Homeஅரசு அறிவிப்புகள்தீபத்திருவிழாவிற்கு சிறப்பு ரயில் உள்பட 63 ரயில்கள்

தீபத்திருவிழாவிற்கு சிறப்பு ரயில் உள்பட 63 ரயில்கள்

தீபத்திருவிழாவிற்கு திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் பல்வேறு வாகனங்களில் சாமி ஊர்வலம் மாடவீதியில் நடைபெற்று வருகிறது.

2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.

தீபத்திருவிழாவிற்கு திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

தீபத்திருவிழாவிற்கு சிறப்பு ரயில் உள்பட 63 ரயில்கள்

சென்னை கடற்கரை

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தென்னக ரயில்வே சார்பில் 5.12.2022 முதல் 8.12.2022 வரை 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

5.12.2022 முதல் 8.12.2022 ஆகிய 4 தினங்களில் சென்னை கடற்கரை (புறப்படும் நேரம் 18.00 மணி) முதல் திருவண்ணாமலை (சென்றடையும் நேரம் 00.05) வரை மற்றும் திருவண்ணாமலை (புறப்படும் நேரம் 03.45) முதல் சென்னை கடற்கரை (சென்றடையும் நேரம் 09.05) வரை வேலூர்கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளுர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

See also  ஊரக புத்தாக்க திட்டத்தில் ரூ.25ஆயிரம் சம்பளத்தில் வேலை

தீபத்திருவிழாவிற்கு சிறப்பு ரயில் உள்பட 63 ரயில்கள்

புதுச்சேரி

5.12.2022 முதல் 8.12.2022 ஆகிய 4 தினங்களில் புதுச்சேரி (புறப்படும் நேரம் 19.45(7-45) மணி) முதல் திருவண்ணாமலை (சென்றடையும் நேரம் 22.30(10-30)) வரை மற்றும் திருவண்ணாமலை (புறப்படும் நேரம் – 03.30) முதல் புதுச்சேரி (சென்றடையும் நேரம் – 06.20) வரை விழுப்புரம் இணைப்பு, வெங்கடேசபுரம், மாம்பழம்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

தீபத்திருவிழாவிற்கு சிறப்பு ரயில் உள்பட 63 ரயில்கள்

மயிலாடுதுறை

6.12.2022 மற்றும் 7.12.2022 ஆகிய 2 தினங்களில் மயிலாடுதுறை (புறப்படும் நேரம் 06.00 மணி) முதல் திருவண்ணாமலை (சென்றடையும் நேரம் – 10.55) வரை மற்றும் திருவண்ணாமலை (புறப்படும் நேரம் 12.40) முதல் மயிலாடுதுறை (சென்றடையும் நேரம் 17.40(5-40)) வரை விழுப்புரம் இணைப்பு, வெங்கடேசபுரம், மாம்பழம்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

தீபத்திருவிழாவிற்கு சிறப்பு ரயில் உள்பட 63 ரயில்கள்

திருச்சிராப்பள்ளி

6.12.2022 மற்றும் 7.12.2022 ஆகிய 2 தினங்களில் திருச்சிராப்பள்ளி (புறப்படும் நேரம் 15.45 மணி(3-45)) முதல் வேலூர் (சென்றடையும் நேரம் 00.40) வரை மற்றும் வேலூர் (புறப்படும் நேரம் – 01.30) முதல் திருச்சிராப்பள்ளி (சென்றடையும் நேரம் 10.45) வரை திருப்பாத்திரிபுலியூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம் இணைப்பு, வெங்கடேசபுரம், மாம்பழம்பட்டு, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளுர், ஆரணி வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

See also  சேல்ஸ்மேன் பதவிக்கு 12ந் தேதி முதல் நேர்காணல்

தீபத்திருவிழாவிற்கு சிறப்பு ரயில் உள்பட 63 ரயில்கள்

தாம்பரம்

6.12.2022 மற்றும் 7.12.2022 ஆகிய 2 தினங்களில் தாம்பரம் (புறப்படும் நேரம் 08.40 மணி) முதல் திருவண்ணாமலை (சென்றடையும் நேரம் 12.15) வரை மற்றும் திருவண்ணாமலை (புறப்படும் நேரம் – 13.45(1-45)) முதல் தாம்பரம் (சென்றடையும் நேரம் -17.30(5-30)) வரை செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

பக்தர்கள் மற்றும் பொது மக்கள் இந்த ரயில் சேவைகளை உபயோகப்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!