Homeசெய்திகள்தகர ஷீட் கட்டிடம் கட்ட சதுர அடிக்கு ரூ.3ஆயிரமா? கலெக்டர் திகைப்பு

தகர ஷீட் கட்டிடம் கட்ட சதுர அடிக்கு ரூ.3ஆயிரமா? கலெக்டர் திகைப்பு

தகர ஷீட் கட்டிடம் கட்ட சதுர அடிக்கு ரூ.3ஆயிரமா? கலெக்டர் திகைப்பு

தகர ஷீட் போட்ட கட்டிடம் கட்ட 1 சதுர அடிக்கு ரூ.3ஆயிரம் ஆனதாக அதிகாரிகள் கூறியதை கேட்ட கலெக்டர், உங்களை நம்பி விட்டேன் பாருங்க, குட்டிச்சுவராக்கிட்டீங்க என சீறினார்.

70 ஆயிரம் மெட்ரிக் டன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்டு ஒன்றிற்கு இரண்டு இலட்சம் ஏக்கர் பரப்பளவில் மணிலா சாகுபடி செய்யப்பட்டு 70 ஆயிரம் மெட்ரிக் டன் மணிலா பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

சமையல் எண்ணெய்

மணிலா உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வருமானம் இருமடங்கு ஆவதற்கு மணிலா பருப்பு மதிப்புக்கூட்டப்பட்டு மணிலா சமையல் எண்ணெயாக 30 ஆயிரம் மெடரிக்டன் ஆண்டு ஒன்றிற்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மணிலா விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்டு இயங்கிவரும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஒன்றிணைத்து ‘திருவண்ணாமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டு 8.1.2020 முதல் செயல்பட்டு வருகிறது.

Rs.3 thousand per square foot to build a tin sheet building? The collector was stunned

நாட்டு மரச்செக்கு எண்ணெய்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் நாட்டு மரச்செக்கு கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை “அதரா” என்ற பெயரில் வணிகம் செய்யப்பட உள்ளது.

See also  போலீஸ் துரத்திய வாலிபர் பிணமாக கிடந்தார்

இதற்காக திருவண்ணாமலை அடுத்த அவலூர்பேட்டை ரோட்டில் உள்ள தெள்ளானந்தல் கிராமத்தில் மணிலா மரச்செக்கு சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஊக்குவிப்பு மையம் மற்றும் நவீன சிப்பம் கட்டும் அலகு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

ரூ.3 கோடியே 20 லட்சம்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையால் திருவண்ணாமலை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புக்காக ரூ.3 கோடியே 20 லட்சம் செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் (collector) பா.முருகேஷ் இன்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருக்கு மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் மு.வே.சந்திரசேகர், தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் உதவி பொறியாளர் வடிவேல் ஆகியோர் கட்டிடம் கட்டப்பட்டதற்கான செலவு விவரங்களை கூறினர்.

எப்படி ரூ.3 ஆயிரம் ஆனது?

அப்போது கட்டிடம் கட்டுவதற்கு 1 சதுர அடிக்கு ரூ.3 ஆயிரம் செலவிடப்பட்டள்ளதை கண்டறிந்த கலெக்டர் முருகேஷ், இயந்திரங்கள் வாங்குவதற்கு திட்ட மதிப்பீடு வாங்காமலேயே எப்படி பணத்தை செலவு செய்தீர்கள்? குறைந்த மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் 1 சதுர அடிக்கு ரூ.2ஆயிரத்து 200தான் ஆகும். சுமாரான கட்டிடம் என்றால் ரூ.2ஆயிரத்து 500 ஆகலாம். ஆடம்பரமாக கட்டினால் ரூ.3 ஆயிரம் ஆகும்.

See also  ஹைவே-பிடபிள்யூடி சொத்தை வைத்து நாட்டுக்கு கடன்

ஆனால் இந்த தகர ஷீட் போட்ட கட்டிடத்திற்கு 1 சதுர அடிக்கு எப்படி ரூ.3 ஆயிரம் ஆனது? என அதிகாரியிடம் கேள்வி கேட்டார்.

Rs.3 thousand per square foot to build a tin sheet building? The collector was stunned

திணறல், அதிர்ச்சி

இதற்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரி திணறினார். அடுத்து கலெக்டர் என்ன சொல்ல போகிறாரோ? என அருகிலிருந்த ஒப்பந்தக்காரர் அதிர்ச்சியுடன் நின்றிருந்தார். கட்டிடத்திற்கு வெளியே ரோடு போட வேண்டியிருக்கிறது என அதிகாரி சொன்னார். அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் (collector) என்ன மார்பிளை கொண்ட ரோடா போட போகீறீர்கள், தார் ரோடுதானே போட போகீறீர்கள்? என காட்டமாக கேட்டார்.

கதவுகள் ஜெயில் கதவுகள் மாதிரி இருக்கிறது. மொத்தத்தில் கட்டிடமே சப்பையாக உள்ளது. இந்த கட்டிடத்திற்கு அதிகமாக செலவிட்டுள்ள பணத்தை இயந்திரத்துக்கு முதலீடு செய்திருக்கலாம். மக்களின் வாழ்வாதாரம் முன்னேற பணத்தை சேமித்து ஏதாவது செய்யலாமா? என நினைக்கிறோம்.

குட்டிச்சுவராக்கிட்டீங்க…

நானே பார்த்து பார்த்து கட்டியிருக்கலாம். உங்களை நம்பி விட்டேன் பாருங்க. உங்களுக்கு (வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை) ஒப்பந்தம் கொடுத்திருக்க கூடாது, குட்டிச்சுவராக்கிட்டீங்களே என அதிகாரிகளிடம் கலெக்டர் சீறினார்.

See also  திருவண்ணாமலை மாநகராட்சி ஆனதால் என்ன பயன்?

இந்த ஆலைக்கான இயந்திரங்களை கொள்முதல் செய்திட திட்ட மதிப்பீடு தயாரிக்காமல் பணத்தை இஷ்டத்திற்கும் செலவு செய்திருப்பது கலெக்டர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!