Homeசெய்திகள்சேற்றில் சிக்கிய கனரக லாரி- 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சேற்றில் சிக்கிய கனரக லாரி- 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சேற்றில் சிக்கிக் கொண்ட கனரக லாரியால் திருவண்ணாமலை-செங்கம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கரியமங்கலம் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தால் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அவதி அடைந்தனர்.

திருவண்ணாமலை-பெங்களுர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வடிகால் பகுதிகளில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

பாலம் அமைப்பு

திருவண்ணாமலையிலிருந்து செங்கம் செல்லும் ரோட்டில் உள்ள கரியமங்கலம் பகுதியிலும் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் ரோட்டின் ஒரு புறத்தில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மறு புறத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வந்தது.

சேற்றில் சிக்கிய கனரக லாரி- 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட சாலையும் சரிவர அமைக்கப்படாமல் மேடு, பள்ளமாக இருந்தது. பாலம் கட்டும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வந்ததால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று காலை பலத்த மழையின் காரணமாக பாலம் கட்டப்படும் பகுதியில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்தது.

திருவண்ணாமலையிலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு செங்கம் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லாரியின் பின்சக்கரம் அந்த சேற்றில் சிக்கி புதைந்தது. அதன் டிரைவர் எவ்வளவோ முயற்சித்தும் லாரியை நகர்த்த முடியவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

லாரி நடுரோட்டில் நின்று விட்டதாலும், மறுபுறத்திலும் கட்டி முடிக்கப்படாத பாலத்தாலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இருபுறங்களிலும் பஸ், லாரி, வேன், கார்கள் அணிவகுத்து நின்றன.

சேற்றில் சிக்கிய கனரக லாரி- 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தகவல் கிடைத்ததும் செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுத்தனர். ஹிட்டாச்சி வாகனம் வரவழைக்கப்பட்டு சேற்றில் சிக்கிய லாரி நகர்த்தப்பட்டது. அதன்பிறகே போக்குவரத்து சீரானது.

2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதி அடைந்தனர். பாலம் கட்டும் பணியை விரைவு படுத்தி சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!