Homeஆன்மீகம்முருகர் தேர் புதிய பீடத்தில் கலைநயமிக்க சிற்பங்கள்

முருகர் தேர் புதிய பீடத்தில் கலைநயமிக்க சிற்பங்கள்

முருகர் தேர் புதிய பீடத்தில் அமைந்துள்ள கலைநயமிக்க சிற்பங்கள் பக்தர்களை கவர்ந்துள்ளது. தேரின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதே போல் புதிய திருக்குடையும் மாடவீதியை சுற்றி எடுத்து வரப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை(27ந் தேதி) தொடங்குகிறது. அதிகாலை 5-30 மணியிலிருந்து 7 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.

டிசம்பர் 6ந் தேதி உலகமே எதிர்நோக்கும் மகாதீபம் 2668 அடி உயர மலையில் ஏற்றப்பட உள்ளது. மகாதீபத்தை தரிசிக்க இந்த முறை 30 இலட்சம் பக்தர்கள் வருகை தருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முருகர் தேர் புதிய பீடத்தில் கலைநயமிக்க சிற்பங்கள்
முருகர் தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார் துணை சபாநாயகர்

ரூ.30 லட்சத்தில் புதிய பீடம்

தீபத்திருவிழாவின் 7 நாளான டிசம்பர் 3ம் தேதி சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக கார்த்திகை தீபத் திருவிழாவில் மாடவீதிகளில் சாமி ஊர்வலங்களும், பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறவில்லை. கொரோனா தொற்று குறைந்து விட்ட நிலையில் கோயில்களில் வழக்கம் போல் பக்தர்களோடு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

இதனால் 2 வருடத்திற்கு முன்பு நடந்தது போல் தீபத்திருவிழா விமர்சையாக நடைபெறுகிறது. 2 வருடங்களாக ஓடாமல் இருந்த தேர்களின் உறுதி தன்மையை பரிசோதிக்கவும், ரூ.30 லட்சத்தில் புதியதாக பீடம் அமைக்கப்பட்ட முருகர் தேரை வெள்ளோட்டம் விடவும் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் தேரோட்டத்தின் போது சிறு அசாம்பாவிதம் கூட நடக்க கூடாது, ஒவ்வொரு தேர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என இந்து சமம அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

பக்தர்கள் ஏமாற்றம்

பீடம் புதியதாக அமைக்கப்பட்ட முருகர் தேர் வெள்ளோட்டம் கடந்த 20ம் தேதி அறிவித்தபடி நடைபெறவில்லை. தேரின் உறுதித்தன்மையில் திருப்தி இல்லை என பொதுப்பணித்துறை பொறியாளர்கள் குழு தெரிவித்தால் வெள்ளோட்டம் கடைசி நேரத்தில் வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் தேரை வடம் பிடித்து இழுக்க வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தேருக்கு சிறப்பு பூஜை

பொறியாளர்கள் தெரிவித்த பழுதுகள் சரிசெய்த பிறகு முருகர் தேர் வெள்ளோட்டம் இன்று காலை 10-30 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி வாழை மரம் கட்டப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட முருகர் தேருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

யாகம் மற்றும் கலசபூஜைகள் நடைபெற்றது. பிறகு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி காலை 10.40 மணியளவில் தேர் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

முருகர் தேர் புதிய பீடத்தில் கலைநயமிக்க சிற்பங்கள்

முருகர் தேர் புதிய பீடத்தில் கலைநயமிக்க சிற்பங்கள்

கலைநயமிக்க சிற்பங்கள்

அதன்பிறகு அங்கு மாடவீதியில் திரண்டிருந்த ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் எங்கும் நிற்காமல் இழுத்துச் செல்லப்பட்டது. பகல் 2-45 மணிக்கு தேர் நிலையை வந்து அடைந்தது.

இந்த முருகர் தேரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் உள்ள கலைநயமிக்க சிற்பங்கள் பக்தர்களை கவர்ந்துள்ளது.

முருகர் தேர் புதிய பீடத்தில் கலைநயமிக்க சிற்பங்கள்

தேர் வெள்ளோட்டத்தில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது சுவாமி ஊர்வலத்தில் பயன்படுத்தக் கூடிய 10 திருக்குடைகள் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டன.

முருகர் தேர் புதிய பீடத்தில் கலைநயமிக்க சிற்பங்கள்

ரூ.3லட்சம் மதிப்புள்ள 10 திருக்குடைகள்

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் க.பல்லாவரத்தைச் சேர்ந்த ஸ்ரீ அருணாச்சலா ஆன்மீக சேவா சங்கம் சார்பில் அண்ணாமலையார் கோவிலுக்கு திருக்கார்த்திகை திருக்குடைகள் வழங்குவது வழக்கம்.

அதன்படி 18வது ஆண்டாக அண்ணாமலையார் கோவிலுக்கு ஸ்ரீ அருணாச்சலா ஆன்மீக சேவா சங்கம் சார்பில் ரூ.3லட்சம் மதிப்புள்ள 10 திருக்குடைகள் வழங்கப்பட்டன. மாடவீதியை சுற்றி இந்த குடைகள் மேளதாளம் முழுங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

ஊர்வலம் அண்ணாமலையார் கோயிலை சென்று அடைந்தது. அங்கு கோவில் நிர்வாகத்திடம் திருக்குடைகள் ஒப்படைக்கப்பட்டன.

கார்த்திகை தீபத் திருவிழாவையட்டி திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில் இருந்து புதிதாக வருபவர்கள் குறித்த தகவல்களை ஊராட்சி மன்ற தலைவர்கள் தெரிவிக்க வேண்டுமென போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ந்தேதி மகா தீபம் நடைபெறுவதால் எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் பாதுகாப்பு பணிக்காக 12 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வீடு வீடாக சென்று விவரங்கள் சேகரிப்பு

மேலும் திருவண்ணாமலை மாடவீதி, கிரிவலப் பாதை மற்றும் முக்கிய இடங்களில் வியாபார நிறுவனங்களை நடத்துபவர்கள் குறித்தும், வீடுகளில் தங்கி இருப்பவர்கள் குறித்தும் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

இதேபோல் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தங்கி உள்ள வெளிநாட்டவர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிரிவலப் பாதையில் அடங்கியுள்ள ஆணாய் பிறந்தான், அத்தியந்தல், அடி அண்ணாமலை ஆகிய ஊராட்சி தலைவர்களை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் பிரிவுக்கு வரவழைத்து கூடுதல் துணை போலீல் சூப்பிரண்டு வெள்ளைத்துரை, துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் ஆகியோர் சில அறிவுரைகளை வழங்கினர்.

முருகர் தேர் புதிய பீடத்தில் கலைநயமிக்க சிற்பங்கள்

சந்தேகத்துக்கிடமான நபர்கள்

அதன்படி சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் புதிதாக யாராவது வெளிநாட்டினர் வருகை தந்தாலும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் தென்பட்டாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி அவர்களிடம் அறிவுறுத்தினர்.

இதில் ஆனால் பிறந்தான் ஊராட்சி மன்ற தலைவர் கே.தர்மராஜ், அத்தியந்தல் ஊராட்சி மன்ற தலைவர் இரா.முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.ராஜசேகரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி…

டிசம்பர் 6 மகாதீபம் என்பதால் அதிகபட்ச பாதுகாப்பு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!