Homeசெய்திகள்ரூ.1 கோடியில் பொலிவு பெற்ற பாண்டேஸ்வரர் கோயில்

ரூ.1 கோடியில் பொலிவு பெற்ற பாண்டேஸ்வரர் கோயில்

ரூ.1 கோடியில் புனரமைக்கப்பட்ட சனி தோஷம் நீங்கச் செய்யும் ஸ்ரீபாண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப் பாதை அக்னி லிங்கத்திற்கு பின்புறம்  மலையடிவாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க கண்கவர் கலைநயத்துடன் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய சிவன் கோயில் அமைந்துள்ளது.

அஷ்டம சனி தோஷம் நீங்க பூஜை

இங்கு சிவபெருமான் பாண்டவனேஸ்வரராக அருள்பாலித்து வருகிறார். இவரை பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது ஏற்பட்ட அஷ்டம சனி எனும் தோஷம் நீங்க இங்கு தங்கி லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்து தோஷம் நீங்கப் பெற்றதால் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் இங்கு வந்து பாண்டவ தீர்த்தத்தில் நீராடி நல்லெண்ணை மற்றும் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

ரூ.1 கோடியில் பொலிவு பெற்ற பாண்டீஸ்வரர் கோயில்

இக்கோயிலுக்கு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம், மங்கள இசை, குரு வந்தனம், கிராம வேதா பிரார்த்தனை, விநாயகா அபிஷேகம், முதல் யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி, சாந்தி ஓமம், தம்பதி பூஜை, இரண்டாம் யாககால பூஜை 108 கலச அபிஷேகம் உள்ளிட்டவைகள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

See also  14 பேருக்கு பூமிதான வாரியத்தின் நிலம் தானம்-கலெக்டர் வழங்கினார்

அதனைத் தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று ஸ்ரீ பாண்டேஸ்வரர் ஆலய கோபுர உச்சியில் கலச புனித நீர் ஊற்றப்பட்டது. பின்பு ஸ்ரீ பாண்டேஸ்வரர் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. அதன் பிறகு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆணாய்பிறந்தான் ஊராட்சி மன்ற தலைவர் கே.தர்மராஜ், திருவண்ணாமலை நகரமன்ற 25வது வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி பழனி, சேஷாத்திரி ஆசிரமத்தின் நிர்வாகி லாயர் சந்திரமோகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயில் வருமானமின்றி இருந்ததால் இந்து சமய அறநிலையத்துறையின் பார்வை படாமல் இருந்து வந்தது. இதையடுத்து சில சிவபக்தர்கள் சேர்ந்து ஒரு கால பூஜையை நடத்தி வந்தனர். குறிப்பாக சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

ரூ.1 கோடியில் புனரமைப்பு

இந்நிலையில் இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என பல வருடங்களாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அந்த கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. 26வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ் எடுத்த முயற்சியின் காரணமாக பாண்டவர்கள் வழிபட்ட கோயில் கும்பாபிஷேகத்தை கண்டுள்ளது.

See also  ஏடிஎம் கொள்ளை- விமானத்தில் தப்பியவர்கள் சிக்கினர்

ரூ.1 கோடியில் பொலிவு பெற்ற பாண்டீஸ்வரர் கோயில்

இதற்கு ஆன மொத்த செலவையும் ரமணாஸ்ரமம் ஏற்றது. கும்பாபிஷேகத்திற்கு ஏறக்குறைய ரூ.1 கோடி செலவானதாக கூறப்படுகிறது. கோயிலுக்கு செல்ல அகலமான சிமெண்ட் சாலை, படிகள், குளங்களை சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் என ஆச்சரியப்படும் வகையில் கோயில் பொலிவு பெற்றுள்ளது.

இதற்காக ரமணாஸ்ரமத்திற்கும், நகரமன்ற உறுப்பினர் பிரகாஷிற்கும் அப்பகுதி மக்களும், பக்தர்களும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ் கூறியதாவது,

ரூ.1 கோடியில் பொலிவு பெற்ற பாண்டேஸ்வரர் கோயில்
பிரகாஷ், நகரமன்ற உறுப்பினர்.

இந்த கோயிலுக்கு வந்து பார்த்த போது இப்பகுதி சுத்தமில்லாமலும், மது அருந்தும் இடமாகவும் இருப்பதை பார்த்து வேதனை அடைந்தேன். பழமை வாய்ந்த கோயில் பாழ் பட்டு கிடந்தது. எனவே இக்கோயிலை சீரமைக்க கடந்த 5,6 வருடங்களாக முயற்சி எடுத்து வந்தேன்.

பழமை மாறாமல் புனரமைப்பு

இந்த கோயிலை சீரமைத்தால் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும், இந்த இடம் புனிதமாக மாறி விடும், அண்ணாமலையார் வந்து போவதற்கும் வழிவகை ஏற்படும் என ரமணாஸ்ரம நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். உடனே அவர்கள் இசைவு தெரிவித்து பழமை மாறாமல் இக்கோயிலை புனரமைத்து கொடுத்தனர். இதற்காக இப்பகுதி மக்களின் சார்பாகவும், பக்தர்களின் சார்பாகவும் ரமணாஸ்ரமத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

See also  அம்மணி அம்மன் மடம் இடிப்பு-வம்சாவழியினர் கண்ணீர்

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கு பஞ்ச பாண்டவர்கள் தீர்த்தம் ஏற்படுத்தி, அதில் மூழ்கி எழுந்து லோக பாலகர்கள் பதவியை பெற்று சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்து இருக்கிறார்கள். அதே போல் பூமாதேவியும் இங்கு வந்திருக்கிறார்.

மீண்டும் மண்டகபடி நடத்த கோரிக்கை

திருவூடல் உற்சவம் முடிந்து பிருங்கி மகரிஷிக்கு காட்சியளிக்க அண்ணாமலையார் கிரிவலம் செல்வார். அப்போது பாண்டேஸ்வரர் கோயிலுக்கு வந்து மண்டகப்படி நடந்து, அபிஷேக, ஆராதனைகளை ஏற்றுக் கொள்வார். மலையடிவாரத்தில் இருந்ததனால் கோயில் பாழடைந்து வழிகள் அடைபட்டு விட்டதால் அண்ணாமலையார் வர இயலவில்லை.

எனவே மீண்டும் இங்கு அண்ணாமலையார் மண்டகப்படி நடத்திட ஏற்பாடு செய்திட வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

கோயிலுக்கு செல்ல வழி கிடைத்தது போல, அண்ணாமலையார் வருவதற்கும் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

-செந்தில் அருணாசலம்

தொடர்புடைய செய்தி…

சனி பாதிப்பை நீக்கும் பாண்டவர்கள் வழிபட்ட கோயில்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!