சேல்ஸ்மேன்,கட்டுநர் பதவிக்கு திருவண்ணாமலையில் அடுத்த மாதம் 12ந் தேதி முதல் 30ந் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 4ஆயிரம் நியாயவிலைக் கடை விற்பனையாளர் (salesman), கட்டுநர்கள் (packer – பொருட்களை தருபவர்) பணியிடங்கள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தொகுப்பு ஊதியமாக ஓராண்டு வரை ரூ. 6250ம், ஓராண்டுக்குப் பிறகு ரூ.8600-ரூ.29000 என ஊதிய விகிதம் இருக்கும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 376 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணைப்பதிவாளர் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (சேல்ஸ்மேன்) மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப 13-10-2022 முதல் 14-11-2022 வரை இணைய வழி மூலமாக விண்ணப்பம் பெறப்பட்டது.
22,622 விண்ணப்பங்கள்
விற்பனையாளர் பணியிடத்திற்கு 20,029 விண்ணப்பங்களும், கட்டுநர் பணியிடத்திற்கு 2,593 விண்ணப்பங்களும் என மொத்தம் 22,622 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
மேற்படியான விண்ணப்பதாரர்களில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வானது விற்பனையாளர் பணியிடத்திற்கு 12.12.2022 முதல் 28.12.2022 (17.12.2022 சனிக்கிழமை உட்பட) வரையிலும், கட்டுநர் பணியிடத்திற்கு 29.12.2022 முதல் 30.12.2022 வரையிலும் சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மணலுர்பேட்டை ரோடு. திருவண்ணாமலை என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
நேர்முக தேர்வுக்கான விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுச்சீட்டு குறுஞ்செய்தியாகவும் (SMS), மின்னஞ்சல் (e-mail) வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் http://drbtvmalai.net என்ற இணைய தளத்தில் இருந்தும் தங்களது நேர்முக தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தகுதி அடிப்படையில் அனுமதி
மேலும் நேர்முக தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு தபால் வழி அனுப்பி வைக்கப்படாது என்றும், இணைய தளம் வழி மட்டுமே அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
நேர்முக தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆவண ஆதாரங்களுடன் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உரிய நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே நேர்முக தேர்வில் கலந்துக் கொள்ள வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்களின் கல்வி மற்றும் இதர தகுதிகளை சரிபார்த்து தகுதி அடிப்படையில் நேர்முக தேர்வில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
நேர்முக தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய ஏற்படும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் [email protected] என்ற இ-மெயில் மூலம் திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மின்னஞ்சல் முகவரியில் அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.
உதவி மையம் தொடர்பு தொலைப்பேசி எண்:
04175-298343, 7338749504
இவ்வாறு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.