Homeசெய்திகள்3 நாள் பொறுத்துக்கங்க-நகர மக்களுக்கு வேலு வைத்த வேண்டுகோள்

3 நாள் பொறுத்துக்கங்க-நகர மக்களுக்கு வேலு வைத்த வேண்டுகோள்

3 நாள் குறைபாடுகளை பொறுத்து கொள்ளும்படி திருவண்ணாமலை மக்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

திருக்கார்த்திகை தீப திருவிழாவில் 6-ம் தேதி அன்று 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் வெளிநாடுகளிலிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ளார்கள்.

ஆன்மிக பெருமக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் கார்த்திகை தீபத்திருவிழாவை சிறப்பாக நடத்திட முதலமைச்சர் உத்திரவிட்டிருக்கிறார்.

3 நாள் பொறுத்துக்கங்க-நகர மக்களுக்கு வேலு வைத்த வேண்டுகோள்

பல்வேறு மாநிலங்களில் இருந்து நாடுகளில் இருந்து மாவட்டங்களிலிருந்து ஊர்களில் இருந்து திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திற்கு வருகின்றனர்.அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாக உள்ளது.

3 நாள் பொறுத்துக்கங்க…

சில நேரங்களில், சில தெருக்களில் காவல்துறையினர், இந்த பகுதிக்கு போகக்கூடாது, அந்த பகுதிக்கு போகக்கூடாது என்ன சொல்வதை பொருட்படுத்தாமல் நம் ஊருக்கு பெருமை சேர்க்கிற விழாவிற்கு அவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள் என்று அவர்களெல்லாம் வரவேற்று உபசரிக்க வேண்டுமே தவிர நமது குறைபாடை பற்றி நினைக்க கூடாது.

இந்த மூன்று தினங்களுக்கு குறைபாடு இருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என வாக்காள பெருமக்களுக்கும், திருவண்ணாமலை நகர மக்களுக்கும் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி கார்த்திகை தீபத் திருவிழாவை சிறப்பாக நடத்தி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

சிறு சிறு குறைகளை இரண்டு தினங்களுக்குள் நாங்கள் நிவர்த்தி செய்து விடுவோம். அண்ணாமலையார் கோயிலில் இருந்து 300 மீட்டருக்குள் இருசக்கர வாகனங்களையோ, கார்களையோ, லாரிகளையோ, பேருந்துகளையோ அனுமதிக்க கூடாது என்ற மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை தொடர்ந்து காவல்துறையை நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டமன்ற துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!