஒரு இடத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லக்கூடிய நுழைவு பாதை மிகவும் குறுகலாக இருப்பதை பார்த்து இப்படி இருந்தால் 2 பேர் கூட ஒரே நேரத்தில் நுழைய முடியாது என அதிகாரிகளிடம் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு இந்த வழியை அகலப்படுத்துவதற்கு முயற்சி எடுங்கள், இல்லையெனில் கூடுதலாக ஒரு பாதையை இலவச தரிசனத்திற்காக அமையுங்கள் என உத்தரவிட்டார்.

See also  அஷ்டலிங்கத்திற்கான கும்பாபிஷேக பணிகள் துவக்கம்

பிறகு கோயிலின் நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள கோசாலையை பார்வையிட்டார் அங்கு ரூ.28 லட்சம் செலவில் கோசாலை மேம்பாட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதிருப்தி:கோசாலை நிகழ்ச்சியை ரத்து செய்தார் அமைச்சர் சேகர்பாபு
திரை போட்டு மூடப்பட்ட விழா பேனர்

பந்தல் போடப்பட்டு, அடிக்கல் நாட்டுவதற்கான செங்கற்களும், கலச சொம்பு, பூ போன்ற பூஜை பொருட்களும் தயாராக இருந்தன. விழாவிற்கான பேனரும் அமைக்கப்பட்டிருந்தது.

கோசாலையை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு கோசாலை சுத்தமாக பராமரிக்கப்படாததை பார்த்து அதிகாரிகளிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதிருப்தி:கோசாலை நிகழ்ச்சியை ரத்து செய்தார் அமைச்சர் சேகர்பாபு

இங்கு எதற்காக பந்தல் போட்டிருக்கிறீர்கள்? என கேட்ட போது கோசாலையை மேம்படுத்த அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடக்க இருப்பதை அவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விழாவை நிறுத்தி விடுங்கள் என சேகர்பாபு தெரிவித்தார். இதனால் அண்ணாமலையார் கோயில் இணை ஆணையாளர் அசோக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

அவருடன் வந்திருந்த இந்து சமய அறநிலை துறை கமிஷனர் குமரகுருபரன், இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள் என இணை ஆணையாளர் அசோக்பாபுவிடம் கூறினார்.

See also  அம்பாளோடு இணைந்தார் அண்ணாமலையார்

கோசாலையை பராமரிப்பு பணிக்காக நியமித்தும், அதற்கான ரிசல்ட் இல்லையே என கூடுதல் ஆணையாளரை பார்த்து அமைச்சர் தெரிவித்தார். இடத்தை முதலில் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என அவருக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் தற்போது கோசாலை செயல்பட்டு வரும் இடத்தை பக்தர்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பக்தர்கள் நேர்த்திக் கடனாக கோயிலுக்கு வழங்கும் பசுக்கள், சரிவர பராமரிக்கப்படுவதில்லை என பல காலமாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில் அமைச்சரின் ஆய்வின் போது இதே நிலை தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் அதிருப்தி காரணமாக கோயிலுக்குள் இயங்கி வந்த கோசாலை, கிரிவலப்பாதையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றப்படும் என தெரிகிறது.


கோசாலையை பற்றிய முந்தைய செய்தியை படிக்க…

https://www.agnimurasu.com/2021/09/blog-post_80.html

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!