Homeஆன்மீகம்அண்ணாமலையார் கோயிலில் நெல்லி மரத்துக்கு பெண்கள் பூஜை

அண்ணாமலையார் கோயிலில் நெல்லி மரத்துக்கு பெண்கள் பூஜை

அண்ணாமலையார் கோயிலில் உள்ள நெல்லி மரத்திற்கு தாலி பாக்கியத்திற்காக ஏராளமான பெண்கள் ரவிக்கை துணி அணிவித்து பூஜை செய்தனர்.

சோமவார விரதத்தின் மகிமை

நலச்சக்கரவர்த்தியின் பேரன் சந்திராங்கதன். அவருடைய மனைவி சீமந்தனி. சீமந்தனிக்கு மாங்கல்ல பலம் இல்லை என ஜோதிடர்கள் கூறிவிட்டதால் அவர் கவலையடைந்தார். அந்த சமயத்தில் ஒரு முனிவரை சந்தித்தார்.

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய சோமவார விரதம் சிவபெருமானுடைய மிக முக்கியமான ஒரு விரதம். இந்த நாளில் விரதம் இருந்தால் கண்டிப்பாக மாங்கல்ய பலம் மட்டுமல்லாது நினைத்தது அனைத்தும் நிறைவேறும் என அந்த முனிவர் கூறினார்.

விரதத்திற்கு பலன்

விரதமுறையை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்ட சீமந்தனி மிக பயபக்தியோடு சிவபெருமானை வணங்கி இந்த விரதத்தை ஆரம்பித்தார். கார்த்திகை மாத திங்கட்கிழமையில் வரக்கூடிய சோமவார விரதம் தொடர்ந்து இருந்து கொண்டே வந்தார்.

இந்த விரதத்திற்கு பலன் கிடைத்து கணவனின் ஆயுளை காப்பாற்றினார் சீமந்தினி என்பது வரலாறு.

அதனால்தான் கார்த்திகை மாதம் வரக்கூடிய சோமவார விரதம் முக்கியத்துவம் பெருகிறது. அந்த நாளில் மகாலட்சுமி வாசம் செய்யும் நெல்லி மரத்திற்கு பூஜைகள் செய்தால் கணவனின் ஆயுள் கூடும் என்பது பெண்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அண்ணாமலையார் கோயிலில் நெல்லி மரத்துக்கு பெண்கள் பூஜை

அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள 5வது பிரகாரத்தில் (திட்டி வாசல் அருகில்) நெல்லி மரம் உள்ளது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமையான இன்று சோமவார விரதம் இருந்த பெண்கள் ஏராளமானோர் அந்த நெல்லி மரத்திற்கு பூஜை செய்தனர்.

நெல்லி மரத்திற்கு மஞ்சள் பூசியும், குங்குமபொட்டுகள் வைத்தும், ரவிக்கை துணியை அணிவித்தும், தேங்காய் உடைத்தும், தீபம் ஏற்றியும் பெண்கள் வழிபாடு செய்தனர். பின்னர் தங்களது வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த இனிப்பு மற்றும் கலவை சாதங்களை வைத்து படையல் இட்டு அன்னதானம் வழங்கினர்.

அண்ணாமலையார் கோயிலில் நெல்லி மரத்துக்கு பெண்கள் பூஜை

கார்த்திகை மாத பிரதோஷம்

இதே போல் கார்த்திகை மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்திக்கு மஞ்சள் பால் தயிர் சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்திபகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதேபோல் அண்ணாமலையார் கோயிலில் அமைந்துள்ள மற்ற நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. மேலும் கிரிவலப் பாதையிலுள்ள நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!